சிட்டிசன்
சிட்டிசன் | |
---|---|
இயக்கம் | சரவண சுப்பையா |
தயாரிப்பு | எஸ். எஸ். சக்கரவர்த்தி |
கதை | சுஜாதா |
வசனம் | பாலகுமாரன் |
இசை | தேவா |
நடிப்பு | அஜித் குமார் வசுந்தர தாஸ் மீனா நக்மா மணிவண்ணன் |
வெளியீடு | 2001 |
ஓட்டம் | 172 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹20 கோடி ($ 4.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) |
சிட்டிசன் 2001 ஆம் ஆண்டில் சரவண சுப்பையா இயக்கத்தில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். இது எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிப்பிலும் எஸ். சுப்பிரமணியத்தின் வழிகாட்டலிலும் அஜித் குமார், வசுந்தரா தாஸ், மீனா, நக்மா மற்றும் மணிவண்ணனின் நடிப்பில் உருவாகிய திரைப்படமாகும். இதற்கான இசையைத் தேவா உருவாக்கியிருந்தார். இத்திரைப்டத்தில் அஜித் குமார் 9 வேடங்களில் தோன்றியது குறிப்பிடத்தக்கதாகும்.
திரைக்கதை
ஒரு மாவட்ட கலெக்டர், நீதிபதி, காவற்துறை அதிகாரி ஆகியோர் பகல் நேரத்திலேயே கடத்தப்படுகின்றனர். இதற்கு சிட்டிசன் (அஜித்) என்பவரே உரிமை கோருகின்றார். மத்திய புலனாய்வுப் பிரிவு அலுவலர் சரோஜினி (நக்மா) இவற்றைப் ஆராய்ந்தபோது இவர்கள் அத்திப்பட்டி என்னும் ஒரு சிறு மீனவக் கிராமத்துடன் தொடர்பிருந்தமையும் அதில் இருந்த 600 கிராமத்தவர்களும் அடையாளமே இல்லாதபடி அழித்தொழிந்து போயிருந்தமை தெரியவருகின்றது. பல்லாண்டுகளுக்கு முன்னர் இக்கிராமத்தில் ஒரு கூட்டுப் படுகொலை நிகழ்ந்ததும் தெரியவருகின்றது. பின்னர் திரையில் சிட்டிசன் 20 வருடங்களிற்கு முன்னர் சிறுவனாக இருந்து எவ்வாறு காப்பாற்றப்பட்டது என்பது தெரியவருகின்றது.
நடிப்பு
நடிகர் மற்றும் நடிகர்கள் | கதாபத்திரம் |
---|---|
அஜித் | அறிவானந்தம், அப்துல்லா, அந்தோனி, சிட்டிசன் மற்றும் சுப்ரமணி |
வசுந்தர தாஸ் | இந்து |
மீனா | ஜெவிலி |
நக்மா | CBI சரோஜி அரிச்சந்திரன் |
பாண்டியன் | 'வாப்பா' |
'நிழல்கள்' ரவி | கலெக்டர் சந்தானம் |
தேவன் | DGP தேவசகாயம் |
அஜய் ரத்னம் | ACP கிருஷ்ண மூர்த்தி |
கொச்சி ஹனிபா | மன்மதக் குட்டி |
ஷர்மிளா | ஃபாத்திமா |
பாடல்கள்
சிட்டிசன் | |
---|---|
இசையமைப்பாளர்
| |
வெளியீடு | 2001 |
இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் |
மொழி | தமிழ் |
இசைத் தயாரிப்பாளர் | தேவா |
தேவாவின் இசையமைப்பில் உருவான இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றன. பாடகர் திப்பு பாடிய மேற்கே உதிக்கும் சூரியனே எனும் பாடல் மிகச் சிறப்பான ஒரு வெற்றிப் பாடலாகும். அனைத்து பாடல்களையும் எழுதியவர் வைரமுத்து. "ஐ லைக் யூ" என்ற பாடல் ஐ பீல் லோன்லி என்ற பாடலை ஒத்திருந்தது. "பூக்காரா" என்னும் பாட்டு டேக் எ சேன்ஸ் ஆன் மீ என்னும் பாடலில் சாயலில் இருந்தது.[1]
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "ஆஸ்திரேலிய தேசம் " | ஹரிஹரன், ஹரிணி | 6:46 | |
2. | "மேற்கே உதிக்கும் சூரியனே" | திப்பு | 6:12 | |
3. | "பூக்காரா பூக்காரா" | சங்கர் மகாதேவன், வசுந்தரா தாஸ் | 6:20 | |
4. | "சிக்கிமுக்கி கல்லு" | சங்கர் மகாதேவன், சாதனா சர்கம், | 6:51 | |
5. | "ஐ லைக் யூ" | வசுந்தரா தாஸ் | 6:52 |
மேற்கோள்கள்
- ↑ Paneerselvam Umamaheswaran; Shravan Ramachandran; Shivadas D S (2020). "Retrospective Analysis of Plagiaristic Practices within a Cinematic Industry in India – a Tip in the Ocean of Icebergs". Journal of Academic Ethics 18 (2): 143–153. doi:10.1007/s10805-020-09360-7.
- Album articles with non-standard infoboxes
- Articles with hAudio microformats
- Album infoboxes lacking a cover
- Pages using infobox album with empty type parameter
- 2001 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- அஜித் குமார் நடித்துள்ள திரைப்படங்கள்
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- பழிவாங்குதல் குறித்தான திரைப்படங்கள்
- மீனா நடித்த திரைப்படங்கள்