கஸ்தூரி (நடிகை)
கஸ்தூரி | |
---|---|
பிறப்பு | 1 மே 1974 சென்னை, தமிழ்நாடு |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை, வடிவழகி |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | ரவிக்குமார் |
கஸ்தூரி (பிறப்பு: மே 1, 1974) என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 1992 'மிஸ் மெட்ராஸ்' அழகிப் போட்டியில் வென்றுள்ளார். 1991 ஆம் ஆண்டு முதல் ஆத்தா உன் கோயிலிலே, ராசாத்தி வரும் நாள் (1991), சின்னவர் (1992), செந்தமிழ்ப் பாட்டு (1992), அமைதிப்படை (1994) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மற்றும் 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
கஸ்தூரி மே 1, 1974 ஆம் ஆண்டு சென்னையில் தமிழ்நாட்டில் பிறந்தார். இவர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளைப் சென்னையில் படித்து முடித்தார். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றார்.[1] இவருக்கு ரவிக்குமார் என்ற கணவரும் மற்றும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது கணவர் அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரிகிறார்.[2]
திரைப்படம் வாழ்க்கை
இவர் 1991 ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரி ராஜா என்பவர் இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து அதே ஆண்டு 'சக்ரவர்த்தி' என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைப்படத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து சின்னவர் (1992), செந்தமிழ்ப் பாட்டு (1992), புதிய முகம் (1993), அமைதிப்படை (1994), அன்னமய்யா (1997) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஒரு தென்னிந்திய நடிகை என்னும் 30 நிமிட குறும்படத்தினை கஸ்தூரி குறித்து ரிச்சர்டு பிரேயரும் என்.சி ராஜாமணி இயக்கியுள்ளனர்.[3][4] கஸ்தூரி சிறிது காலம் திரைத்துறையிலிருந்து விலகியிருந்தாலும் 'தி பைபாஸ்' என்னும் இந்தி குறும்படத்திலும், 2010 இல் தமிழ் படத்தின் வாயிலாகம் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.[5]
நடித்த படங்கள்
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1991 | ஆத்தா உன் கோயிலிலே | கஸ்தூரி | தமிழ் | |
சக்கரவர்த்தி | பிரசீதா | மலையாளம் | ||
ராசாத்தி வரும் நாள் | இராதா | தமிழ் | ||
1992 | சின்னவர் | மீனா | ||
செந்தமிழ்ப் பாட்டு | சண்மதி | |||
உரிமை ஊஞ்சலாடுகிறது | உமா | நிந்து சம்சாரம் (தெலுங்கு) | ||
அபிராமி | தனம் | |||
கவர்மெண்ட் மாப்பிள்ளை | மல்லரியா | |||
கேங் வார் | தெலுங்கு | |||
காட் பாதர் | ||||
1993 | ஆத்மா | தமிழ் | ||
ராக்காயி கோயில் | ||||
பாஸ் மார் | ||||
புதிய முகம் | மதிப்புறுத்தோற்றம் | |||
நிப்பு ரவ்வா | பாரதி | தெலுங்கு | ||
உடன் பிறப்பு | சுமதி | தமிழ் | ||
எங்க முதலாளி | கல்யாணி | |||
1994 | அமைதிப்படை | தாயம்மா | ||
தென்றல் வரும் தெரு | நளினி | |||
ஜானா | கஸ்தூரி | கன்னடம் | ||
ராஜபாண்டி | பொன்னுத்தாயி | தமிழ் | ||
ஆகாயப்பூக்கள் | ||||
வாட்ச்மேன் வடிவேல் | ||||
1995 | அனியன் பவா சேட்டன் பவா | அம்மு | மலையாளம் | |
சிந்துபாத் | தமிழ் | தெலுங்கில் கஜூல ராமையா | ||
சின்னமணி | சின்னமணி | |||
கோலங்கள் | உமா | |||
அகரஜன் | சிறீதேவி | மலையாளம் | ||
ரோதோல்சவம் | ||||
1996 | இப்பர நடுவே முடின்னா ஆட்டா | கன்னடம் | ||
இந்தியன் | கஸ்தூரி | தமிழ் | ||
கிருஷ்ணா | ||||
சோக்கடி பெல்லம் | தெலுங்கு | |||
மெருப்பு | பிரேமா | |||
1997 | சில்லோகொட்டுது | கஸ்தூரி | ||
அன்னமய்யா | அக்கலம்மா | |||
மா ஆயன பங்காரம் | ||||
1998 | மாங்கல்ய பல்லக்கு | சீதாலக்சுமி | மலையாளம் | |
துட்டா முட்டா | டாக்டர் சீமா | கன்னடம் | ||
ஒன் மேன் ஆர்மி | ||||
சினேகம் | இராதிகா | மலையாளம் | ||
காதல் கவிதை | கஸ்தூரி | தமிழ் | ||
1999 | சுயம்வரம் | உமா | ||
ஹப்பா | கன்னடம் | |||
லேடிஸ் ஸ்பெசல் | தமிழ் | |||
பஞ்சபாண்டவர் | நந்தினி | மலையாளம் | ||
2001 | ஆகாச வீதிலோ | பத்மா | தெலுங்கு | |
தோஸ்த் | தமிழ் | சிறப்புத்தோற்றம் | ||
எங்களுக்கும் காலம் வரும் | பூஜா | |||
பிரேமக்கே சாய் | வேதா | கன்னடம் | ||
2002 | மச்சக்கன்னி | தமிழ் | ||
2002 | அதீனா | |||
2003 | தி பைபாஸ் | வுமன் இன் ஜீப் | இந்தி | குறும்படம் |
2009 | மலை மலை | இலக்சுமி | தமிழ் | |
2010 | தமிழ் படம் | சிறப்புத்தோற்றம் | ||
குடு குடு குஞ்சம் | பல்லீசுவரி | தெலுங்கு | ||
டான் சீனு | இலக்சுமி | |||
2011 | பதினாறு | இளவரசி | தமிழ் | மதிப்புறுத்தோற்றம் |
தூங்கா நகரம் | சிறப்புத்தோற்றம் | |||
2012 | நாங்க | |||
2013 | அழகன் அழகி | சிறப்புத்தோற்றம் | ||
நான் ராஜாவாகப் போகிறேன் | பாரதி | |||
2014 | வடகறி | சதீசின் உறவுப்பெண் | ||
நான் பொண்ணு ஒன்று கண்டேன் | சிறப்புத்தோற்றம் | |||
காதல் 2 கல்யாணம் | ||||
2017 | அன்பானவன் அசராதவன் அடங்காதவன் | முகவர் ரூபி | தமிழ் | |
சாமந்தகாமனி | கிருஷ்ணாவின் தாய் | தெலுங்கு | ||
2018 | டிராஃபிக் ராமசாமி | தமிழ் | சிறப்பு தோற்றம் | |
தமிழ் படம் 2 | ஒரு பாடலில் மட்டும் | |||
2020 | வெல்வெட் நகரம் | கௌரி | ||
தமிழரசன் |
தொலைக்காட்சி
ஆண்டு | நிகழ்ச்சி | பங்கு | அலைவரிசை | மொழி |
---|---|---|---|---|
இஷ்டதனம் | டிடி மலையாளம் | மலையாளம் | ||
கையளவு மனசு | தமிழ் | |||
2010 | சன் குடும்பம் விருதுகள் 2010 | தொகுப்பாளர் | சன் தொலைக்காட்சி | |
2013-2014 | வினா விடை வேட்டை | தொகுப்பாளர் | புதுயுகம் தொலைக்காட்சி | |
2014 | வினா விடை வேட்டை ஜூனியர்ஸ் | |||
2019 | பிக் பாஸ் தமிழ் 3 | போட்டியாளராக | விஜய் தொலைக்காட்சி | |
2020-ஒளிபரப்பில் | இன்டின்டி க்ருஹலட்சுமி | துளசி | ஸ்டார் மா |
மேற்கோள்கள்
- ↑ https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/casting-couch-in-filmdom-isnt-a-myth-it-does-exist/articleshow/57593669.cms
- ↑ http://www.newfinetamil.com/2017/03/who-is-the-hero-give-tature-to-kasthuri.html?m=1[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Kasthuri: A South Indian Film Star". Film Info (Film makers library). http://www.filmakers.com/index.php?a=filmDetail&filmID=548.
- ↑ The Journal of Asian Studies. Association for Asian Studies. 1995. பக். 915.
- ↑ "Kasthuri is back with Noothukku Nooru!". சிஃபி. http://sify.com/movies/tamil/fullstory.php?id=14824122. பார்த்த நாள்: 2008-12-23.
வெளி இணைப்புகள்
- 1974 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- சென்னை நடிகைகள்
- தமிழ்நாட்டு வடிவழகிகள்
- தமிழ்த் திரைப்பட நடிகைகள்
- தெலுங்குத் திரைப்பட நடிகைகள்
- மலையாளத் திரைப்பட நடிகைகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்
- கன்னடத் திரைப்பட நடிகைகள்
- 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
- தமிழ்த் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்
- தமிழ்நாட்டு தொலைக்காட்சி பிரமுகர்கள்
- பிக் பாஸ் தமிழ் போட்டியாளர்கள்
- தெலுங்கு தொலைக்காட்சி நடிகைகள்