பவதாரிணி
பவதாரிணி | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | பவதாரிணி |
பிறப்பு | மதராசு (தற்போது சென்னை), தமிழ்நாடு, இந்தியா | 23 சூலை 1976
இறப்பு | 25 சனவரி 2024 கொழும்பு, மேற்கு மாகாணம், இலங்கை | (அகவை 47)
தொழில்(கள்) | பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர் |
பவதாரிணி (Bhavatharini, 23 சூலை 1976 – 25 சனவரி 2024) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகியும் இசையமைப்பாளரும் ஆவார்.[1] இவர் இசையமைப்பாளர் இளையராசாவின் மகள் ஆவார்.[2] இவருடைய உடன்பிறப்புகளான கார்த்திக் இராசா, யுவன் சங்கர் இராசா ஆகியோரும் இசையமைப்பாளர்கள் ஆவர்.[3][4]
இளையராசாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.[5]
தொடக்க வாழ்க்கை
மதராசு (தற்போது சென்னை) மாநகரில் 23 சூலை 1976 அன்று பிறந்தார் பவதாரிணி. சென்னையில் ரோசரி மாட்ரிக் பள்ளியிலும், சென்னை ஆதார்சு வித்தியாலயம் என்ற மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார்.
பாடல்கள்
பாடல் | திரைப்படம் | இசையமைப்பாளர் | இணைந்து பாடியவர்கள் |
---|---|---|---|
"என் வீட்டுச் சன்னல்" | இராமன் அத்துல்லா | இளையராசா | அருண்மொழி[6] |
"தாலியே தேவை இல்லை நீ தான்" | தாமிரபரணி | உவன் சங்கர் இராசா | அரிகரன்[7] |
"மயில் போல" | பாரதி | இளையராசா | -[8] |
"மெர்க்குரி பூவே" | புதிய கீதை | யுவன் சங்கர் ராஜா | நிதீசு கோபாலன், போனி சக்கரபோர்த்தி[9] |
பாடகராக
ஆண்டு | திரைப்படம் | பாடல் | மொழி | இசையமைப்பாளர் | உடன் பாடியவர்/கள் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
1984 | மைடியர் குட்டிச்சாத்தான் | தித்தித்தேய் தாளம் | மலையாளம் | இளையராஜா | ||
1990 | அஞ்சலி | சம்திங் சம்திங் | தமிழ் | |||
இரவு நிலவு | ||||||
அஞ்சலி அஞ்சலி | ||||||
வானம் நமக்கு | ||||||
மொட்ட மாடி | ||||||
1995 | ராசய்யா (திரைப்படம்) | மஸ்தானா மஸ்தானா | அருண்மொழி (பாடகர்) & எஸ். என். சுரேந்தர் | பின்னணிப் பாடகராக அறிமுகம் | ||
1996 | இரட்டை ரோஜா (திரைப்படம்) | உன்னை விடமாட்டேன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |||
அலெக்சாண்டர் | கார்த்திக் ராஜா | அனுபமா, மகாநதி சோபனா, யுவன் சங்கர் ராஜா, எஸ். பி. பி. சரண் | ||||
நதியோரம் | பி. உன்னிகிருஷ்ணன் | |||||
எனக்கொரு மகன் பிறப்பான் (1996 திரைப்படம்) | சம் சம் | கார்த்திக் ராஜா | ||||
மாணிக்கம் | சுந்தரரே முழு | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||||
சந்தானம் தேய்ச்சாச்சி | ||||||
1997 | உல்லாசம் | முத்தே முத்தம்மா | ||||
யாரோ யாரோ | ||||||
தேடினேன் வந்தது | ஆல்ப்ஸ் மழைக்காற்று | சிற்பி | ||||
ராமன் அப்துல்லா | என் வீட்டு ஜன்னல் | இளையராஜா | ||||
காதலுக்கு மரியாதை (திரைப்படம்) | என்னைத் தாலாட்ட | ஹரிஹரன் | ||||
ஓ பேபி | விஜய் | |||||
நேருக்கு நேர் | துடிக்கிற காதல் (எவர் கண்டார்) | தேவா | ||||
1998 | நாம் இருவர் நமக்கு இருவர் | நடனகலாராணி | கார்த்திக் ராஜா | |||
காதலா! காதலா! | மடோனா பாடலா | |||||
கிழக்கும் மேற்கும் | அக்கா நீ சிரிச்சா | இளையராஜா | ||||
பூங்காற்றே | ||||||
செந்தூரம் | ஆலமரம் | |||||
கல்யாண கலாட்டா | ஆதாம் ஏவாள் | யுவன் சங்கர் ராஜா | ||||
Kaliyoonjal | Kalyaanappallakkil Velippayyan | மலையாளம் | இளையராஜா | |||
1999 | பொண்ணு வீட்டுக்காரன் | இளைய நிலாவே | தமிழ் | |||
டைம் | தவிக்கிறேன் தவிக்கிறேன் | |||||
மனம் விரும்புதே உன்னை | குட்டிக் குயிலாய் | |||||
2000 | காதல் ரோஜாவே | சிரித்தாலே | ||||
காக்கைச் சிறகினிலே | காயத்ரி கேட்கும் | |||||
Kochu Kochu Santhoshangal | Palappoomazha | மலையாளம் | ||||
பாரதி | மயில் போல பொண்ணு ஒண்ணு | தமிழ் | பின்னணி பாடகிக்கான தேசிய விருது | |||
கருவேலம்பூக்கள் (திரைப்படம்) | பல்லக்கு வந்திருக்கு | |||||
இளையவன் (2000 திரைப்படம்) | நிலவில் அமுது | |||||
2001 | பிரண்ட்ஸ் | தென்றல் வரும் | அரிகரன் | |||
வாஞ்சிநாதன் | Adi Rendu | கார்த்திக் ராஜா | ||||
Hoo Anthiya Uhoo Anthiya | Belli Chandiranu | கன்னடம் | ||||
Usire | Preethisuve Preethisuve | இளையராஜா | ||||
கண்ணா உன்னை தேடுகிறேன் | வஞ்சி கொடி | தமிழ் | ||||
ஆண்டான் அடிமை | என்ன என்ன பாட | |||||
2002 | அழகி | ஒளியிலே தெரிவது | Karthik | |||
தமக்கு தமக்கு தம் | ||||||
என் மன வானில் | முத்து முத்து | |||||
ரமணா | வானம் அதிரவே | |||||
சொல்ல மறந்த கதை | ஏதோ ஒன்னு | |||||
ஆல்பம் | முட்டைக்குள் | கார்த்திக் ராஜா | ||||
2003 | புதிய கீதை | மெர்க்குரி பூவே | யுவன் சங்கர் ராஜா | |||
பிதாமகன் | Kodi Yethi Vaippom | இளையராஜா | ||||
கொஞ்சி பேசலாம் | கொஞ்சி பேசலாம் | |||||
இரகசியமாய் | கண்களும் கண்களும | கார்த்திக் ராஜா | ||||
திரீ ரோசஸ் | அன்பால் உன்னை | |||||
ஓ ஓ செக்சி | ||||||
2004 | விஷ்வதுளசி | விஷ்வதுளசி | ம. சு. விசுவநாதன் | |||
2005 | ஒரு நாள் ஒரு கனவு | காற்றில் வரும் கீதமே | இளையராஜா | |||
கரகாட்டக்காரி | காட்டுக் கிளி | |||||
அது ஒரு கனாக்காலம் | Killi Thattu | |||||
பொன் மேகலை | Aalapanai | |||||
Ponmudipuzhayorathu | Naadaswaram ketto | மலையாளம் | ||||
ரைட்டா தப்பா | Thottuvidu | தமிழ் | கார்த்திக் ராஜா | |||
2006 | அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது | Kanavae Kalaigirathe | யுவன் சங்கர் ராஜா | |||
Elaiyudhir Kaalam | ||||||
தாமிரபரணி (திரைப்படம்) | Thaaliyae Thevaiyillai | |||||
2007 | Naalaiya Pozhuthum Unnodu | Pesa Paraasa | சிறீகாந்து தேவா | |||
Anumanaspadam | Rela Rela Rela | தெலுங்கு | இளையராஜா | |||
2008 | உளியின் ஓசை | காலத்தை வென்ற | தமிழ் | |||
தனம் (2008 திரைப்படம்) | கண்ணனுக்கு என்ன | |||||
சக்கர வியூகம் | இது தான் சக்கரவியூகம் | கார்த்திக் ராஜா | ||||
2009 | அழகர் மலை | உன்னை எனக்கு | இளையராஜா | |||
கண்ணுக்குள்ளே | பாட்டு கேட்க | |||||
Paa | Gumm Summ Gumm | இந்தி | ||||
2010 | கோவா | ஏழேழு தலைமுறைக்கும் | தமிழ் | யுவன் சங்கர் ராஜா | ||
2011 | மங்காத்தா (திரைப்படம்) | நீ நான் | ||||
2012 | Gundello Godari | Nanu Neetho | தெலுங்கு | இளையராஜா | ||
மயிலு | Yathe | தமிழ் | ||||
2014 | அனேகன் (திரைப்படம்) | ஆத்தாடி ஆத்தாடி | ஹாரிஷ் ஜெயராஜ் | திப்பு & தனுஷ் | ||
2021 | மாநாடு (திரைப்படம்) | Meherezylaa | யுவன் சங்கர் ராஜா | |||
2022 | மாமனிதன் | பண்ணப்புரத்து | இளையராஜா, யுவன் சங்கர் ராஜா | Credited as Raja Bhavatharini |
தனிப்பட்ட வாழ்க்கை
ஆர். சபரிராஜ் என்பவரை 3 ஆகத்து 2005 அன்று திருமணம் செய்தார் பவதாரிணி.[4]
மறைவு
பவதாரிணி கல்லீரல் மற்றும் பித்தப்பைபுற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 47-ஆவது அகவையில் 2024 சனவரி 25 அன்று மாலையில் காலமானார்.[10][11][12][13][14]
மேற்கோள்கள்
- ↑ "பவதாரிணி இசையில் யுவன்". தினமலர் சினிமா. 2 ஆகத்து 2012. http://cinema.dinamalar.com/tamil-news/8822/cinema/Kollywood/Yuvan-sing-in-bhavatharani-music.htm. பார்த்த நாள்: 1 பெப்ரவரி 2015.
- ↑ ஸ்கிரீனன் (7 மே 2014). "வைரமுத்து பாடலைப் பாடிய இளையராஜாவின் மகள்". தி இந்து. http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article5985235.ece. பார்த்த நாள்: 1 பெப்ரவரி 2015.
- ↑ "யுவனுக்கு திருமணம் நடந்தது எனக்கு தெரியாது-கார்த்திக் ராஜா!". தமிழ்த் தார். 2 சனவரி 2015 இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305011132/http://www.tamilstar.com/tamil/news-id-karthik-raja-02-01-1513482.htm. பார்த்த நாள்: 1 பெப்ரவரி 2015.
- ↑ 4.0 4.1 "Ilayaraja's daughter gets engalged". August 4, 2005 இம் மூலத்தில் இருந்து December 1, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161201022339/http://www.thehindu.com/2005/08/04/stories/2005080413000200.htm.
- ↑ "படங்களுக்கு தேசிய விருது தேர்வுக்குழு கூட்டத்தில் நடந்த போராட்டம்: தென்னாட்டுக்கு 26 விருதுகள் கிடைத்தன". மாலை மலர். http://www.maalaimalar.com/2013/08/28224442/keyar-cinema-history.html. பார்த்த நாள்: 1 பெப்ரவரி 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Raman Abdullah (1997)". Raaga. http://play.raaga.com/tamil/album/Raman-Abdullah-songs-T0000909. பார்த்த நாள்: 1 பெப்ரவரி 2015.
- ↑ "Thamirabarani (2006)". Raaga. http://play.raaga.com/tamil/album/Thamirabarani-songs-T0001120. பார்த்த நாள்: 1 பெப்ரவரி 2015.
- ↑ "இளையராஜாவின் இசை வாரிசுகள்". மாலை மலர் இம் மூலத்தில் இருந்து 2015-09-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150920071655/http://www.maalaimalar.com/2013/04/07233327/Ilayaraja-musical-heirs.html. பார்த்த நாள்: 1 பெப்ரவரி 2015.
- ↑ "Pudhiya Geethai (2003)". Raaga. http://play.raaga.com/tamil/album/Pudhiya-Geethai-songs-T0000480. பார்த்த நாள்: 1 பெப்ரவரி 2015.
- ↑ "இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்". 25 January 2024. https://www.dailythanthi.com/breaking-news/ilayarajas-daughter-bhavadharani-passed-away-1091392?infinitescroll=1.
- ↑ "Ilaiyaraaja's daughter and playback singer Bhavatharini dies of cancer" (in en). https://www.indiatoday.in/movies/regional-cinema/story/ilaiyaraajas-daughter-and-playback-singer-bhavatharini-dies-of-cancer-2493685-2024-01-25.
- ↑ "Bhavatharini, daughter of musician Ilayaraja, no more". The hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/bhavatharini-daughter-of-musician-ilayaraja-no-more/article67777672.ece.
- ↑ இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்! (இந்துஸ்தான் டைம்ஸ் (தமிழ்) செய்தி)
- ↑ "இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்". பிபிசி தமிழ். https://www.bbc.com/tamil/articles/c3g3e0yxly2o.