மாற்றான் (திரைப்படம்)
மாற்றான் (Maattrraan) கே. வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து அக்டோபர் 12, 2012ல் வெளிவந்த திரைப்படமாகும். இதில் சூரியா ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்துள்ளார்[2]. இதில் நடிப்பதாக இருந்த பிரகாஷ்ராஜ் விலக்கப்பட்டு அவருக்கு பதில் சச்சின் ஹெடேக்கர் நடித்தார். இவர் தெய்வத்திருமகன் படத்தில் அமலா பாலுக்கு தந்தையாகவும் யாவரும் நலம் என்ற படத்தில் மருத்துவர் பாலுவாகவும் நடித்துள்ளார்[3]
மாற்றான் [1] | |
---|---|
இயக்கம் | கே. வி. ஆனந்த் |
தயாரிப்பு |
|
கதை | கே. வி. ஆனந்த் சுபா |
இசை | ஹாரிஸ் ஜெயராஜ் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | எசு. சௌந்தர்ராஜன் |
படத்தொகுப்பு | ஆண்டனி |
கலையகம் | ஏஜிஎசு எண்டெர்டெயின்மெண்ட் |
வெளியீடு | 12 அக்டோபர் 2012 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹60 கோடி (US$7.5 மில்லியன்) |
மொத்த வருவாய் | ₹100 கோடி (US$13 மில்லியன்) |
இதன் தெலுங்கு மொழிபெயர்ப்பு டூப்ளிகேட் என்ற பெயரில் வருவதாக இருந்தது. அப்பெயர் தெலுங்கு உரிமையை வாங்கிய தயாரிப்பாளர் பெல்லம்கொண்ட சுரேசுக்கு பிடிக்காததால் பிரதர்சு என மாற்றப்பட்டது [4] இதன் தெலுங்கு பதிப்பும் அக்டோபர் 12, 2012 அன்றே வெளியானது. தெலுங்கில் சூரியாவின் பல படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டிருத்தாலும் இதிலேயே முதல் முறையாக குரல் கொடுத்தார்.
கதை சுருக்கம்
ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் அகிலனும் விமலனும் (சூரியா). இவர்களுக்கு மற்ற உறுப்புகள் தனித்தனி என்றாலும் இதயம் மட்டும் ஒன்று. விமலன் மென்மையானவனாகவும் ௮கிலன் முரடனாகவும் உள்ளார்கள். விமலனை அஞ்சலி (காஜல் அகர்வால்) காதலிக்கிறார். விமலன் சில தன் தந்தையின் தவறுகளை உக்வேனிய நாட்டு பெண் மூலம் கண்டுபிடித்து விடுகிறார். அவர் இதை பற்றி தன் தந்தையிடம் கேட்க அவரைக் கொன்றுவிடுகிறார்கள். இதயம் ௮கிலனுக்கு பொருத்தப்படுகிறது. பின்பு அகிலன் தன்னை மாற்றிக் கொள்ள தந்தையுடன் அவரது கம்பெனிக்கு செல்கிறார். இப்படியே சில நாட்கள் சென்றது. ஒரு நாள் விமலை கொன்ற பீகார் காரனை அகிலன் காண்கிறார் அவனை திரத்தி பிடிக்க முயலும் போது அவன் புகையிரதத்தில் அடிபட்டு இறக்கிறான் அப்போது அவனின் கையடக்க தொலைபேசி மட்டும் அகிலனுக்கு கிடைக்கிறது அதை எடுத்து செல்லும் வேளையில் அதற்கு தன் கம்பெனியில் வேலை செய்யும் ஒருவர் அழைப்பு விடுப்பதை அறிகிறார். பின்பு அது தன் தந்தையின் பிஏ என்பதை அறிகிறார். அவனை பிடிக்கும் வேளையில் உணவு சுகாதார அமைச்சினால் ஒரு ரயிட் மேற்கொள்ள படுகின்றது. அது அகிலனின் தாயின் தூண்டுதலால் அகிலனின் தந்தை மேற்கொண்டது அப்போது அவர்கள் எந்த குற்றமும் இங்கு இல்லை என அறிவித்தனர். அச்சமும அகிலன் சில ஆதாரங்களை காண்கிறார். அதை பற்றி அறிய உக்வேனியா செல்கிறார். அங்கு தான், உலக போட்டியில் வெற்றி பெறுவதற்கு உக்வேனிய வீரர்களுக்கு பாலில் எவரும் கண்டு பிடிக்க முடியாதவாறுஊக்க மருந்து வழங்க பட்டுள்ளது என்பதை கண்டு பிடித்தார். அதன் பின் அவ்வீரர்கள் மோசமாக நோய் வாய்பட்டு இறந்துள்ளனர் என்றும் இன்னும் சிலர் இறக்கும் தருவாயில் உள்ளதையும் அறிகிறார். அவர்களுக்கு கொடுத்த அதே பால்மாவை தன் நாட்டில் தன் தந்தை விற்பதை அறிகிறார். பின் சரியான மருந்துகளுடன் தன் நாட்டிற்கு வந்து தன் தந்தையை கொன்று சர்வதேச விருதுகளை பெற்றார். இறுதியாக அஞ்சலியை திருமணம் செய்கிறார்
உசாத்துணைகள்
- ↑ Moviebuzz (2010). "மாற்றான்-". cineikons.com.com. http://www.cineikons.com/maatraan/. பார்த்த நாள்: 10 September 2011.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-07-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120717011258/http://cinema.dinakaran.com/cinema/KollywoodDetail.aspx?id=7099&id1=3.
- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/article/70412.html
- ↑ "மாற்றான் தெலுங்கில் பிரதர்சு" இம் மூலத்தில் இருந்து 2012-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120924010746/http://www.telugunow.com/movie-news/surya-maatran-movie-as-brothers-in-telugu/.