பாண்டு (நடிகர்)
பாண்டு | |
---|---|
பிறப்பு | பாண்டு 19 பெப்ரவரி 1947 குமாரபாளையம், நாமக்கல், தமிழ்நாடு |
இறப்பு | 6 மே 2021 சென்னை, தமிழ்நாடு | (அகவை 74)
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1970, 1981 1988-2021 |
பாண்டு (பெப்ரவரி 19, 1947 – மே 6, 2021) என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகரும், ஒவியரும் ஆவார். இவர் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் அதிகம் நடித்துள்ளார். இவருடைய சகோதரர் இடிச்சப்புளி செல்வராசு என்பவரும் நகைச்சுவை நடிகராவார்.[1] இவர் திரைப்படங்களோடு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தினம் தினம் தீபாவளி, உறவுகள் சங்கமம், வள்ளி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
வாழ்க்கை
சென்னை ஓவிய கல்லூரி மாணவரான பாண்டு தென்னிந்தியாவில் ஓவியத்தில் ஆராய்ச்சி படிப்பில் முனைவர் பட்டம் வாங்கிய ஒரே நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த ஓவியரான பாண்டு எழுத்துகள் வடிவமைக்கும் கலைஞராக இருந்தார். கேபிட்டல் லெட்டர்ஸ் என்ற நிறுவனத்தை இவர்களது மகன்களான பிண்டு, பிரபு, பஞ்சு ஆகியோருடன் இணைந்து சென்னையில் நடத்திவந்தார். அந்த நிறுவனத்தின் மூலமாக பல்வேறு திரையுலக பிரலங்களின் இல்லங்கள், நிறுவனங்களின் பெயர்பலகையை வடிவமைத்து வந்தார். இவரது சகோதரர் இடிச்சப்புளி செல்வராசு எம்.ஜி.ஆரிடம் உதவி இயக்குநராக இருந்தார். அவர் மூலமாக இவர் எம்.ஜி.ஆருக்கு அறிமுகமானார். அதனால் எம்.ஜி.ஆர். நடித்த குமரிக்கோட்டம், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களில் ஓவியங்கள் வரைந்து கொடுக்கும் வாய்ப்பைப் பெற்றார். எம்.ஜி.ஆர். அதிமுக கட்சியைத் தொடங்கியபோது, அதிமுகவின் கொடியையும், அக்கட்சியின் சின்னமான இரட்டை இலையை வரைந்து வடிவமைத்த ஓவியர் இவர்தான்.[2]
திரை வாழ்க்கை
மறைவு
கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி மே 6, 2021 அன்று உயிரிழந்தார்.[3]
மேற்கோள்கள்
- ↑ http://www.behindwoods.com/tamil-movie-news-1/jan-12-05/comedian-idichapuli-selvaraj-30-01-12.html
- ↑ நடிகர் பாண்டு காலமானார் - கொரோனா சிகிச்சையில் இருந்தவர், செய்தி, 6 மே 2021, பிபிசி செய்தி
- ↑ "பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு". https://m.dinakaran.com/article/news-detail/675777.தினகரன் நாளிதழ் (மே 6, 2021)