இது நம்ம பூமி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இது நம்ம பூமி
இயக்கம்பி. வாசு
தயாரிப்புராதா ரவி
கதைபி. வாசு
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஎம். சீ. சேகர்
படத்தொகுப்புபீ. மோகன்ராஜ்
கலையகம்உழைக்கும் கரங்கள் ஆர்ட் புரடக்சன்
வெளியீடுசூன் 5, 1992 (1992-06-05)
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இது நம்ம பூமி {ithu namma poomi) 1992 ல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை பி. வாசுஇயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் முன்னணிக் கதாபாத்திரங்களில் கார்த்திக், குஷ்பு, ஆகியோர் நடித்திருந்தனர். ராதாரவி இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். சூன் 5, 1992 ம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.[1][2][3]

கதைச்சுருக்கம்

ஜெகநாதன் ஒரு (விஜயகுமார்) ஏழை . அவன் அவ்வூரில் உள்ள பணக்கார குடும்பத்து பெண்ணான நாகவள்ளியை (ஸ்ரீவித்யா) காதலிப்பதோடு இரகசியமாக திருமணமும் செய்கிறான். இதனால் நாகவள்ளியின் தந்தை மாரடைப்பினால் இறந்துபோக அவளுடைய சகோதரன் ரத்னவேலுக்கோ (ராதாரவி) இந்த அவமானத்தை பொறுத்துகொள்ள இயலாமல் போகின்றது. பின்னர் ஜெகநாதன் தனது கடின உழைப்பால் ரத்னவேலை போன்று பணக்காரனாக உயர்கின்றான். ஆனால் இவ்விருவரும் ஒருவரை ஒருவர் வெறுக்கின்றனர்.ஜெகநாதனுடைய மகன் கோபி (கார்த்திக்) அவனுடைய பாட்டியான பெரியநாயகியின் (காந்திமதி) அரவணைப்பில் வளர்வதுடன் தனது தாயை பார்க்கவும் வருகின்றான். அதன்பின்னர் நாகவள்ளி இறந்து போக, கோபி இரு குடும்பத்தையும் சேர்ப்பேன் என சபதமேற்கிறான். இதனை நிறைவேற்ற ரத்னவேலின் மகளான நளினியை (குஷ்பு) திருமணம் செய்வதென தீர்மானிக்கிறான். பின்னர் இரு குடும்பங்களும் இணைந்ததா எனபது மீதிக் கதை.

நடிகர்கள்

  • கார்த்திக்-கோபி
  • குஷ்பு-நளினி
  • விஜயகுமார்- ஜெகநாதன்
  • ராதா ரவி-ரத்னவேல்
  • ஸ்ரீவித்யா-நாகவள்ளி (சிறப்பு தோற்றம்)
  • மனோரமா-வள்ளியம்மை
  • நெப்போலியன்-மிராசுதர்
  • எஸ். எஸ். சந்திரன்-வேதாச்சலம்
  • வெண்ணிற ஆடை மூர்த்தி- இசை கல்லூரி பேராசிரியர்
  • சுமித்ரா-சுகண்யா
  • ரொக்கி-உதயமூர்த்தி
  • பாண்டு
  • வாசு விக்ரம்-குமாரவேல்
  • ராஜேஷ் குமார்-சுந்தரவேல்
  • ஹர்சவர்த்தன்
  • உதய் பிரகாஷ்
  • காந்திமதி-பெரியநாயகி
  • ஒரு விரல் கிருஷ்ணா ராவோ
  • மார்த்தாண்டம்
  • தளபதி தினேஷ்
  • சக்தி வாசுதேவன்

இசை

இத்திரைப்படத்திற்கான இசையை இசைஞானி இளையராஜா அமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் பாடல்வரிகளை வாலி எழுதியுள்ளார்.[4][5]

மேற்கோள்கள்

  1. "Filmography of idhu namma bhoomi". cinesouth.com. பார்க்கப்பட்ட நாள் 2012-12-15.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Ithu Namma Boomi". en.600024.com. Archived from the original on 2012-03-06. பார்க்கப்பட்ட நாள் 2012-12-15.
  3. "P Vasu: Will he deliver the goods". indiaglitz.com. 2004-10-29. பார்க்கப்பட்ட நாள் 2012-12-15.
  4. "Idhu Namma Boomi Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2012-12-15.
  5. "Ithu Namma Boomi - Illayaraja". thiraipaadal.com. பார்க்கப்பட்ட நாள் 2012-12-15.