குரு என் ஆளு (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குரு என் ஆளு
இயக்கம்செல்வா
தயாரிப்புகே.ஆர்.கங்காதரன்
கதைஎல்.வெங்கடேசன்
நீனு
(திரைக்கதை)
இசைஸ்ரீகாந்த் தேவா
நடிப்புமாதவன்
அப்பாஸ்
மம்தா மோகன்தாஸ்
விவேக்
பிருந்தா பரேக்
ஒளிப்பதிவுயூ. கே. செந்தில் குமார்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
விநியோகம்கேஆர்ஜி மூவிஸ் இன்ரநேஷனல்
வெளியீடுஏப்ரல் 24, 2009 (2009-04-24)([1])
நாடு இந்தியா
மொழிதமிழ்

குரு என் ஆளு (Guru En Aalu) 2009 இல் வெளியான நகைச்சுவை கலந்த காதல் தமிழ்த் திரைப்படமாகும். செல்வா இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் மாதவன், அப்பாஸ், மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடிக்க இவர்களுடன் விவேக் மற்றும் பிருந்தா பரேக் ஆகியோரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1997 ல் இந்தி மொழியில்  வெளிவந்த அஜிஸ் மிஸ்ராவின் "யெஸ் பாஸ்" எனும் திரைப்படத்தின் தமிழ் மீளுருவாக்கமாகும் (இத்திரைப்படத்தில் ஷாருக்கான் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.). திரைப்படத்தின் படப்பிடிப்பு 2007 இன் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் 2009 ஏப்ரல் மாதமே திரைக்கு வந்தது.

கதைச்சுருக்கம்

கிருஷ்ணா (அப்பாஸ்) முதலாளியாக இருக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் குருவிற்கு (மாதவன்) அந்நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராகும் ஆசை இருந்தது. கிருஷ்ணா ஒரு விளையாட்டுப்பிள்ளை. கிருஷ்ணா தன்னை நிர்வாக இயக்குனராக மாற்றுவான் எனும் நம்பிக்கையில் குரு கிருஷ்ணாவிற்கு விரும்பும்படியாக நடந்துகொள்கின்றான். கிருஷ்ணாவோ மாடல் சீமா (மம்தா மோகன்தாஸ்) மீது ஆசை கொள்கிறான். ஆனால் குருவிற்கு அதற்கு முன்னரே சீமா மீது ஆசையிருந்தது. தனது முதலாளியும் சீமா மீது ஆசைகொள்ள அவருக்காக தனது ஆசைகளை நிர்வாக இயக்குனராக வருவதையே குரு விரும்புகிறான். ஆனால் கிருஷ்ணாவோ சீமாவிற்காக குருவிடம் உதவி கேட்பதுமட்டுமில்லாமல் அவன் கட்டளையிடும் அனைத்தையும் குரு செய்து முடிக்கிறான். ஒரு கட்டத்தில் குருவிற்கு சீமா மீதுள்ள காதலை மறக்க முடியாமல் போக கிருஷ்ணா சீமாவை நெருங்குவதைத் தடுக்கிறான். கிருஷ்ணா, குரு ஆகிய இருவரில் சீமாவிற்கு யாரைப் பிடிக்கிறது என்பது கதையின் இறுதியாகும்.

நடிகர்கள்

இசை

இதிலுள்ள பாடல்களுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவாவுடன் இயக்குநர் செல்வாவுக்கு இத்திரைப்படம் இரண்டாவது ஆகும். திரைப்பட பாடல்வரிகளை பா. விஜய், கபிலன், பழனிபாரதி ஆகியோர் எழுதியுள்ளனர்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=குரு_என்_ஆளு_(திரைப்படம்)&oldid=32448" இருந்து மீள்விக்கப்பட்டது