மைம் கோபி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மைம் கோபி
Mime Gopi.png
பிறப்பு29 சூன் 1975 (1975-06-29) (அகவை 49)
பணிநடிகர்

மைம் கோபி (Mime Gopi) ஒரு இந்திய மேடை நாடகரும், திரைப்பட நடிகருமாவார். இவர் மெட்ராஸ் (2014), கதகளி (2016), கபாலி (2016) உள்ளிட்ட தமிழ் படங்களில் தோன்றியுள்ளார்.[1][2]

தொழில்

மைம் கோபி ஏற்கனவே சரவணன் மீனாட்சி பகுதி 1இல் மிர்ச்சி சரவணனுடன் சேர்ந்து நடித்திருந்தார். திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு, இவர் சென்னையில் புகழ்பெற்ற மைம் நடிகராக இருந்தார். மேலும் ஜி மைம் ஸ்டுடியோ என்ற அரங்கத்தை நடத்தி வந்தார். இது கலை வடிவத்தை வெளிப்படுத்தியது. இவரது பாத்திரத்தில், சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளுடன் நெருக்கமாகப் பணியாற்றினார். ஒவ்வொரு பிறந்தநாளையும் பண்டிகைகளையும் இவர் தமிழகம் முழுவதும் தொண்டு வேலைகளை செய்து கொண்டாடுகிறார். மத அமைப்புகளின் உள்ளூர் திருவிழாக்களுக்கும் இவர் உதவுகிறார். மேலும் இவர் வரவிருக்கும் நடிகர்களுக்கு உத்வேகமாக இருக்கிறார்.[3]

திரைப்படங்கள்

1994 ஆம் ஆண்டில் அரங்கத்தை அமைத்த இவர், சென்னை முழுவதும் கலையை விரிவுபடுத்துவதற்காக பணியாற்றினார்.[4] மெட்ராஸ் (2014) என்ற தமிழ் திரைப்படத்தில் முரட்டுத்தனமாக தோன்றிய பின்னர் ஒரு திரைப்பட நடிகராக தனது முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டார். பின்னர் இவர் மாரி (2015) மற்றும் கதகளி (2016) போன்ற படங்களில் நாயகனுக்கு எதிரியாக தோன்றினார். 2020இல் வெளியான காவல்துறை உங்கள் நண்பன் படத்திலும் ஒரு பிரதான வேடத்தில் நடித்திருந்தார். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா "இந்த திரைப்படம் யதார்த்தமான தொடர்பைக் கொண்ட ஒரு கதையைக் கொண்டுள்ளது" என்றும் "அதே நேரத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் ஆர். டி. யால் ஈர்க்கக்கூடிய கூறுகளுடன் மிகச் சிறப்பாக வழங்கப்பட்டுள்ளது " எனக் கூறியிருந்தது. படத்தின் தயாரிப்பாளர் கூறினார்: "கூட்டத்தை ஈர்க்க அனைத்து கூறுகளும் இதில் உள்ளன என்று நான் நம்புகிறேன், திட்டத்தை இழக்க விரும்பவில்லை ".[5][6]

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மைம்_கோபி&oldid=22046" இருந்து மீள்விக்கப்பட்டது