இன்னிசை மழை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இன்னிசை மழை
இயக்கம்ஷோபா சந்திரசேகர்
தயாரிப்புவிஜய்
கதைஷோபா சந்திரசேகர் (உரையாடல்)
திரைக்கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுசக்கரவர்த்தி
படத்தொகுப்புகௌதம்ராஜ்
கலையகம்வி. வி. கிரியேசன்ஸ்
வெளியீடுஏப்ரல் 12, 1992 (1992-04-12)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இன்னிசை மழை (Innisai Mazhai) என்பது 1992 ஆண்டு வெளியான தமிழ் காதல் திரைப்படம் ஆகும். ஷோபா சந்திரசேகர் இயக்கிய இப்படத்தில் நீரஜ், பர்வீன், விவேக், புதுமுகம் சுதாகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். விஜய் தயாரித்த இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார். இப்படம் 1992 ஏப்ரல் 12 இல் இப்படம் வெளியானது.[1][2]

கதை

விஜய் (நீரஜ்), மம்தா (பர்வீன்), மைக்கேல் ( விவேக் ), சரவணன் (சுதாகர்) ஆகியோர் ஒரே இசைக் குழுவைச் சேர்ந்தவர்களாவர். மைக்கேலும் சரவணனும் மம்தாவை காதலிக்கிறார்கள். ஆனால் மம்தா விஜயை நேசிக்கிறாள். விஜய் காதலை வெறுக்கிறான். அவளுடைய காதலை நிராகரிக்கிறான். அவனது வார்த்தைகளால் வருந்திய, மம்தா தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். விஜய்யின் தந்தை அவனை தனியாளாக வளர்த்தார். அவனுக்கு அவனது தாயாரைத் தெரியாது. எனவே அவனது தந்தை, உண்மையில், மைக்கேலின் தாய் யார் என்பதை அவனது வெளிப்படுத்துகிறார். இறுதியாக, விஜய் மம்தாவின் அன்பைப் புரிந்துகொண்டு அவளுடைய காதலை ஏற்றுக்கொள்கிறான்.

நடிகர்கள்

இசை

படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் இளையராஜா மேற்கொண்டார். 1992 இல் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவில், வாலி எழுதிய ஒன்பது பாடல்கள் இருந்தன.[3]

எண் பாடல் பாடகர் (கள்) காலம்
1 'அடி நேற்றிரவு' எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:47
2 'தூரி தூரி மனதில் ஒரு தூரி' எஸ். பி. பாலசுப்ரமண்யம், ஷோபா சந்திரசேகர் 4:33
3 'ஹெலோ ஹெலோ' மைதிலி 5:14
4 'மங்கை நீ' இளையராஜா, எஸ். என். சுரேந்தர் 4:15
5 'ஒரு பச்சைக் கொடி' சித்ரா 4:27
6 'ஒரு ராக' எஸ். பி. பாலசுப்பிரமண்யம், எஸ். ஜானகி 5:47
7 'தெற்கே பிறந்த' எஸ். பி. பாலசுப்ரமண்யம் 5:09
8 'வா வா கண்மணி' எஸ். பி. பாலசுப்பிரமண்யம், எஸ். ஜானகி 7:49
9 'வா வா மன்னவா' எஸ். பி. பாலசுப்பிரமண்யம், எஸ். ஜானகி 5:40

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இன்னிசை_மழை&oldid=30920" இருந்து மீள்விக்கப்பட்டது