இது கதிர்வேலன் காதல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இது கதிர்வேலன் காதல்
இயக்கம்எஸ். ஆர். பிரபாகரன்
தயாரிப்புஉதயநிதி ஸ்டாலின்
திரைக்கதைஎஸ். ஆர். பிரபாகரன்
இசைஹாரிஸ் ஜயராஜ்
நடிப்புஉதயநிதி ஸ்டாலின்
நயன்தாரா
சாயா சிங்
ஒளிப்பதிவுபாலசுப்பிரமணியம்
படத்தொகுப்புஉதவி இயக்குநர் தயாரிப்பாளர் நடிகர் தயாபரன்
கலையகம்ரெட் ஜெயின்ட் மூவிஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இது கதிர்வேலன் காதல் (Idhu Kathirvelan Kadhal) 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதியன்று வெளியான தமிழ் மொழி திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தில் உதவி இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் தயாபரன், உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா,[2] சாயா சிங்,[3] சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை சுந்தர பாண்டியன் திரைப்படத்தை இயக்கிய எஸ். ஆர். பிரபாகரன் இயக்கினார்.

கதை சுருக்கம்

காதலித்து கல்யாணம் செய்துகொண்ட கதிர்வேலனின் அக்கா (சாயா சிங்), வீட்டுக்காரருடன் சண்டை போட்டுக்கொண்டு கோயம்புத்தூரிலிருந்து மதுரையிலிருக்கும் புகுந்தவீட்டிற்கு வருகிறார். மாமாவை சமாதானப்படுத்தி அக்காவை சேர்த்து வைப்பதற்காக மதுரையிலிருந்து கோயம்புத்தூருக்கு கிளம்புகிறான் கதிர்வேலன் (உதயநிதி ஸ்டாலின்). அங்கே போனதும் தன் பழைய நண்பன் மயில்வாகனத்தை (சந்தானம்) சந்திக்கிறான். கூடவே பக்கத்து வீட்டில் இருக்கும் பவித்ராவையும் (நயன்தாரா) பார்க்கிறான். பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத ஆஞ்சநேய பக்தனான கதிர்வேலனுக்கு பவித்ராவைப் பார்த்ததும் காதல் வர, அதற்காக ஐடியா கேட்கிறான் தன் நண்பன் மயில்வாகனத்திடம். எல்லாம் கைகூடி பவித்ராவிடம் காதலைச் சொல்ல கதிர்வேலன் நினைக்கும் நேரத்தில், தன் நண்பன் கௌதமை (சுந்தர் ராம்) காதலிப்பதாக பவித்ரா அதிர்ச்சி தருகிறாள். இதன் பிறகு கதிர்வேலன் காதல் என்னவாகிறது? இவர்கள் எப்படி காதலில் ஒன்று சேர்ந்தார்கள் என்பது தான் கதை.

கதாப்பாத்திரம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இது_கதிர்வேலன்_காதல்&oldid=30737" இருந்து மீள்விக்கப்பட்டது