கிழக்கே போகும் ரயில்
கிழக்கே போகும் ரயில் | |
---|---|
படிமம்:கிழக்கே போகும் ரயில்.jpg திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | பாரதிராஜா |
தயாரிப்பு | எஸ். ஏ. ராஜ்கண்ணு |
கதை | ஆர். செல்வராஜ் |
திரைக்கதை | பாரதிராஜா |
இசை | இளையராஜா |
நடிப்பு | சுதாகர் ராதிகா உஷா |
வெளியீடு | ஆகத்து 10, 1978[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கிழக்கே போகும் ரயில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பதினாறு வயதினிலே என்ற தனது முதல் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் ஒரு புரட்சியைத் தோற்றுவித்த இயக்குனர் பாரதிராஜா இயக்கிய இரண்டாவது திரைப்படம். இத்திரைப்படத்தில் சுதாகர், எம். ஆர். ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் வணிக அடிப்படையில் பெரும் வெற்றி அடைந்தது. திரையரங்குளில் 365 நாட்கள் ஓடியது.[2] இப்படம் தூர்ப்பு வெள்ளே ரைலு (తూర్పు వెళ్ళే రైలు) என்ற பெயரில் 1979 இல் தெலுங்கில் மறுஆக்கம் செய்யப்பட்டது.[3] பதினாறு வயதினிலே என்ற தனது முதல் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் ஒரு புரட்சியைத் தோற்றுவித்த இயக்குனர் பாரதிராஜா இயக்கிய இரண்டாவது திரைப்படம் "கிழக்கே போகும் ரயில்".
கிராமியச் சூழலில் பெருமளவில் வெளிப்புறப் படப்பிடிப்பாகவே தயாரிக்கப்பட்ட இப்படத்தில்தான் பின்னர் முன்னணிக் கதாநாயகியாகவும், இன்றளவும் வெற்றிகரமான தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளராகவும் விளங்கி வரும் ராதிகா அறிமுகமானார். அவரது முதற்படத்தைப் போலவே, கிராமியச் சூழலில் அநேகமாக வெளிப்புறப் படப்பிடிப்பாகவே தயாரிக்கப்பட்ட இப்படத்தில்தான் பின்னர் முன்னணிக் கதாநாயகியாகப் பல வருடங்களுக்கு விளங்கி, இன்றளவும் வெற்றிகரமான தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளராக விளங்கி வரும் ராதிகா அறிமுகமானார். நாவிதன் ஒருவரின் மகனான ஒரு ஏழைக் கிராமக் கவிஞன் மற்றும் அந்தக் கிராமத்திலேயே அடைக்கலம் புகும் கள்ளமற்ற பெண் ஒருத்தி ஆகியோரின் இடையிலான காதலை சுவைபடவும் இயற்கையாகவும் சித்தரித்த இப்படம் வர்த்தக ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்தது. இப்படத்தில் பாக்கியராஜ் உதவி இயக்குநராக பணியாற்றினார்.[4]
கதை
நாவிதன் ஒருவரின் மகனான ஒரு ஏழைக் கிராமக் கவிஞன் மற்றும் அந்தக் கிராமத்திலேயே அடைக்கலம் புகும் கள்ளமற்ற பெண் ஒருத்தி ஆகியோரின் இடையிலான காதலே இத்திரைப்படத்தின் கதைக்களமாகும்.
இளையராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரும் அளவு பிரபலமாயின. குறிப்பாக, கருநாடக இசை அடிப்படையில் அமைந்த "மாஞ்சோலைக் கிளிதானோ" என்னும் பாடல் பின்னணிப் பாடகர் ஜெயசந்திரனுக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்தது.
பாத்திரங்கள்
- பரஞ்சோதியாக சுதாகர்
- பாஞ்சாலியாக ராதிகா சரத்குமார்
- பட்டாளத்தாராக விஜயன்
- பாஞ்சாலியின் சகோதரி கருத்தம்மாவாக காந்திமதி
- பஞ்சாயத்து உறுப்பினராக ஜனகராஜ்
ஒலிப்பதிவு
கிழக்கே போகும் ரயில் | |
---|---|
ஒலிச்சுவடு
| |
வெளியீடு | 1978 |
ஒலிப்பதிவு | 1978 |
இசைப் பாணி | திரைப்பட ஒலிச்சுவடு |
நீளம் | 18:05 |
இசைத் தயாரிப்பாளர் | இளையராஜா |
இந்தப் படத்தின் பின்னணி இசையையும் பாடல்களையும் இளையராஜா இயற்றியிருந்தார்.[5] இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரும்புகழ் பெற்றன. குறிப்பாக, கருநாடக இசை அடிப்படையில் அமைந்த "மாஞ்சோலைக் கிளிதானோ" என்னும் பாடல் பின்னணிப் பாடகர் ஜெயசந்திரனுக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்தது.
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நேரம் |
---|---|---|---|---|
1 | "கோவில் மணியோசை" | மலேசியா வாசுதேவன் எஸ். ஜானகி |
கண்ணதாசன் | 4:39 |
2 | "மாஞ்சோலைக் கிளிதானோ" | பி. ஜெயச்சந்திரன் | முத்துலிங்கம் (கவிஞர்) | 4:40 |
3 | "பூவரசம்பூ பூத்தாச்சு" | எஸ். ஜானகி | கங்கை அமரன் | 4:42 |
4 | "மலர்களே" | மலேசியா வாசுதேவன் எஸ். ஜானகி |
சிற்பி பாலசுப்ரமணியம் | 4:04 |
குறிப்புகள்
- ↑ "கிழக்கே போகும் ரயில்". Vellitthirai.com. Archived from the original on 12 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 12 April 2018.
- ↑ Selvaraj, N. (20 March 2017). "வெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்" (in ta). Thinnai. http://puthu.thinnai.com/?p=34587.
- ↑ Ashok Kumar, S. R. (28 December 2007). "Back to acting, again!". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/back-to-acting-again/article2285161.ece.
- ↑ Ramakrishnan, M. (28 January 2017). "Young guns". The Hindu. http://www.thehindu.com/entertainment/movies/Young-guns/article17107898.ece.
- ↑ "kizhakae Pogum Rayil Songs". Raaga.com. பார்க்கப்பட்ட நாள் 10 December 2011.
வெளி இணைப்புகள்
இணைய திரைத் தரவுதளத்தில் கிழக்கே போகும் ரயில்