ரித்விகா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரித்விகா
Riythvika InandoutCinema Interview.png
பிறப்புசென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2013— நடப்பு

ரித்விகா ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து வருகிறார். கார்த்திக் சிவகுமார் நடித்த மெட்ராஸ் திரைப்படத்தின் மூலமாக புகழ்பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

தொடக்கால வாழ்க்கை

ரித்விகா இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் சேலத்தில் பிறந்தவர். சென்னை தேனாம்பேட்டையிலுள்ள நீதியரசர் பசீர் அகமது சையது கல்லூரியில் கல்வி பயின்றவர்.[1]

திரை வாழ்க்கை

பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இரண்டாவதாக விக்ரமன் இயக்கிய காதல் திரைப்படமான நினைத்தது யாரோ திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தில் வட சென்னைப் பெண்ணாக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இக்கதாபாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.[2][3] ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் பண்பலை தொகுப்பாளராக நடித்தார். தொடர்ந்து எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது திரைப்படத்திலும் நடித்துள்ளார்.[4] மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கிய பா. ரஞ்சித்தின் அடுத்த படமான ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.[5]

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2013 பரதேசி கருத்தக்கண்ணி தமிழ்
2014 நினைத்தது யாரோ தேன்மொழி தமிழ்
2014 மெட்ராஸ் மேரி தமிழ் வெற்றி- சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
பரிந்துரை- சிறந்த துணை நடிகைக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது
பரிந்துரை- சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருது
2016 அழகுக் குட்டிச் செல்லம் தமிழ்
2016 அஞ்சலை அஞ்சலை தமிழ்
2016 ஒரு நாள் கூத்து சுசீலா தமிழ்
2016 கபாலி மீனா தமிழ்
2016 எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது தமிழ்
2016 இருமுகன் தமிழ்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ரித்விகா&oldid=23314" இருந்து மீள்விக்கப்பட்டது