நதிக்கரையினிலே
நதிக்கரையினிலே | |
---|---|
இயக்கம் | பொன்வண்ணன் |
தயாரிப்பு | இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் |
கதை | பொன்வண்ணன் |
இசை | சிற்பி |
நடிப்பு | சுவலட்சுமி ராசன் பி. தேவ் ராம்ஜி |
ஒளிப்பதிவு | கே. வி. மணி |
படத்தொகுப்பு | கே. பழனிவேல் |
கலையகம் | இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் |
விநியோகம் | விஸ்வா சினிமா |
வெளியீடு | 28 நவம்பர் 2003[1] |
ஓட்டம் | 104 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நதிக்கரையினிலே (Nadhi Karaiyinile) என்பது 2003ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். பொன்வண்ணன் எழுதி இயக்கிய இப்படமானது. துவக்கத்தில் சர்வதேச திரைப்பட விழாக்களில் ஜமீலா என்ற பெயரில் வெளியானது. இப்படத்தில் சுவலட்சுமி, ராசன் பி. தேவ், ராம்ஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கான இசையை சிற்பி மேற்கொண்டார். பல தாமதங்களுக்குப் பிறகு, 2003 நவம்பரில் படம் நேர்மறையான விமர்சனங்களுடன் வெளியானது.
நடிகர்கள்
- சுவலட்சுமி ஜமீலாவாக
- ராசன் பி. தேவ் முகமது கானாக
- ராம்ஜி நசீராக
- கொச்சி ஹனீஃபா
- அஜய் ரத்னம்
- சாந்தி வில்லியம்ஸ்
- ஆர். சி. சக்தி
தயாரிப்பு
பொன்னண்ணன் இரண்டாவதாக இயக்கிய ஜமீலா (2003) படத்தில், சுவலட்சுமி, ராசன் பி. தேவ், ராம்ஜி ஆகியோர் நடித்தனர். கீழ்ப்படியக்கூடிய ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழிக்கும் இரண்டு ஆண்களுக்கு இடையிலான தன்முனைப்பு மோதலின் கதையை இப்படம் கையாண்டுள்ளது. எழுத்தாளர் சாரா அபூபாக்கரின் புதினத்தால் ஈர்க்கபட்ட பொன்வண்ணன் திரைக்கதை உரிமையை வாங்கினார். படத்திற்கு நிதியைப் பெறுவதற்காக தனது திரைக்கதையை இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்திற்கு சமர்ப்பித்தார். நிறுவனமும் நிதியளிக்க ஒப்புக்கொண்டது. ஜமீலா புதுச்சேரியில் பதினேழு நாட்களில் 35 லட்சம் ரூபாய் செலவில் படமாக்கபட்டது. [2]
வெளியீடு
இந்தத் திரைப்படம் திரையிடல்களில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மேலும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது, இது 2002 ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி அல்லாத பிரிவில் திரையிட தேர்ந்தெடுக்க தூண்டோகோலாக ஆனது.[3] 2001 ஆம் ஆண்டில் திரைப்படம் தணிக்கை செய்யப்பட்ட போதிலும், இது "முஸ்லீம் படம்" என்று வகைப்படுத்தப்படுவதை விநியோகஸ்தர் விஸ்வாஸ் சுந்தர் அதை விரும்பாததால், 2003 நவம்பரில் இந்தியா முழுவதும் நதிக் கரையினிலே என்ற பெயரில் திரையரங்குகளில் வெளியிப்பபட்டது. [2] இந்த படம் திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெறவில்லை. என்றாலும் தமிழக அரசு திரைப்பட விருதுகள் மூன்றை இது பெண்களை சிறப்பாக சித்தரிக்கும் திரைப்படத்திற்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள் பெற்றது.[4] இது திரைப்படத் துறையை விட்டு விலகுவதற்கு முன்பு சுவலட்சுமி பணிபுரிந்த கடைசி திரைப்படமாகும்.
குறிப்புகள்
- ↑ Dhananjayan 2014, ப. 428.
- ↑ 2.0 2.1 Dhananjayan 2014.
- ↑ "Tamil film in Chinese fest". The Hindu. 2002-08-23. Archived from the original on 2003-04-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-19.
- ↑ "Tamil Nadu announces film awards for three years". IndiaGlitz. 2004-10-01. Archived from the original on 2004-10-24. பார்க்கப்பட்ட நாள் 2015-11-19.
நூலியல்
- Dhananjayan, G. (2014). Pride of Tamil Cinema: 1931 to 2013. Blue Ocean Publishers.[தொடர்பிழந்த இணைப்பு]