சுனந்தா (பாடகி)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சுனந்தா
சுனந்தா (பாடகி).jpg
பிறப்புகேரளா, இந்தியா
பணிஇந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
செயற்பாட்டுக்
காலம்
1984–1995

சுனந்தா (Sunanda) ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். இவர் முக்கியமாக தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். 1983 இல் சென்னைக்குச் செல்வதற்கு முன் கேரளாவில் தனது முதல் பட்டப்படிப்பை முடித்தார். கர்நாடக இசையில் பயிற்சி பெற்றார். பின்னர் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிமுகமானார். சுனந்தா புதுமைப்பெண் திரைப்படத்தில் தனது முதற்பாடலைப் பாடினார். [1]

தொழில்

சுனந்தா தமிழில் பின்னணி பாடுவதற்கு முன், ஒரு மலையாள ஆவணப்படத்திற்காக கர்நாடக பாடல்களையும் சுலோகங்களையும் பாடினார். இவரது முதல் திரைப்படப் பாடல் வெற்றி பெற்றது. மேலும் இவர் 1980, 1990 களில் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பல வெற்றிப் பாடல்களைப் பாடினார்.[2] தனிப்பட்ட காரணங்களால் பல ஆண்டுகளாக இவரால் தொடர்ந்து பின்னணி பாட முடியவில்லை.

பாடிய பாடல்களில் சில

ஆண்டு திரைப்படம் இசையமைப்பாளர் பாடல்
1984 புதுமைப் பெண் இளையராஜா "காதல் மயக்கம்"
1985 சின்ன வீடு இளையராஜா "வெள்ள மனம் உள்ள மச்சான்"
1987 எங்க ஊரு பாட்டுக்காரன் இளையராஜா "செண்பகமே செண்பகமே"
1988 சொல்ல துடிக்குது மனசு இளையராஜா "பூவே செம்பூவே"
1989 என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் இளையராஜா "பூமுடித்து பொட்டு"
1993 வால்டர் வெற்றிவேல் இளையராஜா "மன்னவா மன்னவா"
1993 கிழக்குச் சீமையிலே ஏ. ஆர். ரகுமான் "எதுக்குப் பொண்டாட்டி"
1994 செவ்வந்தி இளையராஜா "செம்மீனே செம்மீனே"
1994 வீட்ல விசேஷங்க இளையராஜா "பூங்குயில் ரெண்டு ஒன்னுல"
1995 காதலன் ஏ. ஆர். ரகுமான் "இந்திரையோ இவள் சுந்தரியோ"
1996 மகாபிரபு தேவா "சொல்லவா சொல்லவா ஒரு"
1997 சூர்யவம்சம் எஸ். ஏ. ராஜ்குமார் "நட்சத்திர ஜன்னலில்"

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சுனந்தா_(பாடகி)&oldid=8892" இருந்து மீள்விக்கப்பட்டது