உரிமை ஊஞ்சலாடுகிறது
உரிமை ஊஞ்சலாடுகிறது | |
---|---|
இயக்கம் | விசு |
தயாரிப்பு | ஏ. பூர்ணசந்திர ராவ் |
கதை | விசு |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | என். பாலகிருஷ்ணன் |
படத்தொகுப்பு | கணேஷ் குமார் |
கலையகம் | இலட்சுமி புரொடக்சன்சு |
வெளியீடு | 1992 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உரிமை ஊஞ்சலாடுகிறது (Urimai Oonjaladugiradhu) 1992ஆம் ஆண்டில் விசு இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] ரமேஷ் அரவிந்த், கஸ்தூரி, ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திரங்களிலும் நடித்திருந்தனர். சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[2]
கதை
அண்ணன் (மேஜர் சுந்தரராஜன் தம்பி சண்முகம் விசு என இருவர் உள்ளனர். தம்பி அண்ணன் மீது மிகுந்த மரியைதை கொண்டவர். மனைவியை இழந்த அண்ணனின் மகளான உமாவை (கஸ்தூரி) சண்முகமும் அவரது மனைவி வடிவும் (வடிவுக்கரசி) தங்களது மகளாகவே வளர்த்து வருகிறனர் அவருக்கு மேலும் ஒரு மாலா என்ற பெண்ணும், நாராயணன் என்ற (விவேக் மகனும் உண்டு. அண்ணன் தம்பி என இருவருக்கும் காதல் என்றாலே பிடிக்காது. திருமண தரகரை கிஷ்மு காதலித்த தங்கள் தங்கையை வீட்டைவிட்டு வெளியே அனுப்பி அவளுடன் ஒட்டு உறவு இல்லாமல் வாழ்ந்துவருபவர்கள்.
வேலைக்கு செல்லும் இடத்தில் உமாவும் அங்கு மேலாலராக உள்ள ஜேம்சும் (ரமேஷ் அரவிந்த்) காதலிக்கின்றனர். என்ன ஆனாலும் பெற்றோரின் சம்மதத்துடனே இருவரும் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்கின்றனர். இந்திலையில் உமாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்கின்றனர். அப்போது தன் காதல் விவகாரத்தை அவர்களிடம் உமா கூறுகிறாள். அவளது காதலை ஏற்று அவளுக்கு திருமணம் செய்விக்க மறுத்த அவளது குடும்பத்தார். அவளுக்கு பதில் அவளது தங்கை மாலாவுக்கு திருமண ஏற்பாடு செய்கின்றனர்.
மாலாவுக்கு பார்த்த மாப்பிள்ளை வீட்டில் தங்களுக்கு திருமணமாகாத முத்த மகள் இருப்பதைக் கூறாமல் மறைத்து திருமணத்தை பேசி முடிக்கின்றனர். இதற்கிடையில் நாராயணன் ஒரு பணக்கார வீட்டுப் பெண்ணை காதலிக்கிறான். அவன் தன் குடுபத்துக்கு காதல் மீது உள்ள வெறுப்பை தான் காதலிக்கும் பெண்ணிடப் கூறுகின்றான். அவள் தன் காதல் விவகாரத்தையும் நாராயணனின் வீட்டு நிலையையும் அவளது பெற்றோருக்கு விளக்குகிறாள். தன் மகளின் மகிழ்ச்சியே முக்கியம் என்று கருதும் அவளது பெற்றோர் காதல் திருமணத்தை தரகர் கிஷ்மு மூலமாக பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்யத திருமணமாக மாற்றுகிறார்கள்.
இந்த இரு ஜோடிகளுக்கும் ஒரே நாளில் ஒரே மண்டபத்தில் நடந்து முடிகிறது. மூத்த மகள் இருப்பதை மறைத்து திருமணம் முடிக்கபட்டதையும், காதல் திருமணத்தை பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணமாகவும் மாற்றி திருமணம் முடிக்கபட்டதையும் தரகர் கிஷ்மு திருமண வீட்டாரிடம் சொல்லி குழப்பத்தை உண்டாக்குகிறார். இதனால் ஏற்பட்ட சச்சரவுகளினால் நாராயணனை அழைத்துக் கொண்டு மணமகள் வீட்டார் தங்கள் வீட்டுக்கு சென்று விடுகின்றனர். அதேபோல திருமணமாகாத அக்கள் இருப்பதை மறைத்து தங்கையை திருமணம் செய்வித்ததை குற்றமாக கருதி தங்களு மகன் மருமகளுடன் கோபித்துக்கொண்டு தங்கள் வீட்டுக்கப் புறப்படுகின்றனர்.
ஒரு கட்டத்தில் நாராயணனும், மாலாவும் பெற்றோரின் வீட்டுக்கு வந்துவிடுகின்றனர். அவர்கள் மீண்டும் தங்கள் இணையருடன் ஒன்று சேர்ந்தார்களா உமாவுக்கு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடந்ததா என்பதே கதையின் முடிவு.
நடிகர்கள்
- ரமேஷ் அரவிந்த் ஜேம்சாக[3]
- மேஜர் சுந்தரராஜன் சண்முகத்தின் அண்ணனாக[3]
- கிஷ்மு கமலநாதனாக[3]
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- விவேக் நாராயணனாக
- குட்டி பத்மினி
- இளவரசன்
- கஸ்தூரி உமாவாக[3]
- வாணி மீனாவாக
- வந்தனா
- வடிவுக்கரசி வடிவாக[3]
- சங்கீதா கோமதியாக
- இராமபிரபா
- விசு சண்மகமாக[3]
மேற்கோள்கள்
- ↑ "gomolo.com". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-10-18.
- ↑ Spicyonion.com
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Prasad, Ayyappa (14 August 1992). "Family tangle". இந்தியன் எக்சுபிரசு: p. 7. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19920814&printsec=frontpage&hl=en.