நீயே நிஜம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நீயே நிஜம்
இயக்கம்இந்திரன்
தயாரிப்புபி. ஜி. சதாசிவன்
வி. உதயகுமார்
கதைஇந்திரன்
இசைஜான் பீட்டர்
நடிப்பு
ஒளிப்பதிவுநிர்மல் ராஜா
படத்தொகுப்புஎஸ். அசோக் மேத்தா
கலையகம்இமாலயா இண்டர்நேசனல்
வெளியீடுமே 27, 2005 (2005-05-27)
ஓட்டம்100 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நீயே நிஜம் (Neeye Nijam) என்பது 2005 ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். இந்திரன் இயக்கிய இப்படத்தில் புதுமுகம் ஷான் விஜய், சுமேஷ் , தேஜாஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அஜய் ரத்னம், டெல்லி கணேஷ், எஸ். செல்வம், எம். எஸ். பாஸ்கர், மாறன், மஞ்சரி, கௌசல்யா செந்தமரை, பாரதி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். பி. ஜி. சாதசிவன் மற்றும் வி. உதயகுமார் ஆகியோர் தயாரித்த இப்படத்துக்கு ஜான் பீட்டர் இசை அமைத்துள்ளார். இந்த படம் 2004 நவம்பர் இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் 27 மே 2005 அன்று வெளியிடப்பட்டது.[1][2][3][4]

நடிகர்கள்

  • ஷான் விஜய் சந்துருவாக
  • சுமேஷ் ஆனந்தாக
  • தேஜாஸ்ரீ பிரியாவாக
  • அஜய் ரத்னம் காவல் ஆய்வாளராக
  • டெல்லி கணேஷ் பிரியாவின் தாத்தாவாக
  • எஸ். செல்வம் சந்துருவின் தந்தையாக
  • எம். எசு. பாசுகர் காவல்காரனாக
  • மாறன் சந்துருவின் நண்பன் சக்திவேலாக
  • மஞ்சரி சந்தியாவாக
  • கௌசல்யா செந்தாமரை பிரியாவின் பாட்டியாக
  • பாரதி சந்துருவின் தாய் சுகுனாவாக
  • சங்கீதா பாலன
  • சின்ராசு
  • தெனாலி
  • கிளி இராமச்சந்திரன்
  • சுரிச்சன்
  • பதமனி
  • ரிதா சூரானாவாக
  • ராஜிகா குஷ்பூவாக
  • ரூபன் ஜார்ஜ்

தயாரிப்பு

சோலை குயில் (1989), மலைச் சாரல் (1991), காதலே நிம்மதி (1998) போன்ற படங்களை இயக்கியவர் இந்திரன். இவர் பி. ஜி. சாதசிவன், வி. உதயகுமார் ஆகியோரின் தயாரிப்பில் இமாலயன் இண்டர்னேசனல் என்ற பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட என் கண்ணில் ஏன் விழுந்தாய் படத்தின் வழியாக மீண்டும் திரைப்படங்களை இயக்கத் துவங்கினார். புது முகங்களான ஷான் விஜய், சுமேஷ் ஆகியோருடன் இப்படத்தில் நாயகியாக தேஜாஸ்ரீ நடித்தார். "டேஞ்சரஸ்" மற்றும் "நீயே நிஜம்" ஆகிய பாடல்கள் கொழும்பில் படமாக்கப்பட்டன. பிற படப்பிடிப்புகளானது உதகமண்டலம், கோத்தகிரியில் நடந்தன. படத்திற்கான இசையை அறிமுக இசையமைப்பாளர் ஜான் பீட்டர் இசையமைக்க, நிர்மல் ராஜா ஓளிப்பதிவு செய்தார். பின்னர் படத்தின் பெயரானது என் கண்ணில் ஏன் விழுந்தாய் என்பதிற்கு பதில் நீயே நிஜம் என்று மாற்றப்பட்டது.[4][5]

இசை

திரைப்பட பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் ஜான் பீட்டர் அமைத்தார். இந்த இசைப்பதிவில் முத்து விஜயன், காதல்மதி, சண்முகசீலான், ஜோதிபாசு ஆகியோரால் எழுதப்பட்ட ஆறு பாடல்கள் உள்ளன.[6][7]

எண் பாடல் பாடகர் (கள்) காலம்
1 "நீயே நிஜம்" பல்ராம் 4:58
2 "டேஞ்சரஸ்" பாப் ஷாலினி 4:30
3 "நான் தேடிய" அனுபமா, பிரியா 5:08
4 "என் உயிரில்" கார்த்திக், பிரியா 5:48
5 "ராஜாதி ராஜா" சுனிதா 5:19
6 "பெண்ணல்ல தேவதை" ஹரிஷ் ராகவேந்திரா 6:03

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நீயே_நிஜம்&oldid=34919" இருந்து மீள்விக்கப்பட்டது