மலேசியா டூ அம்னீசியா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மலேசியா டூ அம்னீசியா
இயக்கம்ராதா மோகன்
கதைராதா மோகன்
இசைபிரேம்ஜி அமரன்
நடிப்புவைபவ்
வாணி போஜன்
ஒளிப்பதிவுமகேஷ் முத்துசாமி
படத்தொகுப்புபிரவீன் கே. எல்
கலையகம்மங்கி மேன் கம்பெனி
விநியோகம்ஜீ5
வெளியீடுமே 28, 2021 (2021-05-28)
ஓட்டம்116 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மலேசியா டூ அம்னீசியா (Malaysia to Amnesia) என்பது 2021ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை இயக்குநர் ராதா மோகன் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் வைபவ், வாணி போஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கருணாகரன், எம். எசு. பாசுகர், ரியா சுமன் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.[1] பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். பிரவீன் கே. எல் படத் தொகுப்பையும், மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவையும் செய்துள்ளனர்.

2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று பரவிய காலத்தில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டது.[2][3] இது 28 மே 2021 அன்று ஜீ5 வழியாக வெளியானது. எம். எசு. பாசுகரின் நகைச்சுவை நடிப்பைப் பாராட்டி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[4][5][6][7]

கதைச் சுருக்கம்

தொழிலதிபரான அருண்குமார், பாவனா என்ற மற்றொரு பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டுள்ளார். வணிகம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ள மலேசியா செல்கிறேன் என்று கூறி தனது மனிவியிடம் பொய் சொல்லி விட்டு பெங்களூரில் உள்ள தனது காதலி பாவனாவுடன் நேரத்தை செலவிடுகிறார். பாவனாவுடனான அருணின் உறவு பின்னர் அவர் கடினமான சூழ்நிலையில் விழும்போது வெளிப்படுகிறது.[7]

நடிகர்கள்

வரவேற்பு

பிலிம் கம்பேனியனின் பரத்வாஜ் ரங்கன் "ஒட்டுமொத்த படமும் சதி லீலாவதி படத்தைப் போல முழு நகைச்சுவையாக இல்லாமல் இருக்கிறது" என எழுதினார்.[8]

சான்றுகள்

  1. "Vaibhav-Radhamohan film titled Malaysia To Amnesia". The New Indian Express (in English). பார்க்கப்பட்ட நாள் 28 May 2021.
  2. "Watch Malaysia to Amnesia Full HD Movie Online on ZEE5". ZEE5 (in English). பார்க்கப்பட்ட நாள் 28 May 2021.
  3. "ராதாமோகன் இயக்கத்தில் 'மலேஷியா டு அம்னீஷியா': நேரடி ஓடிடி வெளியீடு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 28 May 2021.
  4. "Radha Mohan's comic caper titled 'Malaysia to Amnesia', to premiere on Zee5 from May 28". Archived from the original on 2021-05-10. பார்க்கப்பட்ட நாள் 2021-10-24.
  5. "Malaysia to Amnesia movie review: MS Bhaskar makes this comedy film tolerable". The Indian Express (in English). 28 May 2021. பார்க்கப்பட்ட நாள் 28 May 2021.
  6. "Malaysia to Amnesia movie review: A passable entertainer by Radha Mohan that only works in parts". 28 May 2021.
  7. 7.0 7.1 "Malaysia to Amnesia Movie Review: Quite a bit of laughter in a predictable story". The New Indian Express (in English). பார்க்கப்பட்ட நாள் 28 May 2021.
  8. Rangan, Baradwaj (29 May 2021). "Malaysia To Amnesia, On ZEE5, Feels Like A Hastily Put Together Film". பார்க்கப்பட்ட நாள் 29 May 2021. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மலேசியா_டூ_அம்னீசியா&oldid=36303" இருந்து மீள்விக்கப்பட்டது