மேஜர் சுந்தரராஜன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மேஜர் சுந்தரராஜன்
மேஜர் சுந்திரராஜன்.jpeg
மேஜர் சந்திரகாந்த் படத்தில் ஒரு காட்சி
இயற் பெயர் சுந்தரராஜன்
பிறப்பு (1935-03-17)மார்ச்சு 17, 1935
தேனி, பெரியகுளம், சென்னை மாகாணம் இந்தியா இந்தியா
இறப்பு பெப்ரவரி 28, 2003(2003-02-28) (அகவை 67)
சென்னை, இந்தியா
வேறு பெயர் மேஜர்
தொழில் நடிகர், இயக்குனர், திரைக்கதாசிரியர்
நடிப்புக் காலம் 1965–2003
துணைவர் ஷியமலா

மேஜர் சுந்தரராஜன் என்று பரவலாக அறியப்பட்ட சுந்தரராஜன் (Major Sundarrajan, 17 மார்ச்சு 1935 – 28 பெப்ரவரி 2003), 1965 முதல் 2003 வரை தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வந்த ஓர் திரைப்பட நடிகர்[1][2][3], இயக்குநர் ஆவார். மேஜர் சந்திரகாந்த் என்ற மேடைநாடகத்திலும் பின்னர் அதே பெயரிலான திரைப்படத்திலும் அவர் சிறப்பாக முன்னணி வேடத்தில் நடித்ததை ஒட்டி அவர் மேஜர் சுந்தர்ராஜன் என்று அழைக்கப்படலானார். திரைப்படங்களில் இவரது குரல்வளமைக்காகவும், உச்சரிப்புத் தெளிவிற்காகவும் சிறப்பானவராகக் கருதப்பட்டார்.

வாழ்க்கை வரலாறு

தேனி மாவட்டம் பொியகுளத்தை சேர்ந்த சுந்தரராஜன் அவா்கள் ஶ்ரீனிவாசன்-பத்மாசினி ஆகியோருக்கு மகனாக பிறந்தாா், சுந்தர்ராஜன் இளமையிலே சென்னையில் அவர் சித்தப்பா வீரராகவன் அவர்கள் தொலைபேசித்துறையில் அலுவலராக வேலை பார்த்துவந்தார் அவர் உதவியுடன் சுந்தரராஜன் தொலைபேசிதுறையில் முழுநேரமாகப் பணி புரிந்துகொண்டே ஓய்வுநேரங்களில் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். 1962ஆம் ஆண்டு இயக்குனர் சோமுவின் பட்டினத்தார், என்ற திரைப்படத்தில் சோழ மன்னர் ஆக நடித்து திரைப்படங்களில் நுழைவு பெற்றார். மேலும் அந்த திரைப்படத்திற்க்கு பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த மேஜர் சந்திரகாந்த் திரைப்படத்தில் கண் பார்வையற்ற பதவி ஓய்வு பெற்ற இராணுவ தளபதி "மேஜா்" சந்திரகாந்த் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனால் இவருக்கு இந்த படத்தின் கதாபாத்திர பெயரான மேஜா் என்ற பெயரே நிலையானது.

இவர் 900க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு வகையான வேடங்களேற்று நடித்துள்ளார். இதில் சர்வர் சுந்தரம், குழந்தையும் தெய்வமும், மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல், பாமா விஜயம், மோட்டார் சுந்தரம் பிள்ளை, விவசாயி, உயர்ந்த மனிதன், தெய்வமகன், தெய்வச்செயல், தேடிவந்த மாப்பிள்ளை, எதிரொலி, ஞான ஒளி, வசந்த மாளிகை, நல்ல நேரம், நான் ஏன் பிறந்தேன், கௌரவம், தங்கப்பதக்கம், அவன்தான் மனிதன், அபூர்வ ராகங்கள், டாக்டர் சிவா, உத்தமன், திரிசூலம். போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்த க்கவையாக அமைந்தன. மேலும் எம். ஜி. ஆருக்கு தந்தை ஆக விவசாயி படத்திலும் சிவாஜி கணேசனுக்கு தந்தை ஆக என் தம்பி படத்திலும் முதல் முதலாக இரு நடிப்பு மேதைகளுக்கும் தந்தை ஆக நடித்தாா். கூடவே மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். இவர் சில மலையாள, தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[4] ஆறு படங்களை இயக்கியுள்ளார்.

அரசியலில் இந்திய தேசிய காங்கிரசு பற்றாளராக இருந்த இவர் நடிகர் சிவாஜி கணேசன் துவக்கிய தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியில் இணைந்து அவருடனேயே பணியாற்றினார். பின்னர் சிவாஜி கணேசன் ஜனதா தளம் கட்சியில் இணைந்தபோது இவரும் இணைந்து கொண்டார்.

இவரது மகன் கௌதம் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.

மேற்கோள்கள்

  1. Sundarrajan, IMDb, retrieved 2008-12-14
  2. "`Major' Sundararajan dead". தி இந்து. 1 March 2003. http://www.thehindu.com/thehindu/2003/03/01/stories/2003030105280400.htm. பார்த்த நாள்: 28 May 2018. 
  3. P, Haresh (15 March 2003). "Obituary: 'Major' Sundararajan" (in en). தி கார்டியன். https://www.theguardian.com/news/2003/mar/15/guardianobituaries.artsobituaries1. பார்த்த நாள்: 28 May 2018. 
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2010-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100811034225/http://hinduonnet.com/thehindu/2003/03/01/stories/2003030105280400.htm. 
"https://tamilar.wiki/index.php?title=மேஜர்_சுந்தரராஜன்&oldid=21185" இருந்து மீள்விக்கப்பட்டது