சரண்ராஜ்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
சரண்ராஜ் |
பிறப்புபெயர் |
பொம்மாயி |
பிறந்ததிகதி |
ஏப்ரல் 27, 1958 (1958-04-27) (அகவை 66)[1] |
பிறந்தஇடம் |
பெளகவி, கணப்பூர், கர்நாடகா |
பணி |
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், இசையமைப்பாளர் |
தேசியம் |
இந்தியன் |
துணைவர் |
கல்பனா சரண்ராஜ் |
பிள்ளைகள் |
தேஜ்ராஜ், ஈஸ்வரி, தேவேந்திர ராஜ் |
சரண்ராஜ் (Charan raj) இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் திரைப்படங்களில் இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு துறையில் தன் பங்களிப்பை செய்துள்ளார். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் அனைத்திலும் பங்களிப்பு செய்துள்ளார்.[2] ஜென்டில்மேன், பிரதிகதனா, இந்தருடு சந்தருடு மற்றும் கர்தவ்யம் போன்ற திரைப்படங்கள் சரண்ராஜ் நடிப்பில் வெளியான முக்கியமான திரைப்படங்கள். இவர் நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்த வெற்றித் திரைப்படங்களில் தர்மதுரை, பாட்ஷா, பாண்டியன் மற்றும் வீரா ஆகியவை குறிப்பிடத்தக்கன. இவர்தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கன்னட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். கன்னடத் திரைப்பட இயக்குநரான சித்தலிங்கய்யா இவரின் ஆசானாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். இவரது மகன் தேஜ் சரண்ராஜ் 2017 ஆம் ஆண்டு வெளியான "லாலி லாலி ஆராரோ" படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.[3]
திரைப்படப் பணி
சரண்ராஜ் 1984 ஆம் ஆண்டு தாலிய பாக்யா என்ற படத்தில் அறிமுகமானார். இப்படத்தைத் தயாரித்த ஏ. எல். அப்பையா அவர்கள் தயாரித்த அனைத்துத் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். 1987 ஆம் ஆண்டு வெளியான நீதிக்குத் தண்டனை திரைப்படம் தமிழில் அவரின் முதல் திரைப்படமாகும். 1990 ஆம் ஆண்டு முதல் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் துவங்கினார். அண்ணன் தங்கச்சி இவர் இயக்கிய முதல் திரைப்படமாகும். இப்படத்தை இவரே தயாரித்தார். 2005 ஆம் ஆண்டு இவர் இயக்குவதாக இருந்த "புதுசா இருக்கு" என்ற திரைப்படம் தயாரிப்பிலேயே நின்றுபோனது.[4]
சர்ச்சை
2014 ஆம் ஆண்டு சரண்ராஜ் ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் கைத்துப்பாக்கியுடன் நுழைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.[5]
திரைப்படத்துறை
கன்னடம்
ஆண்டு
|
திரைப்படம்
|
1983
|
ஆஷா
|
1984
|
தாலியா பாக்யா
|
1985
|
தாயியா கோன்
|
1985
|
மாருதி மகிமே
|
1986
|
ஆப்பிரிக்காதள்ளி ஷீலா
|
1987
|
இருதய பல்லவி
|
1994
|
கந்ததா குடி - பாகம் 2
|
1995
|
சமரா
|
1996
|
தவரினா தொட்டிலு
|
1996
|
காட் பாதர்
|
1996
|
அன்னவரா மக்களு
|
1997
|
மகாபாரதா
|
1997
|
சிபிஐ துர்கா
|
2000
|
சூரப்பா
|
2000
|
பபிகளா லோகதல்லி
|
2001
|
மாபியா
|
2002
|
டாடி நம்பர் 1
|
2003
|
ஸ்ரீ ரேணுகாதேவி
|
2003
|
ஒண்டகோண பா
|
2005
|
குட், பேட் அண்ட் அக்லி
|
2005
|
கடிபர்
|
2006
|
திருப்பதி
|
2010
|
மிஸ்டர். தீர்த்தா
|
2011
|
ஸ்வயம் கிருஷி
|
2012
|
சிக்கரி
|
2013
|
ராஜா கூலி
|
2015
|
ரதவரா
|
தமிழ்
தெலுங்கு
ஆண்டு
|
திரைப்படம்
|
1986
|
பிரதிகட்டனா
|
1987
|
ஆரண்யகாண்ட
|
1987
|
அமெரிக்கா அப்பாயி
|
1987
|
டோங்கா மொகுடு
|
1987
|
ஸ்வயம் க்ருஷி
|
1987
|
இந்திருடு சந்துருடு
|
1990
|
மா இன்டி கதா
|
1991
|
சூர்யா இ.பி.எஸ்
|
1991
|
கர்தவ்யம்
|
1993
|
ஆஷாயம்
|
1993
|
காயம்
|
1994
|
ஹலோ பிரதர்
|
1994
|
பல்நடி பௌருஷம்
|
1994
|
போலீஸ் பிரதர்ஸ்
|
1995
|
சிலகபாச்சா காபுரம்
|
1997
|
பெடடன்னய்யா
|
1997
|
எகிரெ பாவுரமா
|
1998
|
ராணா
|
1998
|
சூரியூடு
|
2000
|
வம்சகோதரக்குடு
|
2000
|
அடவி சுக்கா
|
2001
|
அம்மா நாகம்மா
|
2005
|
நா அல்லுடு
|
2005
|
அத்தடு
|
2006
|
அசதியுடு
|
2009
|
கரண்ட்
|
2010
|
எம் பில்லோ எம் பில்லடோ
|
2010
|
கொமரம் புலி
|
2012
|
யதார்த்த பிரேம கதா
|
2012
|
அதிநாயக்குடு
|
2014
|
பைசா
|
இந்தி
ஆண்டு
|
திரைப்படம்
|
1987
|
பிரதிகாட்
|
1987
|
குட்ரட் கா கானூன்
|
1991
|
பூல் பானே ஆங்கரே
|
1991
|
ஹப்டா பந்த்
|
1992
|
போலீஸ் ஆர் முஜ்ரிம்
|
1994
|
தேஜஸ்வினி
|
1996
|
மாபியா
|
2001
|
ஹசன் கே லூடெரே
|
ஒடிசா
- ஜா தேவி சர்வா பூதேஷு (1989)
மலையாளம்
- ஒலியம்புகள் (1990)
- லெலாம் (1997)
- ரெட் இந்தியன்ஸ் (2001)
- போக்கிரி ராஜா (2010)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்