புதல்வன்
புதல்வன் | |
---|---|
இயக்கம் | செல்வா விநாயகம் |
தயாரிப்பு | பி. விஜயகௌரி |
கதை | பி. கலைமணி (உரையாடல்) |
திரைக்கதை | செல்வா விநாயகம் |
இசை | தேவா |
நடிப்பு | ராம்கி (நடிகர்) பிரகதி |
ஒளிப்பதிவு | ரவீந்தர் |
படத்தொகுப்பு | பி. வெங்கடேஸ்வர ராவ் |
கலையகம் | விஜயகௌரி பிலிம்ஸ் |
விநியோகம் | பி. என். ஆர். பிக்சர்ஸ் |
வெளியீடு | திசம்பர் 26, 1997 |
ஓட்டம் | 105 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
புதல்வன் (Pudhalvan) என்பது 1997 ஆம் ஆண்டய தமிழ் குற்றத் திரைப்படமாகும். இப்பபடத்தை செல்வா விநாயகம் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு கோட்டை வாசல் (1992) மற்றும் அரண்மனைக்காவலன் (1994) ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இப்படத்தில் ராம்கி, பிரகதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் விஜயகுமார், ஜெயந்தி, புதுமுகம் ராகவி, மோகன் நடராஜன், எஸ். என். வசந்த், இராஜா ரவீந்தர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார். படமானது 26 திசம்பர் 1997 அன்று வெளியானது.[1][2] இந்த படம் தெலுங்கு திரைப்படமான தோஷி நிர்தோஷி (1990) படத்தின் மறு ஆக்கமாகும்.
கதை
சிவா ( ராம்கி ) ஒரு நேர்மையான காவல் ஆய்வாளர், அவனது தாயார் இறந்தபிறகு நீதிபதி சத்தியமூர்த்தியால் ( விஜயகுமார் ) வளர்க்கப்பட்டவன். சத்தியமூர்த்திக்கு ரமேஷ் (எஸ். என். வசந்த்) மற்றும் ராஜா (ராஜா ரவீந்தர்) என்ற இரண்டு மகன்கள் உண்டு. செல்வாக்குமிக்க கடத்தல்காரர் முதலியார் (மோகன் நடராஜன்) சிவா மற்றும் சத்தியமூர்த்தியுடன் மோதுகிறார். சிவாவும் கல்லூரி மாணவியுமான பிரியாவும் ( பிரகதி ) காதலிக்கிறனர். பின்னர் அவர்கள் சத்தியமூர்த்தியின் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
ஒரு நாள், ராஜா முதலியாரின் மகளை பாலியல் பலாத்காரம் செய்கிறான். அடுத்த நாள், ராஜா இறந்து கிடக்கிறான். சிவா விசாரணை நடத்துகிறான். ராஜாவை கொன்றதாக ரமேஷ் தனது தந்தையிடம் ஒப்புக்கொள்கிறான். சத்யமூர்த்தி ரமேஷை என்ன விலை கொடுத்தாவது பாதுகாக்க முடிவு செய்கிறார். அதே நேரத்தில் சிவா ரமேஷை சிறைக்கு அனுப்ப விரும்புகிறான். பின்னர் என்ன நடக்கிறது என்பது கதையின் முக்கிய அம்சமாக உள்ளது.
நடிகர்கள்
- ராம்கி (நடிகர்) காவல் ஆய்வாளர் சிவாவாக
- பிரகதி பிரியாவாக
- விஜயகுமார் சத்தியமூர்த்தி
- ஜெயந்தி பார்வதியாக
- இராணி
- ஐ. எஸ். முருகேசன்
- பாண்டு
- வாசு (நகைச்சுவை நடிகர்)
- மோகன் நடராஜன் முதலியாராக
- எஸ். என். வசந்த் ரமேசாக
- இராஜா ரவீந்தர் இராஜாவாக
- சௌந்தர் சௌந்தராக
- திடீர் கண்ணையா
- இராகவி
- மானேஜர் சீனா
- வின்சண்ட் ராய்
- அனுஜா
- எம். ஜி. இராஜகோபால்
- ஆர். கே.
- முஸ்தபா
- முகிலன்
இசை
படத்திற்கான பின்னணி இசை மற்றும் பாடல் ஆகியவற்றுக்கான இசையை திரைப்பட இசையமைப்பாளர் தேவா மேற்கொண்டார். 1997 இல் வெளியான இந்த படத்தின் பாடல் பதிவில், வைரமுத்து எழுதிய வரிகளுடன் கூடிய 5 பாடல்கள் இருந்தன.
எண் | பாடல் | பாடகர் (கள்) | காலம் |
---|---|---|---|
1 | 'செல்லுலார் போன்' | அனுராதா ஸ்ரீராம், குழுவினர் | 5:07 |
2 | 'கண்ணான கண்ணா' | கிருஷ்ண சுந்தர் | 4:59 |
3 | 'குமரிப் பொன்னு' | கிருஷ்ண சுந்தர், சுவர்ணலதா | 5:02 |
4 | 'எம்பிபிஎஸ் நான்' | சுவர்ணலதா | 4:20 |
5 | 'சட்டங்கள் வேறு' | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:43 |
குறிப்புகள்
- ↑ "Find Tamil Movie Pudhalvan". jointscene.com இம் மூலத்தில் இருந்து 2012-04-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120429092404/http://www.jointscene.com/movies/Kollywood/Pudhalvan/7753.
- ↑ "Pudhalvan (1997)". gomolo.com இம் மூலத்தில் இருந்து 2015-02-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150219234053/http://www.gomolo.com/pudhalvan-movie/12101.