சகலகலா வல்லவன்
Jump to navigation
Jump to search
சகலகலா வல்லவன் | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | எம். குமரன், எம். சரவணன், எம். பாலசுப்ரமணியன் |
கதை | பஞ்சு அருணாசலம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பாபு |
படத்தொகுப்பு | ஆர். விட்டல் |
கலையகம் | ஏவிஎம் புரொடக்ஷன் |
விநியோகம் | ஏவிஎம் புரொடக்ஷன் |
வெளியீடு | ஆகத்து 14, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹8.5 கோடி |
சகலகலா வல்லவன் (Sakalakala Vallavan) 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அம்பிகா, வி. கே. ராமசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் 1979-ல் வெளியான திரிசூலம் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.[1] இத்திரைப்படம் 175 நாட்கள் மேல் ஓடிய வெற்றி திரைப்படமாகும்.[2][3]
இளையராஜாவின் இசையமைப்பில் உருவான பாடல்களை கவிஞர் வாலி இயற்றியிருந்தார்.
நடிகர்கள்
- கமல்ஹாசன் - வேலு
- அம்பிகா - கீதா
- ரவீந்திரன் - பழனி
- துளசி - வள்ளி, வேலுவின் தங்கை.
- வி. கே. ராமசாமி - ராமையா பிள்ளை
- ஒய். ஜி. மகேந்திரன் - பூனை
- தேங்காய் சீனிவாசன் - சுந்தரம்
- சில்க் ஸ்மிதா - லலிதா
- டி. எம். சாமிகண்ணு - சின்னையா பிள்ளை, வேலுவின் தந்தை.
- எஸ். என். பார்வதி - வேலுவின் தாயார்.
- ஓமக்குச்சி நரசிம்மன் - வேலையாள்
பாடல்கள்
சகலகலா வல்லவன் | |
---|---|
திரைப்படம்
| |
வெளியீடு | 1982 |
ஒலிப்பதிவு | 1982 |
இசைப் பாணி | திரைப்படத்தின் ஒலிப்பதிவு |
நீளம் | 28:35 |
இசைத்தட்டு நிறுவனம் | ஏவிஎம் |
இசைத் தயாரிப்பாளர் | எம். குமரன் எம். சரவணன் எம். பாலசுப்பிரமணியம் |
இளையராஜா அவர்கள் இப்படத்திற்கு பாடல் இசை அமைத்துள்ளார், வாலி அவர்கள் பாடல் வரிகள் எழுதியுள்ளார். "நிலா காயுது" எனும் பாடல் மத்தியமாவதி ராகம் அடிப்படையாக கொண்டது. "இளமை இதோ இதோ" பாடலானது புதுவருட கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் பிரபலமான பாடலாகும்.
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | இளமை இதோ இதோ ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வாலி | |
2 | நிலா காயுது ... | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | வாலி | |
3 | அம்மன் கோயில் ... | இளையராஜா | வாலி | |
4 | நேத்து ராத்திரி ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வாலி | |
5 | கட்டவண்டி கட்டவண்டி (ஆண்)... | மலேசியா வாசுதேவன் | வாலி | |
6 | கட்டவண்டி கட்டவண்டி (பெண்) ... | எஸ். பி. சைலஜா | வாலி |
மேற்கோள்கள்
- ↑ கண்ணன், முரளி (14 ஏப்ரல் 2020). "``ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே, எந்தத் தோட்டாவும் என்ன துளைக்காதே!" - கமல் சொல்லி அடித்த `அபூர்வ சகோதரர்கள்'". ஆனந்த விகடன் இம் மூலத்தில் இருந்து 2020-04-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200423042711/https://cinema.vikatan.com/tamil-cinema/special-article-about-31-years-of-aboorva-sagotharargal-movie.
- ↑ "கமல் 25 : பிறந்தநாள் ஸ்பெஷல்". தினமலர். 7 நவம்பர் 2016 இம் மூலத்தில் இருந்து 2017-02-14 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170214042048/http://cinema.dinamalar.com/tamil-news/52826/cinema/Kollywood/Kamal-25-Birthday-special.htm.
- ↑ ராம்ஜி, வி. (14 ஆகஸ்ட் 2020). "’இளமை இதோ இதோ’, ‘நிலா காயுது’ , ‘நேத்து ராத்திரி யம்மா’; 38 வருடங்களாக மனதில் நிற்கிறான் ‘சகலகலா வல்லவன்’!". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/569858-38-years-of-sakalakala-vallavan.html.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- Album articles with non-standard infoboxes
- Articles with hAudio microformats
- Album infoboxes lacking a cover
- 1982 தமிழ்த் திரைப்படங்கள்
- கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- அம்பிகா நடித்த திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- எஸ். பி. முத்துராமன் இயக்கிய திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- சில்க் ஸ்மிதா நடித்த திரைப்படங்கள்