விவேக் பிரசன்னா
விவேக் பிரசன்னா (Vivek Prasanna) ஒரு இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ் மொழித் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.[1]
நடிப்புலகில் பயணம்
தொலைக்காட்சித் தொடர்களில் பலவற்றில் நடித்த பிறகு விஜய் சேதுபதி நடித்து அருண் குமாரின் காவல்துறைப் பின்னணிக் கதையைக் கொண்ட சேதுபதி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்தியாகில்ட்ஸ் தனது விமர்சனத்தில் இவரை அடியாள் கதாபாத்திரத்துக்குச் சரியாகப் பொருந்தமானவர் எனக் குறிப்பிட்டிருந்தது.[2]
2017 ஆம் ஆண்டு, விவேக் பிரசன்னாவுக்கு தொடர்ச்சியாக தமிழ் திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பைத் தந்து திருப்பு முனை ஆண்டாக அமைந்தது. விக்ரம் வேதாவில் போதைப்பொருள் தாதா இரவியாக, பீச்சாங்கை படத்தில் அரசியல்வாதியாக என சரியான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்தார்.[3][4][5] மேயாத மான் திரைப்படத்தில் இரண்டாம் நிலை துணைக் கதாபாத்திரத்தில் தோன்றி வினோத் என்ற பாத்திரப்படைப்பில் சிறப்பாக நடித்தமைக்கான நல்ல விமர்சனங்களையும் பெற்றார்.[6][7]
திரைப்பட வரிசை
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2016 | சேதுபதி | ||
இறைவி (திரைப்படம்) | |||
2017 | மாநகரம் (திரைப்படம்) | முன்னனிக் கதாபாத்திரத்தின் நண்பன் | |
பீச்சாங்கை | நல்லதம்பி | ||
விக்ரம் வேதா | இரவி | ||
பொதுவாக எம்மனசு தங்கம் | முருகேசன் | ||
மேயாத மான் | வினோத் | ||
வேலைக்காரன் (2017) திரைப்படம் | பாபு | ||
2018 | இரும்புத்திரை |
மேற்கோள்கள்
- ↑ "Vijay Sethupathi is not only the Makkal Selvan : Prem, Vivek Prasanna Interview Official Teaser Review videos - IndiaGlitz Tamil".
- ↑ "Sethupathi review. Sethupathi Tamil movie review, story, rating - IndiaGlitz Tamil".
- ↑ "Peechankai Review {3/5}: Ffter a point, the plot seems to be running in circles with no end in sight".
- ↑ "Tamil Vikram Vedha Movie Preview cinema review stills gallery trailer video clips showtimes - IndiaGlitz Tamil".
- ↑ "'Peechankai': the left comes to power".
- ↑ "Meyaadha Maan review: A winning musical".
- ↑ "We were nervous about releasing Meyaadha Maan along with Mersal: Actor Vaibhav". 23 October 2017.