பாத்திமா பாபு
Jump to navigation
Jump to search
பாத்திமா பாபு | |
---|---|
பிறப்பு | பாத்திமா 26 திசம்பர் 1963 புதுச்சேரி, இந்தியா |
பணி | நடிகை முன்னாள் செய்தி வாசிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1996–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | பாபு |
பிள்ளைகள் | ஆஷிக் ஷாருக் |
பாத்திமா பாபு (Fathima Babu) என்பவர் தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையும், செய்தி வாசிப்பாளரும் ஆவார். இவர் பாபு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
தூர்தர்சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சியில் ஆகியவற்றில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். [1][2] மின்னலே, திருத்தனி, பத்ரி போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களில் குணச்சித்திரக் கதாப்பாத்திரத்தில் நடித்தவர், தாலியா தகரமா என்ற நகைச்சுவை தொலைக்காட்சி தொடரை இயக்க திட்டமிட்டிருந்தார். [3]
இவர் முன்னாள் முதல்வர் செயலலிதா அ.தி.மு.கவின் தலைமையிடத்தில் இருந்தபோது அக்கட்சியில் இணைந்தார். இவருடன் செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமியும் இணைந்தார். இவர்களை அதிமுகவின் தலைமைப் பேச்சாளர்களாக 2013 இல் செயலலிதா நியமித்திருந்தார். [4]
மேற்கோள்கள்
- ↑ Dinamalar (19 October 2015). "செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு மீது நடவடிக்கை? - Is action take against Fathima babu". தினமலர் - சினிமா. https://cinema.dinamalar.com/tamil-tv-serials/38781/Chinna-thirai-Television-News/Is-action-take-against-Fathima-babu.htm.
- ↑ "ஸ்டாலின், பாத்திமாபாபு தொடர்பாக பல்லாண்டுகளாகப் புகைந்து கொண்டிருந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!". Dinamani. https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2018/apr/26/ஸ்டாலின்-பாத்திமாபாபு-தொடர்பாக-பல்லாண்டுகளாகப்-புகைந்து-கொண்டிருந்த-வதந்திகளுக்கு-முற்றுப்புள்ளி-2908047.html.
- ↑ Dinamalar (5 January 2016). "சீரியல் இயக்குனராகிறார் பாத்திமா பாபு - Fathimababu turn as serial director". தினமலர் - சினிமா. https://cinema.dinamalar.com/tamil-tv-serials/41702/Chinna-thirai-Television-News/Fathimababu-turn-as-serial-director.htm.
- ↑ "செங்குட்டுவன், நிர்மலா பெரியசாமி, பாத்திமா பாபு அதிமுகவில் இணைந்தனர்". இந்து தமிழ் திசை. https://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/article5284241.ece.