செல்லதுரை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

செல்லதுரை (Chelladurai) என்பவர் ஒரு இந்திய நகைச்சுவை நடிகர். இவர் தமிழ் படங்களில் பணிபுரிந்தார். இவர் 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தொழில்

செல்லதுரை தூறல் நின்னு போச்சு (1982) படத்தின் மூலம் நடிகராக அறிமகமானார். நடிகர் வடிவேலுவுடனான நகைச்சுவைக் காட்சிகளுக்காக இவர் அறியப்படுகிறார்.[1]

ஸ்ரீ (2002) படத்தில் பிரபா என்ற ஒயின் கடையின் உரிமையாளராக நடித்ததற்காக இவர் பிரபலமானார். இப்படக் காட்சியில், மரிமுத்து ( வடிவேலு ) கடை உரிமையாளரை தொலைபேசியில் அழைத்து கடை எப்போது திறக்கும் என்று கேட்கிறார். கடை மூடப்பட்டதாக உரிமையாளர் கூறுகிறார். வடிவேலு மது அருந்திவிட்டு, கடை உரிமையாளரை இரவில் பலமுறை தொந்தரவு செய்கிறார்.[2]

இறப்பு

பல மாதங்களாக சிறுநீரக பிரச்சினைகளில் அவதிப்பட்ட காரணமாக செல்லதுரை சென்னையில் உள்ள கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிப்ரவரி 8 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். உயர் இரத்த அழுத்தம் காரணமாக அவர் 7 பிப்ரவரி 2015 அன்று இறந்தார்.[1]

திரைப்படவியல்

படங்கள்
தொலைக்காட்சி

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=செல்லதுரை&oldid=21830" இருந்து மீள்விக்கப்பட்டது