சாருஹாசன்
சாருஹாசன் | |
---|---|
பிறப்பு | சனவரி 5, 1931 பரமக்குடி, மதராஸ் மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இருப்பிடம் | ஆழ்வார் பேட்டை, சென்னை, இந்தியா |
பணி | வழக்கறிஞர் திரைப்பட நடிகர் |
பெற்றோர் |
|
பிள்ளைகள் |
|
உறவினர்கள் |
|
சாருஹாசன் (பிறப்பு 5 சனவரி 1931) ஓர் இந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி நடிகர் மற்றும் ஓய்வுபெற்ற வழக்கறிஞர் ஆவார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1987ஆம் ஆண்டில் தபெரனா கதெ என்னும் கன்னடத் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, சிறந்த நடிகருக்கான இந்திய அரசு திரைப்பட விருது, சிறந்த நடிகருக்கான கர்நாடக அரசு திரைப்பட விருது ஆகிய விருதுகளை வென்றுள்ளார்.[1] இவர், நடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ஊரில் வாழ்ந்த டி. சீனிவாசன் -ராஜலட்சுமி இணையரின் மூத்த மகனாக 5 சனவரி 1931ஆம் நாள் பிறந்தார்.2014 ஆம் ஆண்டில் குங்குமம் இதழுக்கு எழுதிய கட்டுரையில், "என் தந்தையார் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவருடைய குருவாக விளங்கிய யாகூப் ஹஸன் என்ற பெரியவரின் பெயரை தன் மூன்று பிள்ளைகளுக்கும் நன்றிக் கடனாகப் பெயரிட்டார்", என தன்னுடைய மற்றும் சகோதரர்கள் சந்திரஹாசன், கமல்ஹாசன் பெயர் காரணம் பற்றி தெரிவித்துள்ளார்.[2]
திரை வாழ்க்கை
நடித்த திரைப்படங்கள்
- உதிரிப்பூக்கள் (1979)
- நெஞ்சத்தை கிள்ளாதே (1980)
- நிழல்கள் (1980)
- மூன்று முகம் (1982)
- ராணித்தேனீ (1982)
- அக்னி சாட்சி (1982)
- ஊருக்கு உபதேசம் (1984)
- மீண்டும் ஒரு காதல் கதை (1985)
- விக்ரம் (1986)
- ராஜ மரியாதை (1987)
- வேதம் புதிது (1987)
- பாச பறவைகள் (1988)
- தளபதி (1991)
- அன்பு சங்கிலி (1991)
- நாட்டுக்கு ஒரு நல்லவன் (1991)
- வீரா (1994)
- தென்றல் வரும் தெரு (1994)
- ஜெய்ஹிந்த் (1994)
- ராஜாவின் பார்வையிலே (1995)
- காதலே நிம்மதி (1998)
- வேலை (1998)
- தா தா 87 (2019)
மேற்கோள்கள்
- ↑ Subha J Rao, "Entertainment for a cause பரணிடப்பட்டது 2004-09-27 at the வந்தவழி இயந்திரம்", தி இந்து, 30 August 2004
- ↑ சாருஹாசன் (10 நவம்பர் 2014). "அழியாத கோலங்கள்!". குங்குமம் இம் மூலத்தில் இருந்து 2021-07-16 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20210716085339/http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=7886&id1=6&issue=20141110. பார்த்த நாள்: 16 சூலை 2021.
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சாருஹாசன்
- Autobiography of Charuhasan
- 27 October 1998, ரெடிப்.காம்
- 9 April 2009 பரணிடப்பட்டது 2009-09-10 at the வந்தவழி இயந்திரம், தி இந்து
- 9 July 2002 பரணிடப்பட்டது 2003-06-24 at the வந்தவழி இயந்திரம், தி இந்து
- Journalists' forum call to combat campaign against actresses பரணிடப்பட்டது 2005-11-26 at the வந்தவழி இயந்திரம், 24 November 2005, தி இந்து
- When the living was easy பரணிடப்பட்டது 2009-09-10 at the வந்தவழி இயந்திரம், 1 April 2009, தி இந்து
- Legal actor பரணிடப்பட்டது 2009-09-10 at the வந்தவழி இயந்திரம், 26 August 2004, தி இந்து
- Candour, Charuhasan style, 23 August 2012, தி இந்து