எங்க ஊர் ராசாத்தி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எங்க ஊர் ராசாத்தி
இயக்கம்என். எஸ். ராஜேந்திரன்
தயாரிப்புரவி கம்பைன்ஸ் செங்கோடன் (துணை தயாரிப்பு)
கதைகலைமணி
இசைகங்கை அமரன்
நடிப்புசுதாகர்
ராதிகா, கவுண்டமணி, காந்திமதி
ஒளிப்பதிவுதியாகு
படத்தொகுப்புவெள்ளைச்சாமி, கேசவன்
வெளியீடுஅக்டோபர் 4, 1980
நீளம்2955 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எங்க ஊர் ராசாத்தி 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், ராதிகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1][2] இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன்.[3]

புகழ்பெற்ற பாடல்

இப்படத்தில் இடம்பெற்ற "பொன்மானத் தேடி" என்ற பாடல் புகழ்பெற்றது. குடும்பச் சூழல் காரணமாக ஒன்றுசேர முடியாத காதலின் துயரை கவிஞர் முத்துலிங்கம் இப்பாடலில் எழுதியுள்ளார்.

நடிகர்கள்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ஒரு கிராமத்தில் நாயகன் அழகு துணி தைக்கும் தொழிலாளியாக இருக்கிறார். சூதுவாது தெரியாத வெகுளி பெண்ணான பவுனு நாயகியுடன் காதல் மலர்கிறது.

வெகுளிப் பெண்ணான பவுன் அந்த ஊரின் டீக்கடைக்கார பெண்ணிடம் வேலை செய்கிறார். டீக்கடைக்காரர் பெண்ணுடன் தகாத உறவில் இருக்கும் மைனர் பழனி அடைய ஆசைப்படுகிறார். மைனாரின் ஆசைக்கு பவுன் இறங்க மறுக்க அதனால் கோபம் அடைந்த மனிதரும் டீக்கடைக்கார பெண்ணும் நகை திருட்டு வழக்கினை தொடுக்கிறனர். அது உண்மை அல்ல என்று தெரிந்தும் டீக்கடைக்கார பெண்ணின் சகவாசத்துடன் இருக்கும் நாட்டாமை பவுனின் மீது ஆன குற்றத்தினை ஏற்கிறார். ஆனால் நாயகனின் மீது பழி திரும்பி அவனுடைய துணி தைக்கும் கடையானது எரிக்கப்படுகிறது.

கிராமத்து நீ விட்டு நகரத்திற்கு வந்து நாயகன் அழகு ஓயாமல் உழைத்து பொருள் சேர்க்கிறார். ஆனால் அதற்குள் நாயகி பவுனுக்கு மைனர் குடும்பத்தில் இருக்கும் ஒரு மனநிலை சரியில்லாதவருடன் திருமணத்தை பவுன் வீட்டார் முன் நின்று நடத்துகின்றர். நாயகி சேர்ந்துவாழ கேட்ட பணம் மற்றும் நகைகளுடன் நாயகியை காண வரக் கூடிய நாயகன் சோக கீதம் பாடுகிறார்.

மனநலம் பாதிக்கப்பட்ட மைத்துனனை வைத்துக் கொண்டே மைனர் பவுனை அடையக்கூடிய அனைத்து வழிமுறைகளையும் கையாளுகிறார். அதனை அறியாத மனநலம் பாதிக்கப்பட்ட மைத்துனர் உடன் நிற்கிறார். இறுதியாக பவுனை காதலித்த அழகு தான் கஷ்டப்பட்டு உழைத்து வாங்கிய நகை மற்றும் சேலையை பவுனை கட்டி வரச் சொல்லி கெஞ்சி கேட்கிறார். ஆனால் அதற்கு உடன்பட மறுத்து பவுன் விலகிச் செல்கிறார். அழகின் ஆசை நிறைவேறியதா? பவுன் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட வருடன் வாழ்ந்தாரா? மைனர் பவுனை அடைந்தாரா? என்ற விளக்கங்களுக்கு என்ற கேள்விகளுக்கு பதில் திரையில்.

இசை

இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசை அமைத்துள்ளார்.[4][5] பாடல்களை கவிஞர்கள் வாலி, முத்துலிங்கம் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் எழுதியுள்ளனர். திரைப்பாடல்களை ஜே.ஜே. மாணிக்கம் ஒளிபதிவு செய்துள்ளார். ஒளிப்பதிவு உதவியாளர்களாக சம்பத், காளிதாஸ், வெங்கட்ராமன் ஆகியோர் பணி செய்துள்ளனர்.

பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
"பொன்மானத் தேடி" மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா முத்துலிங்கம் 04:18
"எங்க ஊரு மாரியம்மா தஞ்சமான காளியம்மா" மலேசியா வாசுதேவன் கங்கை அமரன் 4:43
"ஆசைப்பட்டு பார்த்தா அழகான பொண்ணு" எஸ். ஜானகி வாலி 4:18
"சிறுக்கி ஒருத்தி" மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா வாலி 4:30

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எங்க_ஊர்_ராசாத்தி&oldid=31173" இருந்து மீள்விக்கப்பட்டது