ஆவணித் திங்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆவணித் திங்கள்
இயக்கம்ஹரிகிருஷ்ணா
தயாரிப்புபி. இராஜாராம் ரெட்டி
கதைஹரிகிருஷ்ணா
இசைஆர். சங்கர்
நடிப்பு
ஒளிப்பதிவுவேதா செல்வம்
படத்தொகுப்புஎம். சங்கர்
கே. இட்ரிஸ்
கலையகம்ராயர் பிலிம்ஸ் இண்டர்நேசனல்
வெளியீடுநவம்பர் 17, 2006 (2006-11-17)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆவணித் திங்கள் (Aavani Thingal) என்பது 2006 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். ஹரிகிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் புதுமுகங்கள் சுப்பிரமணியன் கோபாலகிருஷ்ணன், தேஜினி, மதிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், இதில் லிவிங்ஸ்டன், காதல் சுகுமார், டெல்லி குமார், அஜய் ரத்னம், ராம்குமார், லாவண்யா, சுந்தரி ஆகியோர் துணை வேடங்களில் நடிதுள்ளனர். பி. ராஜாராம் ரெட்டி தயாரித்த இப்படத்திற்கு ஆர். சங்கர் இசை அமைத்தார். படமானது 2006 நவம்பர் 17 அன்று வெளியிடப்பட்டது.[1]

கதை

ஒரு தொலைதூர கிராமத்தில் உள்ள, இரசப்பா ( சுப்பிரமணியன் கோபாலகிருஷ்ணன் ) ஒரு அனாதை அவன் உள்ளூர் பணக்கார பெரியாவரின் ( டெல்லி குமார் ) வீட்டில் பணிபுரிகிறார். இரசப்பா திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். அவனது நண்பன் சிங்கமுத்து ( காதல் சுகுமார் ) அவனை பொன்னுசாமியை ( லிவிங்ஸ்டன் ) சென்று சந்திக்குமாறு கூறுகிறான். பொன்னுசாமி ஒரு திருமண தரகர், அவர் தனது மூன்று வளர்ந்த மகள்களுக்குத் திருமணத்தை முடிக்காமல் உள்ளார். காயத்ரி (மதிஷா) பொன்னுசாமியின் மகள், அவளது தாயார் சரோஜா (சுந்தரி) அவளுக்கு திருமணத்தை நடத்த விரும்புகிறார். இதற்கிடையில், பெரியவாரின் பேத்தியும், நவீன நகர பெண்ணான தீபிகா (தேஜினி), தனது தாத்தாவின் வீட்டில் வசிப்பதற்காக நிச்சயதார்த்தம் செய்த நிலையில் வருகிறாள். விரைவில், இரசப்பாவுக்கும், தீபிகாவுக்கும் இடையில் தவறான புரிதல் ஏற்படுகிறது. மேலும் அவர்களுக்குள் ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் சண்டை ஏற்படுகிறது. காயத்ரியைக் காதலிக்கும் இரசப்பா, அவளை தனக்கு திருமணம் செய்துதரும்படி அவளது பெற்றோரிடம் கேட்கிறான். ஆனால் அவளுடைய தாய் சரோஜா அவனுக்கு பெண்தர மறுத்து அவமானப்படுத்துகிறாள். மனம் உடைந்த இரசப்பா இறுதியாக பணமில்லாத தனக்கு யாரும் பெண் தரமாட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்கிறான். அதிக பணம் சம்பாதிக்க, கிணறுகள் வெட்ட வெடி வைக்கும் மிக ஆபத்தான வேலையை மேற்கொள்கிறான். இரசப்பா விரைவில் தனது கடின உழைப்பால் பணக்காரனாக ஆகிறான்.

காயத்ரியின் பெற்றோர் இறுதியில் தங்கள் மகளை அவனுக்கு மணமுடித்துக் கொடுக்க ஒப்புக்கொள்கிறார்கள். திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, தீபிகாவின் குறும்பின் காரணமாக கிணற்றில் வெடி வைக்கும்போது இரசப்பாவுக்கு கடுமையான விபத்து ஏற்பட்டுகிறது. இரசப்பா வெடியில் இருந்து உயிர் தப்புகிறான், என்றாலும் அவனது வலது கையை இழந்துவிடுகிறான். இதனால் திருமணம் ரத்து செய்யப்படுகிறது. ரசப்பாவுக்கு இவ்வாறு நடந்தத்தற்கு தானே காரணம் என்று குற்ற உணர்ச்சியுடன், அவனுக்கு பெண்பார்க்க தீபிகா முடிவு செய்கிறாள். பல முயற்சிகளுக்குப் பிறகு, அழகிய இராசத்தியை ( லாவண்யா ) அவர்கள் பெண் பார்கிறார்கள். அவள் இரசப்பாவை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்கிறாள். திருமணத்திற்கு முந்தைய நாள், இராசாத்தி ஒரு மோசடிப் பெண் என்பதைக் கண்டுபிடிக்கின்றனர். இதற்கு முன்பு அவள் பல ஆண்களை மணந்து, மறுநாள் அவர்களின் மதிப்புமிக்க உடமைகளுடன் ஓடிப்போனவள் என்பதை அறிகின்றனர். அவன் திருமணத்தை நிறுத்த வேண்டாம் என்று முடிவு செய்கிறான். நிலைமையை அறிந்த தீபிகா, இராசப்பாவை மறுநாள் காலை கிராம கோவிலில் ரகசியமாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறாள். மறுநாள் காலையில் இரசப்பா கோவிலுக்கு வந்து தீபிகாவை திருமணம் செய்துகொள்ள மறுக்கிறான். தீபிகா ஆச்சரியப்படும்படி, காயத்ரியும் அவளது குடும்பத்தினரும் கோவிலுக்கு வருகிறார்கள். நிச்சயதார்த்தத்துகுப் பிறகு இரசப்பாவை தான் காதலித்ததாக காயத்ரி தீபிகாவிடம் கூறுகிறாள். இரசப்பா மனிதரில் மாணிக்கம் என்றும், தன் மகளை அவனுக்கு திருமணத்தில் கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவளது பெற்றோர் கூறுகின்றனர். ரசப்பா, காயத்ரி திருமணத்துடன் படம் முடிகிறது.

நடிகர்கள்

தயாரிப்பு

இயக்குனர் கே. எஸ். ரவிக்குமாரிடம் இணை இயக்குநராக இருந்த ஹரிகிருஷ்ணா, ராயர் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட அவாணித் திங்கள் படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார். புதுமுகம் சுப்பிரமணியன் கோபாலகிருஷ்ணன் (ஸ்ரீகுமார் என குறிப்பிடப்படுகிறார்) முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். மும்பையில் நாடகக் கலைஞராக இருந்த புதுமுகம் தேஜினி, மதிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க தேர்வு செய்யப்பட்டனர். படத்தின் பெரும்பகுதி உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, சாலக்குடி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. படம் குறித்து பேசிய இயக்குனர், “இது ஒரு வித்தியாசமான கதையோட்டத்துடன் கூடிய காதல் பொழுதுபோக்கு படம்” என்றார்.[2][3]

இசை

திரைபடத்தின் பின்னணி இசை மற்றும் பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் ஆர். சங்கர் மேற்கொண்டார். பாடல் பதிவில் ஆறு பாடல்கள் உள்ளன.[4][5][6]

பால்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "இதோ இரு விழி"  ஸ்ரீநிவாஸ், கலைச்செல்வி 6:17
2. "பட்டணத்து"  புஷ்பவனம் குப்புசாமி 3:14
3. "கூட்டுக்குள்ளே"  பி. உன்னிகிருஷ்ணன், சித்ரா 4:23
4. "என் உசுரத் தொட்டு"  ஹரிஷ் ராகவேந்திரா 5:08
5. "எழுதாத"  ஆசைத்தம்பி 4:28
6. "திண்டுக்கல்லு பூட்டு"  கிரேஸ் கருணாஸ் 4:20
மொத்த நீளம்:
27:50

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆவணித்_திங்கள்&oldid=30618" இருந்து மீள்விக்கப்பட்டது