செஞ்சிட்டாளே என் காதல
செஞ்சிட்டாளே என் காதல | |
---|---|
இயக்கம் | எழில்துரை |
தயாரிப்பு | எஸ். பாலசுப்பிரமணியம் |
இசை | எப். ராஜ் பரத் |
நடிப்பு | எழில்துரை மதுமிலா அபிநயா |
ஒளிப்பதிவு | எம். மணீஷ் |
படத்தொகுப்பு | லாரன்ஸ் கிஷோர் |
கலையகம் | எஸ்.பி.என்டர்டெயின்மெணெட் |
வெளியீடு | 7 ஏப்ரல் 2017 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
செஞ்சிட்டாளே என் காதல (Senjittale En Kadhala) என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை எழில்துரை எழுதி இயக்கியுள்ளார். மேலும் இபடத்தில் இவர் முதன்பைப் பாத்திரத்தை ஏற்று நடிக்க இவருக்கு ஜோடியாக மதுமிலா நடித்துள்ளார். மேலும் அபிநயா, மைம் கோபி உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பானது 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கி 7 ஏப்ரல் 2017 அன்று வெளியானது.[1]
நடிகர்கள்
- எழில்துரை வீராவாக
- மதுமிலா அனுஷ்காவாக
- அபிநயா சோனாவாக
- அர்ஜுனன்
- 'கயல்' வின்சென்ட்
- வனிதா அரிகரன்
- திவ்யா
- ரமா வீராவின் தாயாக
- அஜய் ரத்னம் வீராவின் தந்தையாக
- மைம் கோபி தாமோதரனாக
- மகாநதி சங்கர்
தயாரிப்பு
ஏறக்குறைய ஐம்பது குறும்படங்களில் பணியாற்றிய பின்னர் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்க எழில்துரை முடிவு செய்தார். 2016 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தயாரிப்பு பணி தொடங்கியது, இந்த படம் குறித்து துவக்கத்தில் ஊடகங்களில் தவறான செய்தி வெளியானது. அதாவது இது சென்னையில் ஒரு இளம் தொழில்முறை கொலையாளியால் செய்யபட்ட கொலையை அடிப்படையாகக் கொண்டது என்பதாகும். இந்தக் கூற்றுக்களை மறுத்த எழில் இது ஒரு காதல் நகைச்சுவைத் திரைப்படம் என்றார். இப்படத்தில் இவருடன் இணைந்து நடிகைகள் மதுமிலா அபிநயா ஆகியோர் பணியாற்றினர்.[2] படத்தின் அசல் தமிழ் பதிப்பு முடிந்தவுடன் 100% பிரேக் அப் என இந்த படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[3] தயாரிப்பாளர்கள் ஆரம்பத்தில் படத்தை காதலர் தினத்தை ஒட்டி வெளியிட இலக்கு வைத்தனர். ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டு ஏப்ரலில் வெளியிடப்பட்டது.[4]
இசை
இப்படத்திற்கான இசையை ராஜ் பாரத் அமைத்தார். அதே நேரத்தில் படத்தின் இசை வெளியீட்டு உரிமையை வி. எம். எஸ் மியூசிக் ரெக்கார்ட்ஸ் வாங்கியது. இந்த படத்தின் இசை 31 சனவரி 2017 அன்று வெளியிடப்பட்டது. இதில் ஏழு பாடல்கள் இடம்பெற்றன.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "சிலக்கிடும்" | அரித்தியா சுதன், நிகில் மேத்யூ | 4:05 | |||||||
2. | "கண்ணம்மா" | சிறீகாந்த் அகிகரன் | 4:08 | |||||||
3. | "பைண்டிங் ஆசை பையன்" | எல். ஆர். ஈஸ்வரி, கங்கை அமரன், சக்தி, நின்சி வின்சென்ட் | 3:42 | |||||||
4. | "என் வாழ்க்கை" | ரோகித் சிறீதர் | 3:57 | |||||||
5. | "பிளே கேள்" | ஃபெம்ஸி நிக்கி ஸீ ஜி, ஆர். பி. ஜெனிபர் | 2:22 | |||||||
6. | "இதுவரை" | வைஷ்ணவி சத்தியமூரத்தி | 1:53 | |||||||
7. | "பைண்டிங் ஆசைப் பையன் - நீட்டிக்கப்பபட்ட பதிப்பு" | எல். ஆர். ஈஸ்வரி, கங்கை அமரன், சக்தி, நின்சி வின்சன்ட் | 4:36 |
வெளியீடு
இந்த படம் 7 ஏப்ரல் 2017 அன்று தமிழகம் முழுவதும் மணிரத்னத்தின் காற்று வெளியிடை படம் வெளியான சமயத்தில் வெளியானது.
குறிப்புகள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2017-04-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170407170358/http://www.sify.com/movies/friday-fury-april-7-news-tamil-rehh04eeihijd.html.
- ↑ http://www.newindianexpress.com/entertainment/tamil/2016/aug/31/Senjitale...not-based-on-the-techies-murder-1514599.html
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/previews/premalo-padithe-100-per-cent-break-up/articleshow/57665650.cms
- ↑ http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/apr/05/its-not-ideal-to-release-my-film-alongside-kaatru-veliyidai-1590337.html