ஒற்றன் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஒற்றன்
இயக்கம்இளங்கண்ணன்
தயாரிப்புகாந்திலால் பன்சாலி
கதைஇளங்கண்ணன்
இசைபிரவீண் மணி
நடிப்புஅர்ஜுன்
சிம்ரன்
ஒளிப்பதிவுகே. எஸ். செல்வராஜ்
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்பாப்புலர் மூவிஸ்
வெளியீடு24 அக்டோபர் 2003
நாடு இந்தியா
மொழிதமிழ்

ஒற்றன் (Ottran) என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் உளவுப்புனைவு திரைப்படமாகும். இப்படத்தில் அர்ஜுன், சிம்ரன், மனோரமா, வடிவேலு, தேஜாஸ்ரீ, சரத் பாபு ஆகியோர் நடித்தனர். இளங்கண்ணன் இயக்கிய இப்படத்திற்கு பிரவீண் மணி இசையமைத்துள்ளார்.[1] இப்படம் தெலுங்கில் கூடாச்சாரி நம்பர் 1 என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

கதை

கார்த்திக் ( அர்ஜுன் ) ஒரு ரா உள்ளவாளி, அவர் நாட்டை சீர்குலைக்க விரும்பும் ஒரு தேச விரோத குழுவின் பாதையில் குறுக்கிடுகிறார். புதுதில்லியில் தனது தாயுடன் ( மனோரமா ) ஒரு அரண்மனை வீட்டில் வசித்து வருகிறார். பாராளுமன்றம், கோயில் போன்றவற்றின் மீது தாக்குதல் நடத்தலின் பின்னணியில் உள்ள பயங்கரவாதியான நாப் அலி சென்னை காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளார். அலியை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் பொறுப்பு காவல்துறையின் ஐ.ஜி ( சரத் பாபு ) அவர்களிடம் உள்ளது. அவருக்கு சுதா ( சிம்ரன் ), ஷியாம் கணேஷ் என்ற பிள்ளைகள் உண்டு.

இந்நிலையில் அலியின் சகாக்கள் சுதாவை கடத்தி, மூன்று பயங்கரவாதிகளை அவர்களது வீட்டிற்கு அழைத்து வந்து தங்க இடம் கொடுக்க அவரது சகோதரரை அச்சுறுத்துகிறார்கள். எனவே அவர் அவர்களை தனது நண்பர்களாக அறிமுகப்படுத்தி தனது தந்தையின் உத்தியோகபூர்வ பங்களாவில் தங்ஙவைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்.

கார்த்திக் சுதாவை பயங்கரவாதியிடமிருந்து காப்பாற்றி, அலியை மீட்டு மாநிலத்தில் வகுப்புக் கலவரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ள ஐ.எஸ்.ஐ சதியை முறியடிக்க சென்னை வருகிறார். கார்த்திக் அவர்களை எப்படி முறியடிக்கிறார் என்பது படத்தின் எஞ்சிய பகுதியாகும்.

நடிகர்கள்

தயாரிப்பு

அர்ஜுன் இயக்கிய ஏழுசமலை வெற்றிக்குப் பிறகு, அர்ஜுன்- சிம்ரான் இணை ஒற்றன் படத்தில் இசைந்து நடித்தனர். இப்படத்தை இயக்குராக அறிமுகமான இளங்கண்ணன் இயக்குனர் ஷங்கரிடம் பயிற்சி பெற்றவராவார். அர்ஜுன் இந்த படத்தில் ஒரு ரகசிய உளவாளியாக நடித்தார், இது அவருக்கு போதுமான சண்டைக் காட்சிகளுக்கு வாய்ப்பு இருந்தது. சென்னையில் நாற்பது நாள் திட்டமிட்ட படப்பிடிப்பு தொடங்கியது.[2]

இசை

ஒற்றனில் இடம்பெற்ற ஆறு பாடல்களுக்கும் பிரவீண் மணி இசையமைத்தார்.[3]

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஒற்றன்_(திரைப்படம்)&oldid=31600" இருந்து மீள்விக்கப்பட்டது