அம்பிகா (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அம்பிகா
Malayalam actress Ambika.jpg
இயற் பெயர் அனிதா
பிறப்பு நவம்பர் 16, 1962 (1962-11-16) (அகவை 62)
இந்தியா கல்லாரா, திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1979 - தற்போது வரை

அம்பிகா ஒரு திரைப்பட நடிகை. அவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.தற்போது நாயகி என்ற சீரியலில் நடித்து வருகிறார். அவரது சகோதரி ராதாவும் சமகாலத்தில் திரைப்பட நடிகையாகத் திகழ்ந்தனர்.[1][2][3]

தனிப்பட்ட வாழ்க்கை

திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லரா கிராமத்தில் (கல்லாரா, திருவனந்தபுரம்) குஞ்சன் நாயர் மற்றும் சரசம்மா ஆகியோருக்கு 1962 இல் அனிதா என்ற இயற்பெயருடன் பிறந்தார். திரையுலகிற்காக அம்பிகா என்று பெயரை மாற்றி கொண்டார். அவரது தாயார் கல்லாரா சரசம்மா கேரள மாநில மஹிலா காங்கிரஸ் தலைவராக இருந்தார். அவருக்கு இரண்டு தங்கைகள், ராதா மற்றும் மல்லிகா, மற்றும் இரண்டு இளைய சகோதரர்கள், அர்ஜுன் மற்றும் சுரேஷ் உள்ளனர்.

அம்பிகா 1988 இல் என்.ஆர்.ஐ. பிரேம்குமார் மேனனை மணந்தார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்,பிறகு அமெரிக்காவில் குடியேறினர். இருப்பினும், அவர்கள் 1996 இல் விவாகரத்து பெற்றனர். பின்னர், அவர் 2000 ஆம் ஆண்டில் நடிகர் ரவிகாந்தை மணந்தார் , பின்னர் 2002 இல் விவாகரத்தில் முடிந்துவிட்டது . அவர் தற்போது தனது மகன்களுடன் சென்னையில் வசிக்கிறார்.

திரைப்படங்கள்

தமிழ்த் திரைப்படங்கள்

மலையாளத் திரைப்படங்கள்

  • கூட்டு (2004)
  • வர்ணக்காழ்சகள் (2000)
  • உதயபுரம் சுல்த்தான் (1999)
  • நிறம் (1998)
  • காக்கோத்தி காவிலெ அப்பூப்பன் தாடிகள் (1988)
  • இருபதாம் நூற்றாண்டு (1987)
  • விளம்பரம் (1987)
  • வழியோரக்காழ்சகள் (1987)
  • எழுதாப்புறங்கள் (1987)
  • ராஜாவின்றெ மகன் (1986)
  • ஒரு நோக்கு காணான் (1985)
  • மறக்கில்லொரிக்கலும் (1983)
  • கேள்க்காத்த சப்தம் (1982)
  • பூவிரியும் புலரி (1982)
  • மணியன் பிள்ள அதவ மணியன் பிள்ள (1981)
  • அங்ஙாடி (1980)
  • அணியாத வளகள் (1980)
  • தீக்கனல் (1980)
  • இடவழியிலெ பூச்ச மிண்டாப்பூச்ச (1979)
  • மாமாங்கம் (1979)

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அம்பிகா_(நடிகை)&oldid=22310" இருந்து மீள்விக்கப்பட்டது