எஸ். என். வசந்த்
Jump to navigation
Jump to search
எஸ். என். வசந்த் (English: S. N. Vasanth) (1957- மே 14, 2009) என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகர், தொலைக்காட்சித் தொடர் நடிகர் மற்றும் முன்னாள் சின்னதிரை நடிகர் சங்கத் தலைவராவார்.[1] 2009 மே மாதம் மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
திரைத்துறை
அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றார். 1983 ஆம் ஆண்டு மெல்லப் பேசுங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமனார். புலன் விசாரணை, மூன்றாவது கண், புதல்வன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2] பொதிகை தொலைக்காட்சியிலும், சில தனியார் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். தொலைக்காட்சித் தொடர் நடிகர்களின் மேம்பாட்டிற்காக 2003 நவம்பர் 2 ஆம் நாள் சின்னதிரை நடிகர் சங்கத்தைத் தொடங்கினார்.[3]
திரைப்படங்கள்
இவர் நடித்துள்ள திரைப்படங்கள்.
- எம். பாஸ்கரின் தண்டிக்கப்பட்ட நியாயங்கள்
- சங்கநாதம் (1984)
- இது இளவேனிற்காலம்
- நேர்மை (1985)
- உயிரே உனக்காக (1986)
- நீதிக்குத் தண்டனை (1987)
- கிருஷ்ணன் வந்தான் (1987)
- குடும்பம் ஒரு கோவில் (1987)
- திராவிடன்
- புலன் விசாரணை (1990)
- தலைவாசல் (1992)
- மூன்றாவது கண் (1993)
- கோகுலம் (1993)
- புதல்வன் (1997)
- சூர்யவம்சம் (1997)
மேற்கோள்கள்
- ↑ "டிவி நடிகர் சங்கத் தலைவர் எஸ்.என்.வசந்த் மரணம்". https://tamil.filmibeat.com. https://tamil.filmibeat.com/news/15-tv-artistes-union-president-vasanth-dies.html. பார்த்த நாள்: 22 November 2023.
- ↑ "S. N. Vasanth Biography". moviefone.com. பார்க்கப்பட்ட நாள் 22 November 2023.
- ↑ "About Us". www.chinnathirainadigarsangam.com. பார்க்கப்பட்ட நாள் 22 November 2023.