புதிய வார்ப்புகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
புதிய வார்ப்புகள்
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புமனோஜ் கிரியேஷன்ஸ்
கதைஆர். செல்வராஜ்
திரைக்கதைபாரதிராஜா, பாக்யராஜ்
இசைஇளையராஜா
நடிப்புபாக்யராஜ்
ரதி
வெளியீடுஏப்ரல் 14, 1979
நீளம்3936 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புதிய வார்ப்புகள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

கதைச்சுருக்கம்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

தாயமங்கலம் என்னும் கிராமத்துக்கு ஆசிரியர் பணிக்கு சண்முகமணி (பாக்கியராஜ்) வருகிறார். அந்த ஊர் கோயிலில் நாதசுரம் வாசிப்பவரின் மகளான ஜோதியும் சண்முகமணியும் காதலிக்கின்றனர். பெண் பித்தரான ஊர் நாட்டாமை ஜோதியை அடைய விரும்புகிறார். அதற்கு சண்முகமணி இடஞ்சலாக இருப்பதையும் உணருகிறார்.

ஊருக்கு புதியதாக வருகின்ற குடும்பநல சேவகியை வல்லுறவுக்கு ஆளாக்கி கொல்லும் நாட்டாமை, அந்தப் பழியை சண்முகமணி மீது சுமத்தி ஊரைவிட்டு அனுப்புகிறார். ஊரைவிட்டுச் செல்லும் சண்முகமணி ஜோதியை திரும்பவந்து திருமணம் முடித்து அழைத்துச் செல்வதாக உறுதியளித்து செல்கிறார்.

நடிகர்கள்

விருதுகள்

வெளி இணைப்புகள்

குறிப்புகளும் மேற்கோள்களும்

"https://tamilar.wiki/index.php?title=புதிய_வார்ப்புகள்&oldid=35689" இருந்து மீள்விக்கப்பட்டது