திருடா திருடா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திருடா திருடா
இயக்கம்மணிரத்னம்
தயாரிப்புமணிரத்னம்
கதைமணிரத்னம்,
ராம் கோபால் வர்மா
இசைஏ.ஆர் ரஹ்மான்
நடிப்புஆனந்த்
பிரசாந்த்
ஹீரா ராஜ்கோபால்
அனு அகர்வால்
சலிம் கோசி
எஸ்.பி பாலசுப்பிரமணியம்
மலேசியா வாசுதேவன்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
விநியோகம்மெட்ராஸ் டாக்கீஸ்
வெளியீடு1993
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திருடா திருடா (Thiruda Thiruda) திரைப்படம் (1993) ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆனந்த், பிரசாந்த் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

திருட்டுத் தொழில்களில் ஈடுபடும் கதிரும் (ஆனந்த்) அழகும் (பிரசாந்த்) இணைபிரியாத நண்பர்கள் மேலும் இவர்களின் தோழியான ராசாத்தியும் இவர்களுடன் திருட்டுத் தொழிலில் ஈடுபடுகின்றாள்.காவல் துறையினரிடமிருந்து பலமுறை தப்பிச் செல்லும் இவர்கள் நடனமாடும் பெண்ணொருத்தியைச் சந்திக்கின்றனர்.மேலும் அவளின் கூற்றுப்போல 1000 கோடிகள் மதிப்புடைய பணத்தினைத் தேடியும் செல்கின்றனர்.இதன் பிறகு அவள் சர்வதேச அளவிலான திருட்டுத் தொழில்களில் ஈடுபடும் திருட்டுக் கும்பலில் ஒருத்தியெனவும் மேலும் அவள் வைத்திருக்கும் அடையாள அட்டை ஒன்றின் மூலமே அக்கும்பல்களின் தலைவனால் கடத்தப்பட்டுச் செல்லப்படும் பணத்தினைப் பெற முடியும் என்பதனையும் அறிகின்றனர்.இவற்றைத் தெரிந்து கொள்ளும் அத்திருடர்களின் தலைவன் அவனுடைய காடையர் கூட்டத்துடன் தனக்குத் துரோகம் செய்தவளைத் தேடுகின்றான்.பின்னர் அவர்கள் அப்பணத்தை எடுத்தார்களா இல்லை கதிரும் அழகும் அப்பணத்தைப் பெற்றனரா என்பதே கதையின் முடிவாகும்.

பாடல்கள்

பாடலாசிரியர் - வைரமுத்து

துணுக்குகள்

  • இத்திரைப்படமே இந்தியாவின் அகேலா கிரேன் மூலம் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாகும்.
  • ஹிந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு சோர் சோர் என வெளியிடப்பட்டது

வெளியிணைப்புகள்

வார்ப்புரு:மணிரத்தினத்தின் திரைப்படங்கள்

"https://tamilar.wiki/index.php?title=திருடா_திருடா&oldid=34093" இருந்து மீள்விக்கப்பட்டது