சுதாகர் (நடிகர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சுதாகர்
பிறப்புசுதாகர்
18 மே 1959 (1959-05-18) (அகவை 65)[1]
மார்க்கப்பூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிநடிகர், நகைச்சுவை நடிகர், திரைப்பட தயாரிப்பாளர்

சுதாகர் (பிறப்பு 18 மே 1959) என்பவர் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் நகைச்சுவை நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் 600 க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றியுள்ளார்.

வாழ்க்கை குறிப்பு

சுதாகர் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மார்க்கபுரத்தில் பிறந்தார். அவரது தந்தை ஆந்திரா முழுவதும் பயணம் செய்த ஒரு துணை ஆட்சியர் ஆவார். சுதாகர் ஆறு சகோதரர்களில் இளையவர்.[2] அவர் குண்டூரில் உள்ள ஆந்திரா-கிறிஸ்டியன் கல்லூரியில் இடைநிலை வரை படித்தார், பின்னர் ஒரு மெட்ராஸ் திரைப்பட நிறுவனத்தில் சேர்ந்து திரைப்படங்களில் இறங்கினார்.

1976 இல் மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தார். அங்கு அவர் சிரஞ்சீவி மற்றும் ஹரி பிரசாத் ஆகியோரைச் சந்தித்தார். 1978 பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் ராதிகாவுடன் நடித்தார். இவர் நாயகனாக நடித்த தமிழ் திரைப்படங்களில் சில 100 நாட்களை கடந்து ஓடியன. இவரும் ராதிகாவும் 11 படங்களில் இணைந்து நடித்து வெற்றி ஜோடியாக இருந்தனர்.

தமிழ் திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம்
1978 கிழக்கே போகும் ரயில் பரஞ்சோதி
1978 மனிதரில் இத்தனை நிறங்களா!
1979 இனிக்கும் இளமை
1979 மாந்தோப்புக்கிளியே
1979 பொண்ணு ஊருக்கு புதுசு
1979 கரை கடந்த ஒருத்தி
1979 நிறம் மாறாத பூக்கள் சுதாகர்
1979 சுவர் இல்லாத சித்திரங்கள் மூர்த்தி
1979 சக்களத்தி (திரைப்படம்)
1980 ஆயிரம் வாசல் இதயம் செந்தில்
1980 கல்லுக்குள் ஈரம் சுதாகர்
1980 சின்ன சின்ன வீடு கட்டி
1980 தைப்பொங்கல்
1980 அன்னபறவை
1980 சின்னஞ்சிறு கிளியே
1980 அழைத்தல் வருவேன்
1980 எதிர் வீட்டு ஜன்னல்
1980 கரும்பு வில்
1980 எங்க ஊர் ராசாத்தி
1980 மலர்களே மலருங்கள்
1980 ருசி கண்ட பூனை ரமேஷ்
1981 பெண்ணின் வாழ்கை
1981 ஒருத்தி மட்டும் கரையினிலே
1981 பெண் மனம் பேசுகிறது
1981 நதி ஒன்று கரை மூன்று
1982 துணைவி
1982 மாமியாரா மறுமகளா
1988 கைநாட்டு (திரைப்படம்)
1988 மதுரைக்கார‌தம்பி
1990 அதிசயப் பிறவி
2001 காதல் அழிவதில்லை
2018 தானா சேர்ந்த கூட்டம் அழகு மீனாவின் கணவர்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சுதாகர்_(நடிகர்)&oldid=21802" இருந்து மீள்விக்கப்பட்டது