அஜய் ரத்னம்
அஜய் ரத்னம் | |
---|---|
பிறப்பு | 28 நவம்பர் 1965 |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1989[1] - 2018 |
உயரம் | 6 அடி 4 அங் |
பிள்ளைகள் | தீரஜ் விஷ்ணு ரத்னம் விஸ்வாஸ் ரத்னம் |
அஜய் ரத்னம் (Ajay Rathnam) என்பவர் ஓர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றியுள்ளார். இவர் ஐந்து மொழிகளில் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[சான்று தேவை]
தொழில்
ரத்னம் நாளை மனிதன் (1989) என்ற திகில் படத்தில் நடிகராக அறிமுகமானார். அதில் இவர் அரக்கத்தனம் மிக்கவராக நடித்தார்.[2] இவர் தொலைக் காட்சித் தொடரான மர்மதேசத்தின் (விடாது கருப்பு) ஒரு பாகத்தில் நடித்தார். இந்தி மொழி திரைப்படமான மெட்ராஸ் கஃபே (2013) படத்தில் கற்பனையான விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவராக நடித்தார். இவரது பாத்திரம் மறைந்த விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் மிக நெருக்கமான ஒற்றுமையைக் கொண்டிருந்தது.[3]
பிற படைப்புகள்
ரத்னம் பல்வேறு கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஊக்கமளிப்பு கருத்தரங்குகளை நடத்தி வருகிறார்.[4] 2018 ஆம் ஆண்டில், இவர் தனது பூப்பந்து அகாடமியை "வி ஸ்கொயர்" என்ற பெயரில் சென்னையில் தொடங்கினார் .[5] 2019 ஆம் ஆண்டில், முகப்பேரில் "வி ஸ்கொயர்" விளையாட்டு அரங்கை தொடங்கினார் .
தனிப்பட்ட வாழ்க்கை
இவரது மகன் தீரஜ் விஷ்ணு ரத்னம் அறிவழகனின் ஆறாது சினம் (2016) படத்தில் நடிகராக அறிமுகமானார்.[6]
திரைப்படவியல்
ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1989 | நாளை மனிதன் | தமிழ் | அறிமுகப் படம் | |
1989 | திருப்பு முனை | மணிமுடி | தமிழ் | |
1990 | அதிசய மனிதன் | தமிழ் | ||
1990 | மதுரை வீரன் எங்க சாமி | தமிழ் | ||
1991 | குணா | காவல் ஆய்வாளர் மூவேந்தர் | தமிழ் | |
1991 | தர்மதுரை | அஜய் | தமிழ் | |
1991 | தையல்காரன் | தமிழ் | கௌரவத் தோற்றம் | |
1991 | நண்பர்கள் | தமிழ் | ||
1991 | காவல் நிலையம் | ஆண்டவரின் மகன் | தமிழ் | |
1991 | இரவு சூரியன் | தமிழ் | ||
1992 | சிங்கார வேலன் | தமிழ் | ||
1992 | தேவர் மகன் | ஆய்வாளர் எஸ் மருதுபாண்டி | தமிழ் | |
1992 | பாண்டித்துரை | ருத்ரமணி | தமிழ் | |
1992 | இன்னிசை மழை | தமிழ் | ||
1993 | வேடன் | அஜய் | தமிழ் | |
1993 | ஏர்போர்ட் | தமிழ் | ||
1993 | உடன் பிறப்பு | தமிழ் | ||
1993 | திருடா திருடா | அசோக் | தமிழ் | |
1993 | ஜென்டில்மேன் | ரத்னம் | தமிழ் | |
1994 | வீரா | ரத்னவேலு | தமிழ் | |
1994 | பாண்டியனின் ராஜ்யத்தில் | தமிழ் | ||
1994 | காதலன் | தமிழ் | ||
1994 | ஆனஸ்ட் ராஜ் | முத்தையா | தமிழ் | |
1994 | அதர்மம் | தமிழ் | ||
1994 | விஷ்ணு | குரு | மலையாளம் | |
1994 | பிடக்கோஜி கூவுன்னா நூட்டண்டு | டக்லஸ் | மலையாளம் | |
1994 | சைன்யம் | மலையாளம் | ||
1995 | குருதிப்புனல் | ஆர்.பி.ஜி. சுடுநர் | தமிழ் | |
1995 | மாயா பஜார் | தமிழ் | ||
1995 | என் பொண்டாட்டி நல்லவ | காவல் ஆய்வாளர் | தமிழ் | |
1995 | ஹைஜாக் | மலையாளம் | ||
1995 | பார்வதி பரினயணம் | அண்ணியன் திருமேனி | மலையாளம் | |
1995 | ஆடால்லா மஜாகா | தெலுங்கு | ||
1996 | இரட்டை ரோஜா | தமிழ் | ||
1996 | மைனர் மாப்பிள்ளை | 'சேலஞ்ச்' சங்கரலிங்கம் | தமிழ் | |
1996 | இந்தியன் | விடுதலைப் போராட்டக்காரர் | தமிழ் | |
1996 | மகாபிரபு | தமிழ் | ||
1997 | ரெட்டை ஜடை வயசு | ஜீவா | தமிழ் | |
1997 | ரட்சகன் | மித்ரன் | தமிழ் | |
1997 | நேருக்கு நேர் | கச்சிரம் | தமிழ் | |
1997 | சூரிய வம்சம் | தமிழ் | ||
1997 | உல்லாசம் | பால்பாண்டி | தமிழ் | |
1997 | பகைவன் | காவல் ஆய்வாளர் | தமிழ் | |
1997 | மாஸ்டர் | தெலுங்கு | ||
1998 | உளவுத்துறை | அஜய் | தமிழ் | |
1998 | பகவத் சிங் | தமிழ் | ||
1998 | காதலா! காதலா! | வில்லியம்சன் | தமிழ் | |
1998 | ஆட்டோ டிரைவர் | நாகராஜ் | தெலுங்கு | |
1998 | ஆசைத் தம்பி | தமிழ் | ||
1998 | உரிமைப் போர் | தமிழ் | ||
1999 | முகம் | தமிழ் | ||
1999 | பெரியண்ணா | தமிழ் | ||
1999 | அண்ணன் தங்கச்சி | யசோதாவின் சகோதிரர் | தமிழ் | |
1999 | உள்ளத்தை கிள்ளாதே | தமிழ் | ||
1999 | நேசம் புதுசு | வசந்தியின் உறவினர் | தமிழ் | |
1999 | ஜனனாயகன் | குப்புசாமி | மலையாளம் | |
2000 | ரிதம் | அர்ஜுனின் நண்பர் | தமிழ் | |
2001 | ஷாஜகான் | தமிழ் | ||
2001 | சிட்டிசன் | ஏ. சி. கிருஷ்மூர்த்தி | தமிழ் | |
2001 | அசத்தல் | ஜெயராஜ் | தமிழ் | |
2002 | நம்ம வீட்டு கல்யாணம் | காவல் அதிகாரி | தமிழ் | |
2002 | என் மன வானில் | காவல் அதிகாரி | தமிழ் | |
2002 | தேவன் | காவல் அதிகாரி | தமிழ் | |
2003 | இன்று | காவல் அதிகாரி | தமிழ் | |
2003 | திருமலை | போக்குவரத்து காவல் அதிகாரி | தமிழ் | |
2003 | ஒற்றன் | சரண் | தமிழ் | |
2003 | பாறை | காவல் துணை ஆய்வாளர் | தமிழ் | |
2003 | நதிக்கரையினிலே | தமிழ் | ||
2003 | திவான் | தமிழ் | ||
2003 | ஈ அப்பாய் சாலா மஞ்சுடு | விவேகானந்தாவின் தந்தை | Telugu | |
2004 | அரசாட்சி | தமிழ் | ||
2004 | அறிவுமணி | தமிழ் | ||
2004 | வர்ணஜாலம் | ஏசிபி. பிரபாகரன் | தமிழ் | |
2004 | வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் | மருத்துவக் கல்லூரி பேராசிரியர் | தமிழ் | |
2004 | அடவி ராமுடு | தெலுங்கு | ||
2005 | 6'2 | கிருஷ்ணமூர்த்தி | தமிழ் | |
2005 | ஆயுதம் | தமிழ் | ||
2005 | செல்வம் | ஜோதியின் தந்தை | தமிழ் | |
2005 | சுக்ரன் | அரசு வழக்கறிஞர் ராமானுஜம் | தமிழ் | |
2005 | நீயே நிஜம் | காவல் ஆய்வாளர் | தமிழ் | |
2005 | பரத்சந்திரன் ஐபிஎஸ் | கலா புரோகித் | மலையாளம் | |
2005 | நாய்டு எல்எல்பி | தெலுங்கு | ||
2006 | சுதேசி | அரசு அதிகாரி | தமிழ் | |
2006 | வஞ்சகன் | சின்னராசு | தமிழ் | |
2006 | பதாகா | வின்செண்ட் மோசிஸ் | மலையாளம் | |
2006 | பேரரசு | ஆய்வாளர் அழகப்பன் | தமிழ் | |
2006 | ஈ | தமிழ் | ||
2007 | போக்கிரி | காவல் ஆய்வாளர் | தமிழ் | |
2007 | அகரம் | காவல் ஆணையர் | தமிழ் | |
2007 | பரட்டை என்கிற அழகுசுந்தரம் | தமிழ் | ||
2007 | பெரியார் | தமிழ் | ||
2007 | மலைக்கோட்டை | தமிழ் | ||
2008 | தீயவன் | காவல் ஆய்வாளர் | தமிழ் | |
2008 | தோழா | தமிழ் | ||
2009 | பச்சை நிறமே | தமிழ் | ||
2009 | கேரள வர்மா பழசிராஜா | சுபேதார் சேரன் | மலையாளம் | |
2009 | கேஏ-99 பி-333 | கன்னடம் | ||
2010 | தைரியம் | தமிழ் | ||
2010 | சிங்கம் | ஐஜி | தமிழ் | |
2011 | சட்டப்படி குற்றம் | காவல் அதிகாரி | தமிழ் | |
2012 | மயங்கினேன் தயங்கினேன் | கலிவரதன் | தமிழ் | |
2012 | மாற்றான் | அஜய் ரத்னம் | தமிழ் | |
2012 | நண்பன் | பஞ்சவன் பாரிவேந்தனின் தந்தை | தமிழ் | |
2013 | தில்லு முல்லு | தமிழ் | ||
2013 | மதராஸ் கஃபே | அண்ணா பாஸ்கரன் | இந்தி | |
2013 | சத்யா 2 | சாம்பசிவ ராவ் "சம்போ" | தெலுங்கு | |
2014 | ஜிகர்தண்டா | காவல் அதிகாரி | தமிழ் | |
2014 | பொறியாளன் | வங்கியாளர் | தமிழ் | |
2014 | பிரம்மன் | தமிழ் | ||
2015 | தனி ஒருவன் | காவல் துணைத் தலைவர் | தமிழ் | |
2015 | அபூர்வ மகான் | தமிழ் | ||
2015 | புலி | தமிழ் | ||
2015 | என் வழி தனி வழி | தமிழ் | ||
2015 | யட்சன் | காவல் அதிகாரி | தமிழ் | |
2015 | உத்தம வில்லன் | அரசன் சடையவர்மன் | தமிழ் | |
2015 | எனக்குள் ஒருவன் | தமிழ் | ||
2015 | மாலினி & கோ. | இந்தி/தெலுங்கு | ||
2016 | வாகா | தமிழ் | ||
2016 | முடிஞ்சா இவன புடி | தமிழ் | ||
2016 | துருவா | இஷிகாவின் தந்தை | Telugu | |
2017 | திட்டிவாசல் | வாஞ்சிநாதன் | தமிழ் | |
2017 | களத்தூர் கிராமம் | தமிழ் | ||
2017 | துப்பறிவாளன் | காவல் அதிகாரி | தமிழ் | |
2017 | மங்களபுரம் | தமிழ் | ||
2017 | செஞ்சிட்டாளே என் காதல | வீராவின் தந்தை | தமிழ் | |
2017 | ஸ்பைடர் | ஆய்வாளர் கோகுல்நாத் | Telugu/தமிழ் | |
2018 | தமிழ் படம் 2 | மன்னர் அதியமான் | தமிழ் | |
2019 | கோகோ மாகோ | Ajay Rathnam | தமிழ் |
தொலைக்காட்சி
ஆண்டு | தொடர் | பாத்திரம் |
---|---|---|
1997 | மர்மதேசம் (ரகசியம்) | ரகு (காவல்துறை அதிகாரி) |
1997-1998 | மர்மதேசம் (விடாது கருப்பு) | உண்மையான கருப்பண்ணசாமி கடவுள் |
2000-2001 | சித்தி | யோகி |
2001 | ரமணி வெர்சஸ். ரமணி பகுதி II | விருந்தினர் தோற்றம் (அத்தியாயம் 19) [7] |
2001 | அம்மா | சஞ்சய் |
2002-2005 | அண்ணாமலை | அன்பழகன் |
2003 | தற்காப்புக் கலை தீராதா | அப்பா |
2006 | பெண் | |
2007-2009 | அரசி | விஸ்வநாதன் |
2007-2008 | பொறந்த வீடா புகுந்த வீடா | |
2008-2009 | கோகுலதில் சீதை | |
2009-2010 | கருணமஞ்சரி | |
2010-2011 | சௌந்தர்யவள்ளி | |
2010-2011 | யமிருக்க பயமேன் | |
2011 | முன் ஜென்மம் | நங்கூரம் |
2012-2015 | சிவசங்கரி | |
2013-2014 | உறவுகள் சங்கமம் | |
2013-2014 | நல்ல நேரம் | |
2014-2015 | திரு மாங்கல்யம் | விஜய்குமார் (சந்தியாவின் தந்தை) |
2020-தற்போது | பூவே உனக்காக | சிவநாராயணன் |
குறிப்புகள்
- ↑ "Ajay Rathnam in Kannada". Indiaglitz.com. 2007-12-05. http://www.indiaglitz.com/channels/hindi/article/35105.html.
- ↑ "கல்லாய் இருந்த என்னை வைரமாக்கியவர் கமல்! அஜய்ரத்னம் பேட்டி | Ajay Ratnams special interview". 31 March 2013. https://cinema.dinamalar.com/cinema-news/11789/special-report/Ajay-Ratnams-special-interview.htm.
- ↑ "Does Madras Cafe show LTTE leader Prabhakaran?". 12 August 2013. https://www.hindustantimes.com/bollywood/does-madras-cafe-show-ltte-leader-prabhakaran/story-w1QgS5HQB8szlrHRreRjeK.html.
- ↑ "'Right attitude, discipline determine success'". 24 August 2015. https://www.thehindu.com/news/national/tamil-nadu/right-attitude-discipline-determine-success/article7573597.ece.
- ↑ "Arya launches Ajay Ratnam's badminton academy". 13 April 2018. https://www.deccanchronicle.com/entertainment/kollywood/130418/arya-launches-ajay-ratnams-badminton-academy.html.
- ↑ Subramanian, Anupama (15 June 2017). "Dheeraj Ratnam strikes gold". https://www.deccanchronicle.com/entertainment/kollywood/150617/dheeraj-ratnam-strikes-gold.html.
- ↑ "Guest Appearance (Episode 19)". https://www.youtube.com/watch?v=iCMqNrfbh-4#t=1302.