பொன் மேகலை
பொன் மேகலை | |
---|---|
இயக்கம் | சக்தி சித்திரன் |
தயாரிப்பு | ஜெயபார்வதி கணேசன் |
கதை | சக்தி சித்திரன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | கே. வி. சுரேஷ் |
படத்தொகுப்பு | பீட்டர் பாப்பையா |
கலையகம் | ஜெயபார்வதி பிலிம்ஸ் |
வெளியீடு | 24 சூன் 2005 |
ஓட்டம் | 115 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொன் மேகலை (Pon Megalai) என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் பரபரப்பூட்டும் திரைப்படமாகும். சக்தி சித்திரன் இயக்கிய இந்த படத்தில் நித்யா தாஸ், அபிநய், சரண்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாருஹாசன், விஜயன், டி. எஸ். இராகவேந்திரா, நாக கண்ணன், அனு மோகன், அனுஷா ராகவேந்திரா, சோனா ஹைடன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஜெயபார்வதி கணேசன் தயாரித்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப் படமானது 2005 இல் வெளியானது.[1][2]
கதை
செய்தியாளர் மலர்வண்ணன் (அபிநய்) குருதியில் நனைந்தும், மயக்கமடைந்தும் கன்னியாஸ்திரியின் உடையில் உள்ள மேகலையை (நித்யா தாஸ்) தொடருந்து பாதை அருகே கண்டுபிடிப்பதோடு படம் தொடங்குகிறது. மலர்வண்ணனும், உள்ளூர் காவல் ஆய்வாளரும் அருகில் உள்ள தேவாலயத்திற்குச் சென்று தேவாலயத் தந்தையிடம் ( கார்வண்ணன் ) அவளை யார் என்று மருத்துவமனையில் அடையாளம் காணச் சொல்கின்றனர். மருத்துவமனையில், தேவாலயத் தந்தை மேகாலயையும், அமைச்சர் தாண்டவராயன் ( டி. எஸ். இராகவேந்திரா ) மற்றும் காவல் ஆய்வாளர் கஜபதி (நாக கண்ணன்) ஆகியோரைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்.
கடந்த காலத்தில், மேகலை தனது தந்தை ராமநாதன் ( சாருஹாசன் ) மற்றும் அவரது தங்கை சங்கீதா (அனுஷா ராகவேந்திரா) ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறார். தன் தந்தையின் திடீர் மரணத்திற்குப் பிறகு, தன் சகோதரியை கவனித்துக் கொண்டு வேலை தேடுவதில் மேகலை ஈடுபடுகிறாள். மேகலை தன் தந்தையின் அரசு வேலையை வாரிசு அடிப்படையில் கேட்கிறாள். ஆனால் அந்த அதிகாரி அந்த வேலை வேண்டுமானால் தன்னுடன் அவள் படுக்கவேண்டும் என்கிறார். அதற்கு மேகலை மறுத்துவிடுகிறாள். அவள் மனக்கவலையில் கடற்கரைக்குச் சென்று நாள் முழுவதும் அங்கேயே இருக்கிறாள். இரவு ஆனவுடன், குடிபோதையில் இருந்த சிலர் அவளிடம் தவறாக நடந்து கொள்ள முயல்கின்றனர். அப்போது காவல் அதிகாரி கஜபதி அவர்களை விரட்டி காவல் நிலையத்திற்கு அவளை அழைத்துச் சென்றார். அங்கு, கஜபதி ஒரு பெண் காவலரை பாலியல் பலாத்காரம் செய்ததை அறிகிறாள். கஜாபதியின் கற்பழிப்பை கானொளி எடுத்த ஊடகவியலாளரை அடித்து, கானொளிப் பேழையை வாங்கி தனது மேசையில் வைத்திருக்கிறார். மேகலை அதை எடுத்துக்கொண்டு ஓடிவிடுகிறாள். ஓடும் போது, மேகலை தாண்டவராயனின் மகிழுந்தில் அடிபட்டு மயக்ககமடைகிறாள். தாண்டவராயன் மயக்கமடைந்த மேகலையை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மேகலை விழித்து எழுந்த பிறகு, மருத்துவமனையில் குண்டு வைக்கும் அமைச்சரின் திட்டத்தை அவள் கேட்டாள். அவள் அந்த இடத்திலிருந்தும் அமைச்சரின் குண்டர்களிடமிருந்தும் தப்பிக்கிறாள். மேலும் அவளை வன்புணர்வு செய்ய முயன்றவர்களை அவள் அடிக்கிறாள். பின்னர் மேகலை ஒரு தேவாலயத்திற்குள் நுழைந்து தேவாலயத் தந்தையிடம் தனக்கு உதவுமாறு மன்றாடுகிறாள். அவர் அவளை தனது வீட்டில் தங்குமாறு கூறுகிறார். தேவாலயத்தின் தந்தை ஒரு மோசடி நபராவார். அவர் மேகலையை பாலியல் பலாத்காரம் செய்ய முயல்கிறார். மோதலின் போது, மேகலை தலையில் காயமடைந்து மயங்கி விழுகிறாள்.
அவள் மருத்துவமனையில் விழித்து எழுந்த பிறகு, மேகலை அனைத்து நிகழ்வுகளையும் காவல் ஆய்வாளர் சௌந்தரபாண்டியனிடம் ( சரண்ராஜ் ) கூறுகிறாள். ஆய்வாளர் குற்றவாளியை சிறையில் அடைப்பதாக சபதம் செய்கிறார். அடுத்த நாள், மலர்வண்ணன் கானொளி பேழையைக் கண்டுபிடித்து சௌந்தரபாண்டியனிடம் கொடுக்கிறான். இதற்கிடையில், தாண்டவராயனால் அனுப்பபட்ட இரண்டு பயங்கரவாதிகள் மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்க முயல்கின்றனர். அதே சமயத்தில் மேகலையைக் கொல்ல கஜபதி மருத்துவமனையில் பதுங்கி இருக்கிறான். சௌந்தரபாண்டியன் கஜபதியை கொன்று மேகலையை காப்பாற்றுகிறார். வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நோயாளிகளும் மருத்துவமனை ஊழியர்களும் அந்த இடத்தை விட்டு வெளியேற முயல்கின்றனர், ஆனால் அது வெடித்து 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்படுகின்றனர். அடுத்த நாள், அமைச்சர் தாண்டவராயன் தற்கொலை செய்து கொள்கிறார். அதே நேரத்தில் தேவாலய போலி தந்தை மின்சாரம் தாக்கி இறக்கிறார். மேகலையின் துணிச்சலுக்காக சௌந்தரபாண்டியன் வாழ்த்துவதுடன் படம் முடிவடைகிறது. மேகலைக்கு இறுதியாக அரசாங்க வேலை கிடைக்கிறது.
நடிப்பு
- நித்யா தாஸ் மேகலையாக
- அபிநய் மலரவனாக
- சரண்ராஜ் சௌந்திர பாண்டியனாக
- சாருஹாசன் இராமநாதனாக
- விஜயன்
- டி. எஸ். இராகவேந்திரா அமைச்சர் தாண்டவராயனாக
- நாக கண்ணன் கஜபதியாக
- அனு மோகன் தலைமைக் காவலராக
- அனுசா இராகவேந்திரன் சங்கீதாவாக
- சோனா ஹைடன் உமாவாக
- பாண்டு திருடனாக
- கனகதுர்கா
- கோட்டை பெருமாள் காவலர் பெருமாள்
- மேனேஜர் சீனா கைலாசமாக
- ஹரிஷ் ஓரி காவல் ஆய்வாளராக
- சத்தியஜித்
- நிர்மலா
- கார்வண்ணன் தேவாலய பாதிரியார்
- எஸ். வி. தங்கராஜ் பாடகராக
- ராபர்ட் சிறப்புத் தோற்றத்தில்
தயாரிப்பு
இப்படத்தில் மலையாள திரைப்பட நடிகை நித்யா தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். இதன் வழியாக அவர் தமிழகத் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.[3][4]
இசை
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். படத்தின் ஒலிப்பதிவில் 5 பாடல்கள் உள்ளன.[5][6]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "ஆலாபனை" | சாதனா சர்கம், பவதாரிணி | 4:58 | |||||||
2. | "ஆடும் பாதம்" | சுதா ரகுநாதன் | 3:32 | |||||||
3. | "உன்னைத் தேடும்" | பாம்பே ஜெயஸ்ரீ | 4:57 | |||||||
4. | "வீணை வாணி" | பிரசணனா, கல்பனா | 4:02 | |||||||
5. | "சீமையிலே" | புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி | 4:04 | |||||||
மொத்த நீளம்: |
21:33 |
குறிப்புகள்
- ↑ "Find Tamil Movie Pon Megalai". jointscene.com. Archived from the original on 22 June 2010. பார்க்கப்பட்ட நாள் 5 September 2019.
- ↑ Aravindan (22 October 2008). "A film on Karunanidhi". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 5 September 2019.
- ↑ "Glamour for Nityadas too". indiaglitz.com. 9 February 2006. பார்க்கப்பட்ட நாள் 5 September 2019.
- ↑ "Marriage registration of actress declined". behindwoods.com. 27 June 2007. பார்க்கப்பட்ட நாள் 5 September 2019.
- ↑ "Ponmekalai (2004) - Ilaiyaraaja". mio.to. Archived from the original on 4 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 5 September 2019.
- ↑ "Ponmekalai Songs". mymazaa.com. பார்க்கப்பட்ட நாள் 5 September 2019.