உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் | |
---|---|
2020-இல் உதயநிதி | |
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 14 டிசம்பர் 2022[1] | |
முதலமைச்சர் | மு.க. ஸ்டாலின் |
முன்னவர் | சிவ. வீ. மெய்யநாதன் |
தொகுதி | சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி |
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 11 மே 2021 | |
முன்னவர் | ஜெ. அன்பழகன் |
தொகுதி | சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி |
திமுக இளைஞர் அணிச் செயலாளர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 4 சூலை 2019 | |
தலைவர் | மு.க. ஸ்டாலின் |
பொதுச்செயலாளர் | |
முன்னவர் | மு. பெ. சாமிநாதன்[2] |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 27 நவம்பர் 1977 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழ்க்கை துணைவர்(கள்) | கிருத்திகா உதயநிதி (தி. 2002)
|
உறவினர் | பார்க்க: கருணாநிதி குடும்பம் |
பிள்ளைகள் |
|
பெற்றோர் |
|
இருப்பிடம் | 25/9, சித்தரஞ்சன் வீதி, ஆழ்வார் பேட்டை, சென்னை |
கல்வி | பி.காம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இலயோலாக் கல்லூரி, சென்னை |
பணி |
|
உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும் அரசியல்வாதியும் மற்றும் திமுக இளைஞர் அணிச் செயலாளரும் தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் ஆவர்.[3] இவர் இரெட் செயன்டு மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார்.[4] இவர் தற்போது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் பேரனும் இப்போதைய முதல்வரான மு. க. ஸ்டாலினின் மகனும் ஆவார்.[5] இவர் கிருத்திகா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.[6]
விஜய், திரிஷா நடித்த குருவி எனும் திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும்.[7] உதயநிதி ஸ்டாலினை வழங்குநராகக் கொண்டு வெளிவந்த முதல் திரைப்படம் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் ஆகும்.
அரசியல் பிரவேசம்
திரைப்பட நடிப்பில் ஆர்வமாக நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், 2018 மார்ச் முதல் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார்.[8] 2019-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகச் சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டார். 2019 சூலை 7 அன்று திமுக இளைஞர் அணிச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9]
உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[10][11]
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
2021 | சேப்பாக்கம் | திமுக | 93285 | 67.89[12] |
திரைத் துறை வரலாறு
நடிகராக
ஆண்டு | தலைப்பு | கதைமாந்தர் | இயக்குநர் | குறிப்புகள் |
---|---|---|---|---|
2009 | ஆதவன் | பணியாள் உதவியாளர் | கே. எசு. இரவிக்குமார் | சிறப்புத் தோற்றம்[13] |
2012 | ஒரு கல் ஒரு கண்ணாடி | சரவணன் | எம். இராசேசு | முதன்மைக் கதைமாந்தராக முதற்றிரைப்படம்[14] |
2014 | இது கதிர்வேலன் காதல் | கதிர்வேல் | எஸ். ஆர். பிரபாகரன் | |
2015 | நண்பேன்டா | சத்யா | ஜகதீஷ் | |
2016 | கெத்து | சேது | திருக்குமரன் | |
2016 | மனிதன் | சக்திவேல் | அகமது | |
2017 | சரவணன் இருக்க பயமேன் | சரவணன் | எழில் | |
2017 | பொதுவாக எம்மனசு தங்கம் | கணேஷ் | தளபதி பிரபு | |
2017 | இப்படை வெல்லும் | மது சூதனன் | கவுரவ் நாராயணன் | |
2018 | நிமிர் | செல்வம் | பிரியதர்சன் | |
2019 | கண்ணே கலைமானே | கமல கண்ணன் | சீனு ராமசாமி | |
2020 | சைக்கோ | கவுதம் | மிஷ்கின் | |
2020 | கண்ணை நம்பாதே | அருண் | மாறன் | படப்பிடிப்பில் |
2020 | ஏஞ்சல் | அதியமான் | படப்பிடிப்பில் | |
2022 | நெஞ்சுக்கு நீதி | எஸ். விஜயராகவன் | அருண்ராஜா காமராஜ் | முதன்மை கதாபாத்திரம். இந்தியில் வெளிவந்த ஆர்டிக்கில் 15 படத்தின் தமிழ் உருவாக்கம் |
தயாரிப்பாளராக
ஆண்டு | தலைப்பு | நடிகர்கள் | இயக்குநர் |
---|---|---|---|
2008 | குருவி | விசய், திரிசா | தரணி |
2009 | ஆதவன் | சூர்யா, நயன்தாரா | கே. எசு. இரவிக்குமார் |
2010 | மன்மதன் அம்பு | கமல் ஆசன், திரிசா, மாதவன் | கே. எசு. இரவிக்குமார் |
2011 | ஏழாம் அறிவு | சூர்யா, சுருதி ஆசன் | ஏ. ஆர். முருகதாசு |
2012 | ஒரு கல் ஒரு கண்ணாடி | உதயநிதி இசுட்டாலின், அன்சிக்கா மோட்வானி, சந்தானம் | எம். இராசேசு |
2012 | நீர் பறவைகள் | விட்டுணு விசால், பிந்து மாதவி | சீனு இராமசாமி |
வழங்குநராக
ஆண்டு | தலைப்பு | நடிகர்கள் | இயக்குநர் |
---|---|---|---|
2010 | விண்ணைத்தாண்டி வருவாயா | சிலம்பரசன், திரிசா | கௌதம் மேனன் |
2010 | மதராசபட்டினம் | ஆர்யா, ஏமி சாக்சன், நாசர் | ஏ. எல். விசய் |
2010 | பாஸ் என்கிற பாஸ்கரன் | ஆர்யா, நயன்தாரா | எம். இராசேசு |
2010 | மைனா | விதார்த்து, அமலா பால் | பிரபு சாலமன் |
2011 | கோ | சீவா, கார்த்திக்கா நாயர், அச்மல் அமீர் | கே. வி. ஆனந்து |
2022 | டான் | சிவகார்த்திகேயன், S. J. சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா அருள் மோகன், சூரி | சிபி சக்கரவர்த்தி |
2022 | விக்ரம் (2022) | கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பாஹத் பாசில், சூர்யா | லோகேஷ் கனகராஜ் |
மேற்கோள்கள்
- ↑ "உதயநிதி அமைச்சர் - 10 அமைச்சர்கள் துறை மாற்றம்". www.dinamalar.com. தினமலர். 14 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 14 டிசம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Another son traces dad's footsteps, rises in the DMK". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 July 2019. பார்க்கப்பட்ட நாள் 5 July 2019.
- ↑ உதயநிதி ஸ்டாலின் (ஆங்கில மொழியில்)
- ↑ எங்களைப் பற்றி (ஆங்கில மொழியில்)
- ↑ தாத்தா ஆர்வம், பேரன் சிலிர்ப்பு
- ↑ இயக்குநராக அவதாரம் எடுக்கும் கிருத்திகா உதயநிதி.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "விஜய் ரெடின்னா நானும் ரெடி-உதயநிதி ஸ்டாலின்". Archived from the original on 2012-04-26. பார்க்கப்பட்ட நாள் 2012-05-03.
- ↑ "களமிறங்கிய உதயநிதி; பச்சைக் கொடி காட்டிய ஸ்டாலின்".
- ↑ "தி.மு.க இளைஞரணிச்செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்". இந்து தமிழ் திசை. 4 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2019.
- ↑ The Times of India, D. Govardan / TNN / (3 May 2021). "Tamil Nadu: Udhayanidhi Stalin wins big, cements claim to political legacy | Chennai News - Times of India" (in en) இம் மூலத்தில் இருந்து 4 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210504081909/https://timesofindia.indiatimes.com/city/chennai/tn-udhayanidhi-stalin-wins-big-cements-claim-to-political-legacy/articleshow/82362964.cms. பார்த்த நாள்: 4 May 2021.
- ↑ "முதல்முறையாக எம்எல்ஏவாக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2021-06-21.
- ↑ "Election Commission of India". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-21.
- ↑ ஆதவனின் உதயநிதி இசுட்டாலினின் சிறப்புத் தோற்றம் (ஆங்கில மொழியில்)!
- ↑ "கதை கேட்கிறார் உதயநிதி ஸ்டாலின்!". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2012-05-03.