உடன்பால்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உடன்பால்
இயக்கம்கார்த்திக் சீனிவாசன்
தயாரிப்புகே. வி. துரை
கதைகார்த்திக் சீனிவாசன்
இசைசக்தி பாலாஜி
நடிப்பு
ஒளிப்பதிவுமதன் கிரிஸ்டோபர்
படத்தொகுப்புஜி. மதன்
கலையகம்டி கம்பெனி
விநியோகம்ஆஹா தமிழ்
வெளியீடுதிசம்பர் 30, 2022 (2022-12-30)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உடன்பால் (Udanpaal) என்பது 2022 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை கார்த்திக் சீனிவாசனால் இயக்கினார். இதில் லிங்கா , காயத்ரி, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படம் 2022 திசம்பர் 30 அன்று ஆஹா தமிழில் வெளியிடப்பட்டது.

கதைச்சுருக்கம்

இரு மகள்களையும், ஒரு மகளையும் கொண்ட ஒரு சாமானிய தந்தை உள்ளார். அவரது எதிர்பாராத மரணத்தைக் கொண்டு தங்கள் கடன் சிக்கல்களில் இருந்து மீள நினைக்கிறார்கள் பிள்ளைகள். உறவுகளின் மேன்மையானது பணம் கிடைக்கும்போது சட்டென கீழ்மையை சந்திக்கும் என்பதை அவல நகைச்சுவையாக கதை கூறுகிறது.

நடிகர்கள்

தயாரிப்பு

படக் குழுவினர் முழு படத்தையும் ஒரே இடத்தில் ஒரே கட்டமாக படமாக்கினர்.[1] 2022 திசம்பர் தொடக்கத்தில், படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தை திரையரங்கில் வெளியிடாமல் ஆஹா தமிழ் தளத்தில் வெளியிட முடிவு செய்ததாக அறிவித்தனர்.[2]

வரவேற்பு

திரைப்படம் 2022 திசம்பர் 30 அன்று ஆஹா தமிழ் தளத்தில் வெளியிடப்பட்டது. வெளியீட்டிற்கு முந்தைய வாரத்தில் விமர்சகர்களிடமிருந்து விமர்சனங்கள் வெளிவரத்துவங்கின. தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த ஒரு விமர்சகர் எழுதினார், "இது போன்ற ஒரு நகைச்சுவையான, புதுமையான குடும்ப நாடகப் படத்தை அடிக்கடி பார்க்க கிடைப்பது அரிது".[3] விமர்சகர் மணிகண்டன் கே.ஆர் எழுதிய விமர்சனத்தில், "இயக்குனர் கார்த்திக் சீனிவாசனின் உடன்பால் ஒரு விதிவிலக்காக சிறப்பாக உருவாக்கப்பட்ட அவல நகைச்சுவை நாடகப்படமாகும். இது நம்மை சிரிக்க வைக்கும் அதே வேளையில், ஒழுக்கம், நன்றியுணர்வு, அன்பு என்று வரும்போது தனிநபர்களின் தரம் மோசமடைவதைப் பற்றியும் சிந்திக்க வைக்கிறது".[4] தி இந்து மற்றும் நக்கீரன் ஆகியவற்றின் விமர்சகர்களும் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களை அளித்தனர்.[5][6]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=உடன்பால்&oldid=30971" இருந்து மீள்விக்கப்பட்டது