சிகை (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிகை
சுவரிதழ்
இயக்கம்ஜெகதீசன் சுப்பு
தயாரிப்புலோகு
கதைஜெகதீசன் சுப்பு
M.K.மணி
அரவிந்தன்
இசையோஹான்
நடிப்புகதிர் (நடிகர்)
மீரா நாயர்
ராஜ் பரத்
ரித்விகா
மயில்சாமி (நடிகர்)
ஒளிப்பதிவுநவின் குமார்
படத்தொகுப்புஅணுசரன்
கலையகம்டிவைன் ஸ்டூடியோஸ்
விநியோகம்ஜீ5
வெளியீடு9 சனவரி 2019[1]
ஓட்டம்102 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிகை (ஆங்கிலம்:SIGAI ) என்பது ஜகதீசன் சுப்பு[1] இயக்கி 2019 இல் வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும் இப்படத்தில் கதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் மீரா நாயர், ராஜ் பரத், ரித்விகா மற்றும் மயில்சாமி ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இந்த திரைப்படம் அண்ணா நகரில் ஒரே நாளில் நடக்கும் நிகழ்வுகளை சித்தரிக்கிறது.[2] இந்த படத்தில் கதிர் ஒரு திருநங்கை வேடத்தில் நடிக்கிறார். தனது பள்ளி நண்பரை சந்திக்க இந்தியாவுக்கு வரும் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் இரண்டு அப்பாவி மக்களின் உயிரைப் பறிக்கும் ஒரு பெரிய விபத்துக்கு அவரின் உடைமை மற்றும் அவரது நண்பருடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. மூன்றாம் பாலினத்தின் காதல், காமம் மற்றும் வாழ்க்கையை வெளிச்சத்தில் அதிகம் வராத கதையாக உள்ளது. தனது நெருங்கிய நண்பர் தனது உணர்ச்சிகளைப் புறக்கணித்து மற்ற பெண்ணுடன் தோழமையைத் தேடும்போது கதிர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இது ஒரு ஜீ5 யின் அசல் படம் மற்றும் இணையத்தில் ஜீ5 இயங்குதளத்தில் பார்க்கலாம்.[3]

கதை

பிரசாத் ராஜ் பரத்) தனது நண்பன் சேட்டாவுடன் (ராஜேஷ் சர்மா) சேர்ந்து அனைத்து விலை மாதர்களையும் தன்து பிடிக்குள் வைத்திருக்கிறார். பிரசாத் புவனா (ரித்விகா) என்ற பெண்ணின் மேல் சிறப்பு அக்கறை காட்டுகிறார், மற்றவர்களை விட அவளை நன்றாக நடத்துகிறார். ஒரு இரவு, சந்தோஷ் (மால் மருகா) என்ற வாடிக்கையாளர் பிரசாத்தை அழைத்து அவரிடம் ஒரு பெண்ணைக் கேட்கிறார். நிர்மலா என்கிற நிம்மியை (மீரா நாயர்) அனுப்புமாறு சேட்டாவிடம் பிரசாத் கேட்கிறான். அவள் அவளுடைய குடும்பத்திற்கு தெரியாமல் விலைமாதாக வாழ்கிறாள். அவளுடைய தாய் மற்றும் உடன்பிறப்புகளை நினைத்து, அவளுக்கு மிகவும் பயமாக இருக்கிறது. ஒரு வண்டி ஓட்டுநரான சுப்பிரமணியின் (மயில்சாமியின்) உதவியால் அவள் சந்தோஷுடம் அழைத்துச் செல்லப்படுகிறாள். அவள் சந்தோஷின் வீட்டில் சுப்பிரமணியால் இறக்கிவிடப்படுகிறாள்.

அடுத்த நாள், நிம்மி மற்ற வாடிக்கையாளர்களிடம் செல்லவில்லை என்பதையும், சந்தோஷ் அவளது கடைசி வாடிக்கையாளர் என்பதையும் பிரசாத் மற்றும் சேட்டா கண்டுபிடிக்கின்றனர். இதைப்பற்றி சந்தோஷிடம் விசாரிக்கும்போது அவள் வீட்டைவிட்டு வெளியேறி விட்டதாகவும், அவளுடைய தொலைபேசி எடுக்கப்படாமல் இருக்கிறது என்று கூறுவதால் அவர்கள் குழப்பமடைகிறார்கள். பின்னர் அவர்கள் சுப்பிரமணியின் உதவியுடன் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று விசாரிக்கின்றனர். அவர்கள் சந்தோஷின் வீட்டிற்குச் செல்கின்றனர். அங்கு நிம்மி இறந்து கிடப்பதைக் காண்கின்றனர். எவ்வித தடயமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. பின்னர், சேட்டா, பிரசாத் மற்றும் சுப்பிரமணியை விட்டு தனியே வெளியேறுகிறார். மேலும் அவர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக மீண்டும் சந்தோஷின் வீட்டிற்குச் செல்கிறார்கள். அங்கு நிம்மியும் கொல்லப்பட்டதை தெரிந்து கொள்கின்றனர். சேட்டா பிடிபடுவதைப் பார்த்து பிரசாத் தனியாக இருக்கிறார். பின்னர் ஒரு நபர் தனது கூரையில் அழுவதைப் பார்க்கிறார். அவர் அந்த மனிதனைப் பின்தொடர்கிறார், அவர் உண்மையில் என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துகிறார். ஒரு திருநங்கையாக தான் சந்தித்த வேதனையைப் பற்றி கூறி அழுகிறார். அன்றிரவு என்ன நடந்தது என்பதை அவர் விவரிக்கிறார். தனது வலியைப் பகிர்ந்துகொள்கிறார். பின்னர் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார்.

சில மாதங்களுக்குப் பிறகு, விலைமாதர்களுக்கு கடுமையான வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் சேட்டா மிகவும் கண்டிப்பானவனாக இருப்பதைக் காணலாம். பிரசாத் சுப்பிரமணியின் வார்த்தைகளைக் கேட்டு புவனாவை மணந்து கொண்டு வாழுகிறார். மற்றும் மதி நிறைய முடி வளர்ப்பதன் மூலம் ஒரு திருநங்கையாக வாழ்கிறார். ஒரு சில திருநங்கைகளைக் காட்டி அவர்களுக்கு இப்படத்தை அர்ப்பணிப்பதன் மூலம் படம் முடிகிறது.

நடிகர்கள்

மதிவாணனாக கதிர்
நிர்மலாவாக (நிம்மி) மீரா நாயர்
பிரசாதாக ராஜ் பரத்
புவனாவாக ரித்விகா
சுப்ரமணியாக மயில்சாமி
சேட்டாவாக ராஜேஷ் சர்மா
சந்தோஷாக மால் மருகா
பிரேமாக பிர்லா பாஸ்
பிரேமின் வருங்கால மனைவியாக விசாலினி
மேலாளராக முத்துகுமார்
சந்தேகம் கொள்ளும் நபராக கனி வெங்கடேஷ்

தயாரிப்பு

ஒரு பெண்ணைப் போல தோற்றமளிக்க புரோஸ்டெடிக் மேக்கப்பைப் பயன்படுத்துகையில் தான் கஷ்டங்களைத் தாங்க வேண்டியிருந்தது என்பதை கதிர் வெளிப்படுத்தினார்.[4]

வெளியீடு

ஆல் லைட்ஸ் இந்தியா சர்வதேச திரைப்பட விழாவில் படம் திரையிடப்பட்டது.[5] திரைப்படமாக வெளியிடுவதில் தோல்வியுற்றதால் இது ஜனவரி 9, 2019 அன்று ஜீ5 இயங்குதளத்தில் வெளியிடப்பட்டது.[6]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 https://www.imdb.com/title/tt7143554/
  2. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Kathir-plays-a-woman/articleshow/49504988.cms
  3. Palani, Dhiwaharan. "This Film Which We Are Expecting For A Long Time To Be Released In Web Platform !! Check Out !! | Chennai Memes" (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-02-13.
  4. http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/aug/15/a-different-transformation-1643218.html
  5. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Tamil-films-shine-at-intnl-film-festivals/articleshow/54509678.cms
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-10-27. பார்க்கப்பட்ட நாள் 2019-10-27. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்

  1. Official Website
"https://tamilar.wiki/index.php?title=சிகை_(திரைப்படம்)&oldid=33233" இருந்து மீள்விக்கப்பட்டது