பி. கலைமணி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பி. கலைமணி
பிறப்புபி. கலைமணி
1950
இறப்பு3 ஏப்ரல் 2012(2012-04-03) (அகவை 62)[1]
தமிழ்நாடு, சென்னை
பணிஎழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர்
வாழ்க்கைத்
துணை
சரஸ்வதி

பி. கலைமணி (P. Kalaimani) என்பவர் தமிழ் திரைப்படத்தில் பணியாற்றிய எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் ஆவார். இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை, திரைக்கதை, உரையாடல்களை எழுதியுள்ளார்.[2]

திரைப்பட வாழ்க்கை

இவர் மூன்று தசாப்தங்களாக திரைப்படத் துறையில் எழுத்தாளராக இருந்தார். மேலும் இவரது படைப்புகள் மூலமாக வெற்றியடைந்தார். இவரது படைபுகளில் குறிப்பிடத்தக்கவையாக பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே, மண்வாசனை, கோபுரங்கள் சாய்வதில்லை, முதல் வசந்தம், இங்கேயும் ஒரு கங்கை போன்ற பலபடங்களாகும். இவர் சில திரைப்படங்களை தயாரித்து இயக்கியுள்ளார். இவர் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தனது வாழ்க்கையில் சத்தியராஜ், விஜயகாந்த் போன்றவர்களுடன் பணியாற்றினார். உரையாடல் எழுத்தாளராக இவரது கடைசி படம் குருவி ஆகும்.[3] தெற்கத்திக்கள்ளன், மனித ஜாதி போன்ற படங்களை எழுதி இயக்கியுள்ளார்.[4]

மேலும் இவர் எவரெஸ்ட் பிலிம்ஸ் என்ற பதாகையின் கீழ் நிறைய படங்களை தயாரித்தார்.[4] இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியது.

பகுதி திரைப்படவியல்

ஆண்டு படம் பணி குறிப்பு
இயக்குநர் எழுத்தாளர் தயாரிப்பாளர்
1977 பதினாறு வயதினிலே Red XN Green tickY Red XN உரையாடல் மட்டும்
1979 நீயா ? Red XN Green tickY Red XN
1979 மங்களவாத்தியம் Red XN Green tickY Red XN
1980 எங்க ஊர் ராசாத்தி Red XN Green tickY Red XN
1982 வாலிபமே வா வா Red XN Green tickY Red XN
1982 காதல் ஓவியம் Red XN Green tickY Red XN
1982 கோபுரங்கள் சாய்வதில்லை Red XN Green tickY Green tickY
1983 மண்வாசனை Red XN Green tickY Red XN
1983 மனைவி சொல்லே மந்திரம் Red XN Green tickY Green tickY
1984 இங்கேயும் ஒரு கங்கை Red XN Red XN Green tickY
1985 பிள்ளைநிலா Red XN Green tickY Green tickY
1985 அம்பிகை நேரில் வந்தாள் Red XN Red XN Green tickY
1986 முதல் வசந்தம் Red XN Green tickY Green tickY
1986 பாரு பாரு பட்டணம் பாரு Red XN Green tickY Green tickY
1987 சிறைப் பறவை Red XN Green tickY Red XN
1987 தீர்த்தக் கரையினிலே Red XN Green tickY Red XN
1987 பானுமதி காரி மொகுடு Red XN Green tickY Red XN தெலுங்கு
1988 தெற்கத்திக்கள்ளன்n Green tickY Green tickY Green tickY
1988 வரசுடொச்சாடு Red XN Green tickY Red XN தெலுங்கு
1989 என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் Red XN Green tickY Red XN
1989 பொறுத்தது போதும் Green tickY Green tickY Red XN
1990 மல்லுவேட்டி மைனர் Red XN Green tickY Green tickY
1991 மனித ஜாதி Green tickY Green tickY Green tickY
1992 ஹத்தமரி ஹென்னு கில்லாடி கண்டு Red XN Green tickY Red XN கன்னட படம்
1993 காத்திருக்க நேரமில்லை Red XN Green tickY Red XN உரையாடல் மட்டும்
1993 சின்ன மாப்ளே Red XN Green tickY Red XN
1993 பாரம்பரியம் Red XN Green tickY Red XN
1994 கண்மணி Red XN Green tickY Red XN
1994 பிரியங்கா Red XN Green tickY Red XN உரையாடல் மட்டும்
1994 கருப்பு நிலா Red XN Green tickY Red XN உரையாடல் மட்டும்
1994 பொண்டாட்டியே தெய்வம் Red XN Green tickY Red XN
1994 மனசு ரெண்டும் புதுசு Red XN Green tickY Red XN
1995 மக்கள் ஆட்சி Red XN Green tickY Red XN
1995 கூலி நம்பர். 1 Red XN Green tickY Red XN இந்தி படம்; பெயர் போடப்படவில்லை
1996 புருஷன் பொண்டாட்டி Red XN Green tickY Red XN
1997 பாசமுள்ள பாண்டியரே Red XN Green tickY Red XN
1997 புதல்வன் Red XN Green tickY Red XN உரையாடல் மட்டும்
1998 குருப்பார்வை Red XN Green tickY Red XN திரைக்கதை மட்டும்
2000 ஏழையின் சிரிப்பில் Red XN Green tickY Red XN
2000 உன்னைக் கண் தேடுதே Red XN Green tickY Red XN
2001 தாலி காத்த காளியம்மன் Red XN Green tickY Red XN உரையாடல் மட்டும்
2001 சூப்பர் குடும்பம் Red XN Green tickY Red XN
2002 நைனா Red XN Green tickY Red XN
2002 ஷக்கலக்கபேபி Red XN Green tickY Red XN
2005 வீரண்ணா Red XN Green tickY Red XN
2008 குருவி Red XN Green tickY Red XN கதை உரையாடல்

இறப்பு

நீண்டகாலமாக நோயினால் பாதிக்கபட்டிருந்த இவர் 2012 ஏப்ரல் 3 ஆம் நாள் நள்ளிரவில் இறந்தார். இவரது மனிவின் பெயர் சரஸ்வதி.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பி._கலைமணி&oldid=21137" இருந்து மீள்விக்கப்பட்டது