மதராஸ் கஃபே (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மதராஸ் கஃபே
Madras Cafe
இயக்கம்சூஜித் சிர்க்கார்
தயாரிப்புஜான் ஆபிரகாம்[1]
ரொனி லாகிரி[2]
இசைசந்தனு மொய்த்ரா
நடிப்புஜான் ஆபிரகாம்
நர்கிசு ஃபாக்ரி
ஜாக்குலின் பெர்னாண்டஸ்
லீனா மரியா
ஒளிப்பதிவுகமல்ஜித் நேகி
படத்தொகுப்புசேகர் பிரசபதி
வெளியீடுஆகத்து 23, 2013 (2013-08-23)
நாடுஇந்தியா
மொழிஇந்தி

மதராஸ் கஃபே (Madras Cafe) என்பது 2013 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு அரசியல் கலந்த பாலிவுட் இந்தி மொழி அதிரடித் திரைப்படம் ஆகும். சூஜித் சிர்க்கார் இதனை இயக்கினார்.[3][4] ஜான் ஆபிரகாம் இந்தியப் புலனாய்வுத்துறை முகவராகவும்[1], நர்கிசு ஃபாக்ரி பன்னாட்டு ஊடகவியலாளராகவும் இத்திரைப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஈழப்போர் மற்றும் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படம் இந்தியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டது.[1][5] இதன் தலைப்பு ஆரம்பத்தில் ஜாஃப்னா (Jaffna) எனப் பெயர் வைக்கப்பட்டது.[6] 2013 ஆகஸ்ட் 23இல் இது வெளியிடப்பட்டது[7].

நடிகர்கள்

  • ஜான் ஆபிரகாம் - விக்ரம் சிங்
  • ஆயுஷ்மன் குரானா
  • நர்கீசு ஃபாக்ரி - பிரீத் ஒபராய்
  • ராசி கன்னா[8]
  • லீனா மரியா[9]

படம் பற்றிய சர்சை

இந்தத் திரைப்படம் தொடர்பாக தமிழகத்தில் பெரும்பான்மையான (பாமக,மதிமுக,நாம் தமிழர்) அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன, காரணம், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை தவறாக சித்தரித்து பாத்திரம் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.[10]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "John Abraham's movie JAFFNA based on LTTE" இம் மூலத்தில் இருந்து 22 ஜூன் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120622013936/http://www.glamsham.com/movies/scoops/12/mar/01-news-john-abraham-movie-jaffna-based-on-ltte-031202.asp. பார்த்த நாள்: 25 November 2012. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2013-07-13.
  3. "Nargis plays foreign journalist in John Abraham's film". Times of India. Archived from the original on 2012-12-14. பார்க்கப்பட்ட நாள் 26 November 2012.
  4. "Jaffna Story, Preview & Synopsis" இம் மூலத்தில் இருந்து 11 மார்ச் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130311040825/http://www.cinebasti.com/movie/Jaffna/3540/story. பார்த்த நாள்: 25 November 2012. 
  5. "Jaffna Cast & Crew". http://www.bollywoodhungama.com/moviemicro/cast/id/507435. பார்த்த நாள்: 25 November 2012. 
  6. A Bollywod thriller on SL war to be released in Aug
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-05. பார்க்கப்பட்ட நாள் 2013-07-13.
  8. http://www.indianexpress.com/news/newbie-rashi-khanna-in-madras-cafe/1057433/
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-27. பார்க்கப்பட்ட நாள் 2013-07-13.
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-22. பார்க்கப்பட்ட நாள் 2013-08-19.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மதராஸ்_கஃபே_(திரைப்படம்)&oldid=29553" இருந்து மீள்விக்கப்பட்டது