ஒரு கைதியின் டைரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஒரு கைதியின் டைரி
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புசந்திரலீலா பாரதிராஜா
கதைபாக்யராஜ்
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
ரேவதி
ராதா
ஜனகராஜ்
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புவி. ராஜகோபால்
விநியோகம்ஜனனி ஆர்ட் கிரியேஷன்ஸ்
வெளியீடு14 ஜனவரி 1985
ஓட்டம்152 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒரு கைதியின் டைரி 1985 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரேவதி மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் கதை பாக்யராஜ் எழுதியுள்ளார். வைரமுத்துவின் பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் திரையரங்குளில் 175 நாட்கள் ஓடிய வெற்றிப்படமாகும்.[1]

இத்திரைப்படமானது இந்தி மொழியில் கே. பாக்யராஜ் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ஜெயபிரதா, ஸ்ரீதேவி நடிப்பில் "ஆக்கிரி ராக்ஷ்ரா" எனும் பெயரில் படமாக்கப்பட்டது. ஒரு கைதியின் டைரி படம் தெலுங்கு மொழியில் "கைதி வீட்டா" எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளி வந்தது ஆயினும் இப்படம் தெலுங்கில் மீண்டும் கிருஷ்ணம் ராஜூ நடிப்பில் "மரண கோமம்" எனும் பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது.

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

நடிகர்கள்

  • கமல்ஹாசன் - டேவிட் / சங்கர் (தந்தை, மகன் என இருவேடம்)
  • ரேவதி - சாரதா
  • ராதா - ரோஸி
  • ஜனகராஜ் - வேலப்பன்
  • மலேசியா வாசுதேவன் - சூரியபிரகாஷம், அரசியல்வாதி
  • விஜயன் - டாக்டர். உன்னிகிருஷ்ணன்
  • வினு சக்ரவர்த்தி - காவல் ஆய்வாளர் எஸ். பி. விஸ்வநாதன்
  • ரா.சங்கரன்
  • வீரராகவன்
  • ஜெயபாலசந்திரன்
  • சேனாபதி
  • டைப்பிஸ்ட் கோபு
  • ராமநாதன்
  • சித்ரா லட்சுமணன்
  • ஆர்.கே.குமார்
  • முத்தையா
  • வெள்ளை சுப்பையா
  • கஜேந்திரகுமார்
  • ஜெயபால்
  • எம்.முருகேசன்
  • அனுராதா
  • வாணி

உருவாக்கம்

பாரதிராஜா மற்றும் கமல் இணைந்து 'டாப் டாக்கர்' என்ற படத்தை சுமார் 5 ஆயிரம் அடி எடுத்த பின் அதை நிறுத்திவிட்டனர். அத்திரைப்படமானது அதற்கு முன் வந்த சிகப்பு ரோஜாக்கள் படக்கதையை ஒத்து இருந்ததால் அப்படத்தை எடுக்கும் முடிவை கைவிட்டனர். இந்நிலையில் பாக்யராஜ் அவர்கள் பாரதிராஜாவிற்கு உதவ முன் வந்தார். பாக்யராஜ் எழுதிய கதையே 'ஒரு கைதியின் டைரி'யாக படமாக்கப்பட்டது.[2]

பாடல்கள்

இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். அனைத்து பாடல் வரிகளும் வைரமுத்து எழுதியுள்ளார்.

எண். பாடல் பாடகர்கள் நீளம்
1 "ஏபிசி(ABC) நீ வாசி" கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் 04:01
2 "இது ரோசா பூவு" வாணி ஜெயராம், கங்கை அமரன் 04:30
3 "நான் தான் சூரன்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் 04:31
4 "பொண்மானெ கோபம் ஏனோ" உண்ணிமேனன், உமா ரமணன் 04:34

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஒரு_கைதியின்_டைரி&oldid=31542" இருந்து மீள்விக்கப்பட்டது