வேலுப்பிள்ளை பிரபாகரன்
வேலுப்பிள்ளை பிரபாகரன் | |
---|---|
பிறப்பு | வல்வெட்டித்துறை, இலங்கைத் தீவு[1][2][3] | 26 நவம்பர் 1954
இறப்பு | 18 மே 2009 முல்லைத்தீவு, இலங்கை | (அகவை 54)
இறப்பிற்கான காரணம் | 18 மே 2009 அன்று எஸ்.ஏ.எஸ்.எப் என்னும் ஒரு இயக்கத்தின் மூலம் கொல்லப்பட்டார்[4] |
தேசியம் | ஈழத்தமிழர் |
மற்ற பெயர்கள் | கரிகாலன் |
பணி | தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் |
குற்றச்செயல் | 1996 ஆம் ஆண்டு கொழும்பு மத்திய வங்கி குண்டுவெடிப்பு |
பெற்றோர் | திருவேங்கிடம் வேலுப்பிள்ளை, பார்வதியம்மாள் |
வாழ்க்கைத் துணை | மதிவதனி (1984–2009) † |
பிள்ளைகள் | சார்லசு அன்ரனி (1989–2009) †[5] துவாரகா (1986–2009) †[6] பாலச்சந்திரன் (1997–2009) †[7] |
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, 26 நவம்பர் 1954 – 17 மே[8] அல்லது 18 மே[1] 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975 இல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் இவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக இவர் குற்றம் சாட்டப்பட்டார். மே 5, 1976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்தியா, மலேசியா, ஐக்கிய அமெரிக்காஇ,கனடா, ஐக்கிய இராச்சியம், போன்ற 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ராசீவ் காந்தி படுகொலைக்கு மற்றும் பல கொலைச் சம்பவங்களுக்கு இவரே காரணம் என நம்பப்படுகிறது.
உலகத்தின் ஒரு பகுதி இலங்கைத் தமிழர்கள் இவரைத் தமிழ்த்தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், அதேநேரம் இவரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள், சனநாயக விரும்பிகள், இவரை எதிர்க்கிறார்கள். அத்தோடு இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் இவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் இராசிவ் காந்தி படுகொலையில், இவருக்கு தொடர்பு இருப்பதாக இந்திய அரசு கருதியதால் இவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.[9] எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் செ. பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார்.[8] அத்துடன் இவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள்.[8] பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படைத்துறையால் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும், அவரது உடலின் ஒளிப்படமும் கிடைக்கப் பெற்றது.[10] மதிவதனியின் நிலையும், துவாரகாவின் நிலையும் புரியப்படவில்லை.
சிறுவயது அனுபவங்கள்
பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த தமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் இவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியரால் ஈழத்தமிழர்கள், கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்களை இவர் கேள்விப்பட்டார். இவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறினார். பாணந்துறையில் இந்து குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம் போன்ற கொடூரமான வன்முறைகளை இவர் அறிந்தபோது, சிங்கள அரசின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் இவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று இவர் முடிவு செய்தார்.
ஆரம்பக் கல்வியும் போராட்ட ஈடுபாடும்
பிரபாகரன் வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்திலுள்ள சிதம்பரா கல்லூரியில் 10ஆம் வகுப்பு வரையிலும் கல்வி கற்றார். தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல இலங்கை அரசின் மேற்கல்வி தரப்படுத்தல் கொள்கை ஒரு தடையாக இருந்தது. 10ஆம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பிரபாகரனின் போக்கு இவரது பெற்றோருக்குப் புரியவில்லை. ஒருநாள் காவல்துறை பிரபாகரனை தேடி முதன்முதலில் அதிகாலை 3 மணிக்கு வீடுவந்த போதே அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற பிரபாகரன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன் வீட்டிற்குத் நிரந்தரமாக திரும்பவே இல்லை.
பிரபாகரன் கூற்றுகள்
- "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." [11]
- 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' [12]
- "ஒரு தவறு நடந்தால் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." [13]
- "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார்.[14]
- "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." [13]
- "ஏதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போராளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." [15]
- "செய் அல்லது செத்துமடி."
பிரபாகரன் சிற்பம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில், தெற்குப்பொய்கைநல்லூர் எனும் ஊரில் உள்ள அய்யனார் கோயிலில் பிரபாகரனுக்கு சுதை சிற்பம் அமைக்கப்பட்டது.[16] இரண்டு குதிரை சிலைகளும், ஒரு யானை சிலையும் அமைக்கப்பட்டு அதில் ஒரு குதிரை வீரன் சிலையும், மற்றொரு குதிரை அருகே பிரபாகரன் சிலையும் அமைக்கப்பட்டது. பிரபாகரன் கையில் துப்பாக்கியுடனும், விடுதலைப் புலிகள் சீருடையுடனும் இருப்பதாக அமைக்கப்பட்டிருந்தது.[17][18]
2015 சூலை மாதம் இந்த சிலை இரவில் அகற்றப்பட்டு சிமெண்ட் தளம் போடப்பட்டது. ஊர்மக்கள் இவ்வாறு காவல் துறையினரே செய்தனர் என தெரிவித்தனர்.[19]
விழுப்புரம் மாவட்டம், சடையாண்டிகுப்பம் எனும் ஊரில் உள்ள ஐயனார் கோயிலில் வீரப்பன் மற்றும் பிரபாகரனின் சுதை சிற்பங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. 2010 இல் கட்டப்பட்ட ஐயனார் கோயிலில் இவ்வாறு சிலைகள் இருப்பதை அறிந்த காவல்துறையினர் மக்களிடம் அவற்றை அகற்ற கூறியுள்ளனர்.[20]
தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் இருந்து பிரபாகரன் சிலை அகற்றப்பட்டது குறித்து சூன் 2015 இல் சீமான் கண்டன அறிக்கை வெளியிட்டார்.[16] அதில் பிரபாகரன் சிலையை மீண்டும் நிறுவ நாம் தமிழர் கட்சி முயலும் என்றார்.[16] வைகோவும் இந்த சிலை உடைப்பிற்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார்.[21]
குடும்பம்
பிரபாகரன் 1 அக்டோபர் 1984 இல் மதிவதனியை கடத்திச் செல்லப்பட்ட பின்பு திருமணம் செய்து கொண்டார். இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிரபாகரன் குடும்பத்தின் எஞ்சிய உறுப்பினர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்று மே 2009 இல் கூறினார். "நாங்கள் அவர்களின் உடல்களைக் கண்டுபிடிக்கவில்லை, அவற்றைப் பற்றி எந்த தகவலும் இல்லை" என்று அவர் கூறினார். முழுக் குடும்பமும் அழிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகியோரின் சடலங்கள் பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து 600 மீட்டர் தொலைவில் ஒரு புதர் திட்டில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்போது இவரது 12 வயது மகன் தூக்கிலிடப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரபாகரனின் பெற்றோர், திருவேங்கடம் வேலுப்பிள்ளை, பார்வதி ஆவர். 70 வயதில், வவுனியா நகருக்கு அருகில் இடம்பெயர்ந்த மக்களுக்காக மெனிக் பண்ணை முகாமில் காணப்பட்டனர். தங்களை விசாரிக்கவோ, தீங்கு செய்யவோ அல்லது மோசமாக நடத்தப்படவோ மாட்டோம் என்று இலங்கை இராணுவமும் அரசாங்கமும் பொதுமக்களுக்கு உறுதியளித்தன. சனவரி 2010 இல் வேலுப்பிள்ளை இறக்கும் வரை அவர்கள் இலங்கை இராணுவக் காவலில் வைக்கப்பட்டனர். பிரபாகரனுக்கு வினோதினி இராஜேந்திரன் என்ற சகோதரி உள்ளார்.
தபால்தலை வெளியீடு
பிரான்சில் உள்ள செயற்பாட்டாளர்கள் இவரது உருவப்படத்தைக் கொண்ட தபால்தலையை வெளியிட்டுள்ளனர். இதற்கு பிரான்சின் அஞ்சல் துறை அங்கீகாரம் அளிக்கவில்லை. இத்துடன் தமிழீழ வரைபடம், விடுதலைப் புலிகளின் மலர், புலிக்கொடி ஆகியவற்றைக் கொண்ட தபால்தலை முத்திரைகளும் வெளியிட்டுள்ளனர்.[22] இதற்கு பிரான்சிலுள்ள இலங்கைத் தூதரகம் கண்டனம் வெளியிட்டது.[23]
குற்றச்செயல்கள்
வேலுபிள்ளை பிராபாகரன் தீவிரவாதம் , கொலை மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்காக 1991 முதல் பன்னாட்டுக் காவலகம் அமைப்பால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.[24] மேலும் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தால் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது.[25] மேலும் 1991இல் ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய திட்டமிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டார்.[26]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Lanka army sources". Times of India. 18 May 2009 இம் மூலத்தில் இருந்து 2012-10-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121023235502/http://articles.timesofindia.indiatimes.com/2009-05-19/south-asia/28210187_1_tamil-tiger-velupillai-prabhakaran-soosai. பார்த்த நாள்: 2009-05-18.
- ↑ Bosleigh, Robert (2009-05-18). "Tamil Tigers supreme commander Prabhakaran 'shot dead'". Times Online (London). http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6309915.ece. பார்த்த நாள்: 2009-05-18.
- ↑ Nelson, Dean (2009-05-18). "Tamil Tiger leader Velupillai Prabhakaran 'shot dead'". Telegraph (London). https://www.telegraph.co.uk/news/worldnews/asia/srilanka/5342331/Tamil-Tiger-leader-Velupillai-Prabhakaran-shot-dead.html. பார்த்த நாள்: 2009-05-19.
- ↑ "Tiger leader Prabhakaran killed: Sources-News-Videos-The Times of India". The Times of India. 2009-05-18. http://timesofindia.indiatimes.com/videoshow/4546368.cms. பார்த்த நாள்: 2009-05-19.
- ↑ "Prabhakaran's son dead". Mid-day.com. 2009-05-18. http://www.mid-day.com/news/2009/may/180509-Charles-Anthony-Prabhakaran-son-dead.htm. பார்த்த நாள்: 2013-02-20.
- ↑ "National Leader Prabakaran’s Daughter Dwaraka’s photos released – Most Shocking". LankasriNews.com. 16 December 2009 இம் மூலத்தில் இருந்து 2 டிசம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141202085152/http://www.lankasrinews.com/view.php?221qPcc3nU34dv3f302CQq4d26g30bT7A3e2TOJ4b39Gae. பார்த்த நாள்: 2013-02-20.
- ↑ "BBC News – Balachandran Prabhakaran: Sri Lanka army accused over death". BBC. 2013-02-19. https://www.bbc.co.uk/news/world-asia-21509656. பார்த்த நாள்: 2013-02-20.
- ↑ 8.0 8.1 8.2 "விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக சர்வதேச ஒருங்கிணைப்பாளர் செல்வராசா பத்மநாதன் உறுதி செய்துள்ளார்". தமிழ்வின். 24 மே 2009 இம் மூலத்தில் இருந்து 2009-05-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090526122617/http://www.tamilwin.com/view.php?2aSWnBe0dbj0K0ecQG7X3b4j9EM4d3g2h3cc2DpY2d436QV3b02ZLu2e. பார்த்த நாள்: 2009-05-25.
- ↑ Prabhakaran Killed (டெய்லி நியூஸ்) பரணிடப்பட்டது 2009-05-21 at the வந்தவழி இயந்திரம் பிரபாகரனின் உடலை மே 19 காலை மீட்டதாக இலங்கை அரசு அறிவித்தது
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2009-07-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090727192233/http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&catid=277:2009&id=5976:2009-07-11-22-06-21.
- ↑ Reflection of Tamil Eelam National Leader V. Pirapaharan பரணிடப்பட்டது 2007-08-17 at the வந்தவழி இயந்திரம் டிசம்பர் 09, 2007 அணுகப்பட்டது.
- ↑ 'I always give less importance to speech, Only after growing up in action that we should begin speaking.' -Reflection of Tamil Eelam National Leader V. Pirapaharan பரணிடப்பட்டது 2007-08-17 at the வந்தவழி இயந்திரம் டிசம்பர் 09, 2007 அணுகப்பட்டது.
- ↑ 13.0 13.1 கேணல் வே. தீபன். "ஆற்றல் மிகு தலைவரின் அற்புதமான சிந்தனைகள்". உலகத்தமிழர் நவம்பர் 27, 2007: பக்கம் 15.
- ↑ கேணல் வே. தீபன். "ஆற்றல் மிகு தலைவரின் அற்புதமான சிந்தனைகள்". உலகத்தமிழர் நவம்பர் 27, 2007: பக்கங்கள் 15.
- ↑ கேணல் சூசை. "காலத்தை வென்ற காவிய நாயகன்". உலகத்தமிழர் நவம்பர் 27, 2007: பக்கம் 17.
- ↑ 16.0 16.1 16.2 http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=144685[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.vikatan.com/news/tamilnadu/47533.art?artfrm=related_article[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://m.dailyhunt.in/news/india/tamil/newsbuzzaar-epaper-newsdige/birabakaranukku-koyil-kattiya-timuga-biramukar-kadchi-nadavadikkai-edukkuma-newsid-40406399
- ↑ நாகை அருகே அய்யனார் கோயிலில் வைக்கப்பட்ட பிரபாகரன் சிலை அகற்றம்
- ↑ விழுப்புரம் அருகே வீரப்பன், பிரபாகரன் சிலைகளை கோயிலில் வைத்து வழிபட்ட மக்கள்
- ↑ http://www.dailythanthi.com/News/State/2015/06/08010645/MDMK-On-behalf-of-the-protest-tomorrow.vpf
- ↑ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உருவத்துடன் தபால் தலை வெளியீடு பரணிடப்பட்டது 2012-02-12 at the வந்தவழி இயந்திரம் இந்நேரம்.கொம் இணையத்தளம், பார்வையிடப்பட்ட நாள்:திசம்பர் 30, 2011
- ↑ 'பிரான்ஸின் பிரபாகரன் தபால் முத்திரை' பிபிசி தமிழோசை இணையத்தளம், பார்வையிடப்பட்ட நாள்:திசம்பர் 30, 2011
- ↑ "Wanted: VELUPILLAI, Prabakaran". Interpol. 2006-10-04. http://www.interpol.int/public/Data/Wanted/Notices/Data/1994/54/1994_9054.asp. பார்த்த நாள்: 2006-10-06.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Rajiv murder suspects sentenced to death". Brcslproject.gn.apc.org இம் மூலத்தில் இருந்து 2009-05-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090529105907/http://brcslproject.gn.apc.org/slmonitor/january98/raji.html. பார்த்த நாள்: 2009-05-17.
- ↑ "Rajiv Gandhi assassination: Agency probing killing conspiracy plods on". Times of India. 20 May 2011 இம் மூலத்தில் இருந்து 2011-09-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110909030106/http://articles.timesofindia.indiatimes.com/2011-05-20/chennai/29564202_1_chief-arms-procurer-ltte-leader-mdma.
இவற்றையும் பார்க்க
மேலும் படிக்க
- M.R.Narayan Swamy. (2003). Inside an Elusive Mind – Prabhakaran. USA: Literate World, Inc.
- Prabhakaran – A Leader for All Seasons – Glimpses of the Man behind the Leader [1]
- Chellamuthu Kuppusamy (2013). Prabhakaran: The Story of his struggle for Eelam. Amazon Digital Services, Inc.. http://www.amazon.com/dp/B00CJ6ZK8A.
- Chellamuthu Kuppusamy (2009). Prabhakaran – The Story of his struggle for Eelam. New Horizon Media Pvt Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8493-168-6 இம் மூலத்தில் இருந்து 2012-11-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121117103238/http://nhm.in/shop/978-81-8493-168-6.html. பார்த்த நாள்: 2012-12-07.
- Chellamuthu Kuppusamy (2008). பிரபாகரன்: ஒரு வாழ்க்கை. New Horizon Media Pvt Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8493-039-9 இம் மூலத்தில் இருந்து 2012-12-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121226135408/https://www.nhm.in/shop/978-81-8493-039-9.html. பார்த்த நாள்: 2013-04-29.
வெளி இணைப்புகள்
- பிரபாகரன் குறித்து T. சபாரத்தினம்
- The Pirabakaran Phenomenon by Sachi Sri Kantha பரணிடப்பட்டது 2006-02-17 at the வந்தவழி இயந்திரம்
- www.tamilnation.org தளத்தில் பிரபாகரன் குறித்த தகவல்
- www.eelamweb.com தளத்தில் பிரபாகரன் குறித்த தகவல் பரணிடப்பட்டது 2007-10-24 at the வந்தவழி இயந்திரம்
- "பிரபாகரனுடன் பிபிசி நேர்காணல் (13.09.94)" இம் மூலத்தில் இருந்து 31 அக்டோபர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041031144947/http://www.tamilcanadian.com/pageview.php?ID=229&SID=36. பார்த்த நாள்: 27 ஆகத்து 2016.
- "பிரபாகரனுடன் பிபிசி நேர்காணல் (27.04.95)" இம் மூலத்தில் இருந்து 31 அக்டோபர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041031100322/http://www.tamilcanadian.com/pageview.php?ID=213&SID=36. பார்த்த நாள்: 27 ஆகத்து 2016.
- முதல் நேர்காணல்
- புகழ்பெற்ற தமிழர்கள் - வேலுப்பிள்ளை பிரபாகரன் பரணிடப்பட்டது 2006-10-19 at the வந்தவழி இயந்திரம்