செந்தமிழ் பாட்டு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
செந்தமிழ் பாட்டு
இயக்கம்பி. வாசு
தயாரிப்புஎம். எஸ். வி. கோபி
கதைபி. வாசு
இசைவிசுவநாதன்-இளையராஜா
நடிப்புபிரபு
சுகன்யா
ஒளிப்பதிவுஜெயனன் வின்சென்ட்
படத்தொகுப்புபி. மோகன்ராஜ்
கலையகம்ஜானகி பிலிம்ஸ்
வெளியீடு25 அக்டோபர் 1992
ஓட்டம்141 நிமிடம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

செந்தமிழ் பாட்டு (Senthamizh Paattu) 1992 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. வாசு எழுதி இயக்கிய இப்படத்தில் பிரபு, சுகன்யா ஆகியோர் நடித்திருந்தனர். சலிம் கெளஸ் துணை வேடத்தில் நடித்தார். இப்படத்திற்கு விஸ்வநாதன் - இளையராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்தனர். இப்படம் தெலுங்கில் ராஜசேகர் நடிக்க அம்மா கொடுக்கு என்ற பெயரிலும், கன்னடத்தில் வீ. ரவிச்சந்திரன் நடிக்க, துவாரகேஷ் இயக்க ரசிகா என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

நடிகர்கள்

தயாரிப்பு

பி. வாசு இயக்க பிரபு நடித்த குடும்ப நாடகப்படமான என் தங்கச்சி படிச்சவ (1988) வெற்றியானது. இவர்கள் இணைந்து இதே வகையிலான படங்களான சின்னத் தம்பி (1991), செந்தமிழ் பாட்டு (1992) போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக காரணமாயிற்று.[1][2]

இசை

படத்திற்கான இசையை விசுவநாதன், இளையராஜா இணைந்து மேற்கொண்டனர்.[3][4]

எண். பாடல் பாடகர்(கள்) பாடல் வரிகள் நீளம் (மீ: கள்)
1 "வண்ண வண்ண" ஜிக்கி வாலி 05:01
2 "அடி கோமாதா" எஸ். பி. பாலசுப்ரமணியம் 05:08
3 "சின்ன சின்ன தூறல்" எஸ். பி. பாலசுப்ரமணியம், அனுராதா ராஜ்கிருஷ்ணா 05:09
4 "இந்த" மனோ 05:09
5 "கூட்டுக்கொரு" மனோ 04:54
6 "காலையில் கேட்டது" எஸ். பி. பாலசுப்ரமணியம், சுவர்ணலதா 05:12
7 "சொல்லி சொல்லி" எஸ். பி. பாலசுப்ரமணியம், சுனந்தா 05:11

வெளியீடு மற்றும் வரவேற்பு

செந்தமிழ் பாட்டு தீபாவளிக்கு முன்னதாக 1992 அக்டோபர் 25 அன்று வெளியிடப்பட்டது.[5] இந்தியன் எக்ஸ்பிரஸ் இதை வாசுவின் முந்தைய திரைப்படமான சின்னத் தம்பியின் "மூலத்தில் மாற்றமில்லாத சாயல்" கொண்டது என்று குறிப்பிட்டது.[6]

மேற்கோள்கள்

  1. "Google Groups". Groups.google.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  2. Pradeep, K. (30 November 2006). "From the playback world to classical". தி இந்து. Archived from the original on 16 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  3. "Senthamizh Paattu Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2014-03-04.
  4. "Senthamizh Paattu Songs". starmusiq. Archived from the original on 2014-03-07. பார்க்கப்பட்ட நாள் 2014-03-04.
  5. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19921030&printsec=frontpage&hl=en
  6. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19921025&printsec=frontpage&hl=en

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=செந்தமிழ்_பாட்டு&oldid=33546" இருந்து மீள்விக்கப்பட்டது