காதல் கவிதை
காதல் கவிதை | |
---|---|
இயக்கம் | அகத்தியன் (திரைப்பட இயக்குநர்) |
தயாரிப்பு | முரளி மனோகர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | பிரசாந்த் இஷா கோப்பிகர் கஸ்தூரி (நடிகை) |
ஒளிப்பதிவு | ரவி யாதவ் |
படத்தொகுப்பு | லான்சி மோகன் |
கலையகம் | மெட்ரோ பிலிம் |
வெளியீடு | திசம்பர் 25, 1998 |
ஓட்டம் | 145 நிமிடங்கள். |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காதல் கவிதை (Kadhal Kavithai) 1998இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை அகத்தியன் இயக்கியுள்ளார். பிரசாந்த், இஷா கோப்பிகர்கஸ்தூரி, மணிவண்ணன், ஸ்ரீவித்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
1998 திசம்பர் 25 அன்று வெளியான இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று, வணிக ரீதியாக வெற்றியும் பெற்றது.[1]
நடிகர்கள்
- பிரசாந்த் - விஸ்வா
- இஷா கோப்பிகர் - சோதி
- கஸ்தூரி
- மணிவண்ணன்
- ராஜீவ்
- அம்பிகா
- ஸ்ரீவித்யா
- சார்லி
- நிகிதா ஆர்யா - சோபா
- தலைவாசல் விஜய் - பாண்டியன்
- கரண்- கௌரவத் தோற்றம்
- ராஜூ சுந்தரம் - கௌரவத் தோற்றம்
- ரோஜா - கௌரவத் தோற்றம்
கதைச்சுருக்கம்
விஷ்வா (பிரசாந்த்) தன் நண்பன் ஆனந்தத்துடன் (சார்லி) நேரத்தை கழிக்கிறான். தன் தந்தையுடன் எப்பொழுதும் சண்டையிடும் தாயை தவிர்த்துவருகிறான். அந்நிலையில், ஜோதியை (இஷா கோபிக்கர்) விஷ்வா சந்திக்க நேரிடுகிறது. பின்னர், இலண்டன் செல்லும் விஷ்வா, இளவரசி டயானா கல்லறையில் மிக அருமையான காதல் கவிதை ஒன்றை விட்டுச்செல்கிறான். அதே நேரம், அந்தக் கல்லறைக்கு வரும் ஜோதி, அந்த காதல் கவிதையை படிக்கிறாள். அதை எழுதிய நபரை சந்திக்க ஆசைபாடுகிறாள் ஜோதி. ஜோதிக்கும் விஷ்வாவிற்கும் பார்க்காமலே நட்பு மலர்கிறது. விஷ்வா-ஜோதி ஜோடி ஒன்று சேர்ந்ததா என்பதே மீதிக் கதையாகும்.
ஒலிப்பதிவு
படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களின் இசையை அமைத்தவர் இளையராஜா ஆவார். 1998 ல் அதிகமாக விற்பனையான இசைப் பாடல்களாக இப்படத்தின் பாடல்கள் இருந்தன.[2]
பாடல் | பாடகர்(கள்) | காலம் | |
---|---|---|---|
1 | "ஆளான நாள் முதலா" | புஷ்பவனம் குப்புசாமி, சௌமியா | 05:06 |
2 | "ஹேய் கொஞ்சி பேசு" | இளையராஜா, சுஜாதா மோகன் | 05:05 |
3 | "அலை மீது" | பவதாரிணி | 03:04 |
4 | "தெய்னா தெய்னா" | ஹரிஹரன் | 05:11 |
5 | "காதல் மீது" | ஹரிஹரன் | 05:08 |
6 | "மனச தொட்ட காதல்" | ஹரிஹரன் | 04:37 |
7 | "ததோம்" | இலா அருண், சுவர்ணலதா | 04:59 |
தயாரிப்பு
1998 இல் ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் வெற்றிக்கு பின்னர், அகத்தியன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் படம் ஒன்றை தயாரிக்க ஒப்புக்கொண்டார் அசோக் அம்ரிதராஜ்.[3][4] அதிசயம் என்ற பெயருடன், தமிழ் நாட்டில் படப்பிடிப்பு 1998 இல் துவங்கியது.[5] தனது முந்தய படைப்பின் (காதல் கோட்டை) நினைவாக, இப்படத்திற்கு காதல் கவிதை என்று பெயர் மாற்றம் செய்தார் அகத்தியன்.[6]
கஸ்தூரி இடம் பெரும் பாட்டு ஒன்றிக்கு நடனம் அமைத்தார் ராஜூ சுந்தரம்.[3] இலண்டனில் இளவரசி டயானா நினைவிடம் இருக்கும் இடத்தில், படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டன.[7][8]
வெளியீடு
இப்படத்தில் இஷா கோபிகரின் நடிப்பை பார்த்து, நெஞ்சினிலே படத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.[9] 1998 இல் சிறந்த அறிமுக நடிகை என்ற பிலிம்பேர் விருதையும் பெற்றார்.[10]
விமர்சனம்
கதாபாத்திரங்களின் கலவையும், வசனங்களும் சிறப்பாக இயக்குனர் கையாண்டதாகவும், இந்த ஆண்டில் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்றும் விமர்சனம் செய்யப்பட்டது.[11]
மேற்கோள்கள்
- ↑ "http://m.rediff.com".
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "http://www.indolink.com/". Archived from the original on 2016-09-05. பார்க்கப்பட்ட நாள் 2019-01-18.
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ 3.0 3.1 "http://www.rediff.com".
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "http://www.rediff.com".
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "http://www.indolink.com/tamil". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2019-03-27.
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "http://www.cscsarchive.org:8081/".
{{cite web}}
: External link in
(help)[தொடர்பிழந்த இணைப்பு]|title=
- ↑ "http://www.oocities.org/".
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "http://m.rediff.com".
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "http://www.rediff.com".
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "Cscsarchive.org:8081. 1999-04-25". Archived from the original on 2012-03-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-27.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "http://www.indolink.com". Archived from the original on 2006-10-19. பார்க்கப்பட்ட நாள் 2019-03-27.
{{cite web}}
: External link in
(help)|title=