மதுமிலா
Jump to navigation
Jump to search
மதுமிலா | |
---|---|
பிறப்பு | இலங்கை, யாழ்ப்பாணம் |
மற்ற பெயர்கள் | மதுமிலா, இலட்சுமி |
பணி | நடிகை, தொலைக்காட்சி நிகழ்சித் தொகுப்பாளர்,வடிவழகி |
செயற்பாட்டுக் காலம் | 2012–தற்போது வரை |
வலைத்தளம் | |
https://www.instagram.com/officialmathumila/ |
மதுமிலா (Madhumila, பிறப்பு 23 மே 1988), என்பவர் இலங்கையில் பிறந்த தமிழ் நடிகையும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும், வடிவழகியுமாவார். இவர் 2012-இல் மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்சியில் தொகுப்பாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் நடிகையாக அறிமுகமானார். அது இவருக்கு நிறைய புகழைப் பெற்றுத்தந்தது.[1][2] பூஜை, ரோமியோ ஜூலியட், மாப்ள சிங்கம் போன்ற சில பிரபலமான படங்களிலும் இவர் தோன்றியுள்ளார்.
ஆபிஸ் தொடரில் இலட்சுமி என்ற பாத்திரத்தில் நடித்தற்காக 2014ஆம் ஆண்டு மதுமிலாவுக்கு விஜய் தொலைக்காட்சி விருதும் வழங்கப்பட்டது.[3]
தனிப்பட்ட வாழ்க்கை
2017-இல் திருமணம் செய்து கொண்ட மதுமிலா, கனடாவில் தன் கணவருடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 20 ஏப்ரல் 2020-இல் குழந்தை பிறந்தது.
திரைப்படவியல்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2014 | பூஜை | செல்வி | |
2015 | ரோமியோ ஜூலியட் | பிரியா | |
2016 | மாப்ள சிங்கம் | வினோதினி | [4] |
2017 | செஞ்சிட்டாளே என் காதல | அனுஷ்கா | [5] |
2017 | சங்கிலி புங்கிலி கதவத் தொற | சந்தியா | |
2018 | நெஞ்சமெல்லாம் காதல் | சரண்யா |
ஆண்டு | நிகழ்ச்சி | பங்கு | குறிப்புகள் |
---|---|---|---|
2012 | மக்கள் தொலைக்காட்சி | அவராகவே | |
2013-2014 | ஆபிஸ் | லட்சுமி | பிடித்த புதுமுகத்துக்கான விஜய் தொலைக்காட்சி விருதுகள் |
2013-2014 | தாயுமானவன் | சுபா | |
2013-2014 | அக்னி பறவை | அம்மு | |
2015–2016 | கிச்சன் சூப்பர் ஸ்டார் (பருவம் 4) | அவராகவே | |
2016-2016 | அச்சம் தவிர் | அவராகவே | |
2016-2017 | விண்ணைத்தாண்டி வருவாயா | அபிராமி (அபி) | [6] |
2020 | ஆண்மை (யூடியூப் குறும்படம்) | விஜி |
குறிப்புகள்
- ↑ "'ஆபிஸ்' மதுமிலாவா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்!".
- ↑ "Vijay Television awards launched". Times of India. 26 May 2014. பார்க்கப்பட்ட நாள் 1 July 2020.
- ↑ "Vijay Television Awards Favorite Find".
- ↑ Menon, Vishal (12 March 2016). "Mapla Singam: A flat comedy with serious ambitions". The Hindu. https://www.thehindu.com/features/cinema/cinema-reviews/mapla-singam-review-a-flat-comedy-with-serious-ambitions/article8346414.ece. பார்த்த நாள்: 25 August 2020.
- ↑ https://www.deccanchronicle.com/entertainment/movie-reviews/080417/senjittale-en-kaadhala-review-inconsistency-in-presentation-and-lacks-the-fizz.html
- ↑ https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/Vinnai-Thandi-Varuyava-new-serial-on-Vijay/articleshow/54604051.cms