முகம் (1999 திரைப்படம்)
முகம் | |
---|---|
இயக்கம் | ஞான ராஜசேகரன் |
தயாரிப்பு | எஸ். தாணு |
இசை | இளையராஜா |
நடிப்பு | நாசர் ரோஜா மணிவண்ணன் |
ஒளிப்பதிவு | பி. சி. ஸ்ரீராம் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | கலைப்புலி இண்டர்நேசனல் |
வெளியீடு | 1 அக்டோபர் 1999 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
முகம் (Mugam) என்பது 1999 ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் ஆகும். ஞான ராஜசேகரன் இயக்கிய இப்படத்தில் நாசர், ரோஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். மணிவண்ணன், விவேக், தலைவாசல் விஜய் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இந்த படம் 1999 அக்டோபரில் எதிர்மறையான விமர்சனங்களுடன் வெளியானது. இது வணிக ரீதியாக தோல்வியடைந்தது.[1]
கதை
ரங்கநாதன் ( நாசர் ) ஒரு அசிங்கமான மனிதர். எனவே வாழ்வில் பல துன்பங்களை எதிர்கொள்கிறார். வேலையிலிருந்தும் நீக்கபடுகிறார். தொடர்ந்து மோசமாகவே நடத்தப்படுகிறார். அவர் நேசிக்கும் பெண் அவரை வெறுக்கிறாள். பின்னர் ரங்கன் ஒரு முகமூடியை பெறுகிறார். அந்த முகமூடியை அணிவதன் மூலம் அழகிய முகத்தைப் பெறுகிறார். பின்னர் ஒரு திரைப்பட நட்சத்திரமாக மாறுகிறார். மேலும் அவரது புதிய மனைவி மாலினி ( ரோஜா ) அவரது அழகான முகத்திற்காக மட்டுமே அவரை நேசிக்கிறாள். முடிவில், ரங்கன் ஒரு கணம் முகமூடியைக் கழற்றிவிட்டு, தனது உண்மையான முகத்தைக் கண்டே மக்கள் தன்னை மதிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார். அவரது மனைவி உள்ளே நுழைந்து, அவரது அசிங்கமான முகத்தைப் பார்த்து, ஒரு கொள்ளைக்காரன் என்று தவறாக நினைத்து வெளியே துரத்திவிடுகிறார். ரங்கனை முன்பு பின்தொடர்ந்தவர்கள் அவரை பக்கத்தில் நெருங்கவிடவில்லை. அழகு மட்டுமே அவருக்கான மரியாதையை அளிக்கிறது என்று முடிவுசெய்து, ரங்கன் முகமூடியை மீண்டும் அணிந்து நடிகர் வாழ்க்கையை வாழ்கிறார்.
நடிகர்கள்
- நாசர் ரங்கனாக
- ரோஜா மாலினியாக
- மணிவண்ணன் முத்தண்ணனாக
- விவேக்
- தலைவாசல் விஜய்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- தாமு
- மயில்சாமி (நடிகர்)
- பாத்திமா பாபு
- அஜய் ரத்னம்
- இரவிராஜ்
- பீலி சிவம்
- மோனிகா
- சோபணா
வெளியீடு
ஒரு விமர்சகர் "கதைக்களம் புதினமாக படிக்க சிறந்ததாக இருக்கும், ஆனால் படத்தில் அது நம்பமுடியாத அளவிற்கு உள்ளது" என்றார். மேலும் "நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். ஆனாலும் படம் மிகவும் சலிப்பைத் தருவதாக உள்ளது." [2]
இந்த படம் வணிக ரீதியாக தோலவியடைந்தது. மேலும் வெளியான இரண்டு வாரங்களுக்குள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.[3] படம் வெளிவந்த பிறகு படத்தைப் பற்றி குறிப்பிட்ட நாசர் இந்த பாத்திரம் அவருக்கு முதலில் விவரிக்கப்பட்டபோது சுவாரஸ்யமாகத் தோன்றியதாகக் குறிப்பிட்டார். ஆனால் படம் வளர வளர அவர் ஆர்வத்தை இழந்து இயக்குனரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றினார்.[4]
குறிப்புகள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2006-10-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061029133951/http://cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=mugam.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303205836/http://www.indolink.com/tamil/cinema/Reviews/articles/Mugam_103022.html.
- ↑ http://www.oocities.org/hollywood/lot/2330/gcnnov99.html
- ↑ https://web.archive.org/web/20010702185543/http://tmcafe.com/interview/naser/nasser_interview.htm