காவல் நிலையம் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
காவல் நிலையம்
இயக்கம்செந்தில்நாதன்
தயாரிப்புஎப். சி. விஜய்குமார்
கதைசெந்தில்நாதன்
எஸ். கஜேந்திரகுமார் (உரையாடல்)
இசைசங்கர் கணேஷ்
நடிப்பு
ஒளிப்பதிவுஎம். கேசவன்
படத்தொகுப்புஜே. இளங்கோ
கலையகம்விஜயலட்சுமி பிலிம்ஸ்
விநியோகம்விஜயலட்சுமி பிலிம்ஸ்
வெளியீடுமே 11, 1991 (1991-05-11)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காவல் நிலையம் (Kaaval Nilayam) என்பது 1991 ஆண்டு வெளியான தமிழ் குற்றவியல் திரைப்படம் ஆகும். செந்தில்நாதன் இயக்கிய இப்படத்தில் சரத்குமார், ஆனந்தராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எஃப். சி. விஜயகுமார் தயாரித்த இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்துளார். படமானது 11 மே 1991 இல் வெளியானது.[1][2]

கதை

ராஜா ( ஆனந்தராஜ் ), ஒரு ரவுடி, காவல் அதிகாரிகளிடமிருந்து தப்பிக்கிறான், அவன் ஒரு விலைமாதுவுடன் தங்குகிறான். நேர்மையான காவல் அதிகாரியான விஜய் ( சரத்குமார் ) புதிய பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார். விஜய் தனது மனைவி ஆர்த்தி ( கௌதமி ) மற்றும் அவரது மகள் சௌமியாவுடன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார். விரைவில், ராஜா விஜய்யின் பாதையில் குறுக்கிடுகிறான்.

கடந்த காலத்தில் ராஜாவும் விஜயும் நண்பர்களாக இருந்தவர்கள். ராஜா, விஜய், ஆர்த்தி ஆகியோர் காவல் அதிகாரிகளாக ஆவதற்கு கடுமையான பயிற்சியில் ஈடுபட்டனர். ராஜா ஒரு அனாதை, விஜய் ஒரு காவல் துறை குடும்பத்தைச் சேர்ந்தவன். நேர்மையான காவல்துறை அதிகாரி ரவி ( ஜெய்சங்கர் ), விஜய்யின் அண்ணன். ஊழல் அரசியல்வாதி ஆண்டவருடன் ( எம். என். நம்பியார் ) மோதுகிறார். இதனால் அவர் ஆண்டவரால் கொல்லப்பட்டுகிறார். விஜயும், ராஜாவும் ஆண்டவருக்கு எதிராக போராட வெவ்வேறு வழிகளை தேர்ந்தெடுக்கின்றனர்.

நடிகர்கள்

இசை

திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மேற்கொண்டார். 1991 இல் வெளியான இந்த படத்தின் இசைப்பதிவில், வாலி, முத்துலிங்கம், பிறைசூடன், சங்கர் கணேஷ் ஆகியோரால் எழுதப்பட்ட நான்கு பாடல்கள் உள்ளன.[3]

எண். பாடல் பாடகர்(கள்) காலம்
1 'கன்யமா' ஜனகராஜ் 4:45
2 'மாமன் வேட்டி' மனோ 5:35
3 'ஒன்று இரண்டு மூன்று' மனோ, சித்ரா 5:29
4 'சிங்கக்குட்டி நீய்' பி. சுசீலா, சுஜா ராதாகிருஷ்ணன் 4:32

மேற்கோள்கள்