கனகதுர்கா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கனகதுர்கா
பிறப்புஇந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1970 – முதல்
வாழ்க்கைத்
துணை
கேமச்சந்திரன் (இறப்பு- 2001)
பிள்ளைகள்மனாசா

கனகதுர்கா (Kanakadurga) என்பவர் மலையாள திரைப்படங்களில் நடித்ததற்காக நன்கு அறியப்பட்ட ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் ஆந்திராவின் விசயவாடாவைச் சேர்ந்தவர்.[1] மலையாள திரைப்படமான நெல்லு படத்தில் குருமத்தியாக அறிமுகமானார். இவர் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள ஒளிப்பதிவாளர் கேமச்சந்திரனை மணந்தார். இவரது மகள் மானசா பிக் பி, காக்கி, ஜூபிலி, கல்கத்தா நியூஸ், தி ஸ்னேக் அண்ட் லேடர் போன்ற மலையாள திரைப்படங்களிலும், நந்தனவனம் 120 கி. மீ. சங்கர் போன்ற தெலுங்கு திரைப்படங்களிலும் தமிழ் தொலைக்காட்சித் தொடரான உதிரிப்பூக்களிலும் நடித்துள்ளார்.[2][3] இவர் இப்போது தொலைகாட்சி திரைப்படங்கள் மற்றும் சோப் ஓபராக்களில் நடித்து வருகிறார்.[4]

திரைப்படவியல்

மலையாளம்

  • ஜெயன்-புராணத்தின் பின்னணியில் உள்ள மனிதன் (2010) -ஆவணப்படம்
  • சூத்ரதரன் (2001) பாரதி அக்கா
  • வேட்டா (1984)
  • என்டே கிராமம் (1984)
  • என்னே ஜான் தெடுன்னு (1983) சாரதா
  • இத்தும் ஒரு ஜீவிதம் (1982)
  • காலம் (1982)
  • மருபாச்சா (1982) துர்கா
  • கொரிதாரிச்சா நால் (1982)
  • கொடுமுடிகல் (1981)
  • தாவரா (1981) தேவகி
  • அரியாபேத ரகசியம் (1981) சரோஜ
  • காட்டுக்களளன் (1981)
  • ரந்து முகங்கல் (1981)
  • காட்டுபோத்து (1981)
  • அக்னிசேத்திரம் (1980) -சாந்தா
  • ஆரோகனம் (1980) தேவி
  • இடிமுழக்கம் (1980) காயத்ரிதேவி/மேரிக்குட்டி
  • மகரவிளக்கு (1980)
  • பிராலயம் (1980) -லட்சுமி
  • சக்தி (1980)
  • கரிம்பனா (1980)
  • இவல் ஈ வழிவரே (1980)
  • அபிமன்யு (1980)
  • அக்னிவ்யோஹம் (1979)
  • சிகரங்கல் (1979)
  • சிம்மாசனம் (1979) மாதவி
  • இரும்பழிக்கல் (1979) சைனபா
  • தாரங்கம் (1979) ஜானுவாக
  • அவனோ அதோ அவளோ (1979)
  • விஜயம் நம்முடே சேனாணி (1979)
  • வலைதவன் வலல் (1979)
  • ரக்தமில்லாத மனுஷ்யன் (1979)
  • கதிர்மண்டபம் (1979)
  • நிழலுகல் ரூபங்கல் (1979)
  • உத்தராதராத்ரி (1978)
  • இத்தா ஒரு மனுஷ்யன் (1978)
  • லிசா (1978) முன்னாள் விடுதிக் காவலர்
  • சினேகதிண்டே முகங்கல் (1978) சாவித்ரி
  • சத்யவதியாக எத்தோ ஒரு சுவப்னம் (1978)
  • கேமாந்தராத்ரி (1978)
  • அடவுகல் பத்தினேட்டு (1978)
  • வடக்கக்கு ஒரு கிருதயம் (1978) மாலினி
  • அஷ்டமங்கள்யம் (1977)
  • நூராயும் பாதாயும் (1977)
  • கர்ணபர்வம் (1977)
  • துருப்புகுலன் (1977)
  • மோகினியாட்டம் (1976) அனசோயா
  • தேம்மாடி வேலப்பன் (1976) மாதவி
  • பிக் பாக்கெட் (1976) மாதவிகுட்டி/கௌரிமாதா
  • தீக்கனல் (1976)
  • தாமஸ்லீஹா (1975)
  • ராசலீலா (1975)
  • நெல்லு (1974) குருமத்தி
  • மழக்காரு (1973) -மாலதி
  • நிர்தஷாலா (1972) -சிந்து

தமிழ்

தெலுங்கு

  • பிரைவேட் மாஸ்டர் (1967)
  • மஞ்சி குடும்பம் (1968) கமலா
  • அந்தலா ராமுடு (1973) பாரம்பரிய நடனக் கலைஞர்
  • அபிமனவந்துளு (1973)
  • நிந்துக் குடும்பம் (1973)
  • சிறீ கனகதுர்கா மகிமா (1973)

கன்னடம்

  • மாயா மனுஷ்ய (1976)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கனகதுர்கா&oldid=22531" இருந்து மீள்விக்கப்பட்டது