நேசம் புதுசு
நேசம் புதுசு | |
---|---|
இயக்கம் | கார்த்திவேல் |
தயாரிப்பு | டி. சி. பாண்டியன் |
கதை | என். இராமலிங்கம் |
இசை | பாபி |
நடிப்பு | ரஞ்சித் பிரியா ராமன் |
வெளியீடு | 1 திசம்பர் 1999 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நேசம் புதுசு (Nesam Pudhusu) என்பது 1999 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் நாடகத் திரைப்படமாகும். கார்த்திவேல் எழுதி இயக்கிய இப்படத்தில் ரஞ்சித், பிரியா ராமன், அஜய் ரத்னம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கான இசையை பாபி அமைதுள்ளார். படம் 1999 அக்டோபரில் கலவையான விமர்சனங்களுடன் வெளியானது.[1]
நடிகர்கள்
- ரஞ்சித் ரஞ்சித்தாக
- பிரியா ராமன் வசந்தியாக
- செந்தில் சித்தபுவாக
- வடிவேலு (நடிகர்) வேலுவாக
- சங்கிலி முருகன் கிரமத் தலைவராக
- அஜய் ரத்னம் வசந்தியின் உறவினராக
- சக்திகுமார் சுரேசாக
- பயில்வான் ரங்கநாதன் மேஜர் மாயாண்டி
- கோவை சரளா
- காந்திமதி (நடிகை)
- வைசாலி சுமதியாக
- பிரேமி பள்ளிப் பணியாளராக
- குள்ளமணி
- இடிச்சப்புளி செல்வராசு
- வெள்ளை சுப்பையா ஐயராக
- திடீர் கண்ணையா
- மண்ணங்கட்டி சுபுபிரமணியம்
- கே. கே. சௌந்தர்
- போண்டா மணி
- கோவை செந்தில்
- செல்லதுரை
தயாரிப்பு
படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்த ரஞ்சித், பிரியா ராமன் ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.[2][3]
இசை
படத்திற்கான இசைப்பணியை பாபி மேற்கொண்டார்.
- மீரா மீரா - ஹரிஹரன்
- பூங்குயிலு சத்தம்தான் - எஸ். ஜானகி
- கண்ணோரமா ரோசப்பூ - பி. உன்னிகிருஷ்ணன்
- ஒரங்கட்டு ஒரங்கட்டு - மனோ
- ஊத்திக்கடா மச்சன் - வடிவேலு
வெளியீடு
1999 அக்டோபரில் படம் வெளியானதைத் தொடர்ந்து, இது கலவையான விமர்சனங்களைப் பெற்றது. BBthots.com இன் ஒரு விமர்சகர் குறிப்பிடும்போது, "திரைப்படத்திற்கு போகாதீர்கள் என்று எச்சரிக்கும் எந்த காரணிகளும் இல்லை, ஆனால் அதே நேரத்தில், பாருங்கள் என்று பரிந்துரைக்கவும் எனக்கு எதுவும் இல்லை".[4] நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுதியது யாதெனில் "நேசம் புதுசு ஒரு எளிமையான படம், ஆனால் இயக்குனர்களான வேல் மற்றும் கார்த்திக் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள்".[5] இந்து எழுதியது யாதெனில் "நேசம் புத்துசில் " ஒரு இளம் ஜோடி திருமணமான தம்பதிகளாக வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கவேண்டிய ஒரு வித்தியாசமான கிராமத்தை அடிபடையக கொண்ட கதை." அறிமுகமான இயக்குனர்களான வேல்-கார்த்திக் ஆகியோர் பாடல், நடனங்கள் மற்றும் நகைச்சுவைத் காட்சிகளுடன் சரியான மாற்றங்களைக் கொண்டு வருகிறனர்.[6]
மேற்கோள்கள்
- ↑ "Nesam Puthusu Movie on KTV HD: Nesam Puthusu Movie Schedule, Songs and Trailer Videos". In.com இம் மூலத்தில் இருந்து 2016-03-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160310003747/http://www.in.com/tv/movies/ktv-hd-465/nesam-puthusu-35184.html.
- ↑ "Rediff On The NeT, Movies: Gossip from the southern film industry". Rediff.com. 1999-06-24. http://www.rediff.com/entertai/1999/jun/24ss.htm.
- ↑ "Priya Raman separated from husband? - The Times of India". Timesofindia.indiatimes.com. 2014-06-13. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Priya-Raman-separated-from-husband/articleshow/36477248.cms.
- ↑ "Nesam Pudhusu". Bbthots.com இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304030420/http://www.bbthots.com/reviews/1999/npudhusu.html.
- ↑ https://news.google.com/newspapers?nid=x8G803Bi31IC&dat=19991023&printsec=frontpage&hl=en
- ↑ https://web.archive.org/web/20200609164733/http://www.cscsarchive.org/MediaArchive/art.nsf/(docid)/9D67474767131C8A65256941003DC8F5